டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒரு கிராமம், ஒரு டிராக்டர். 15 பேர்.. விவசாயிகளின் மாஸ்டர் பிளான்..என்ன செய்யப்போகிறது மத்திய அரசு?

Google Oneindia Tamil News

டெல்லி: விவசாயிகள் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையிலான புதிய திட்டத்தை விவசாய சங்க தலைவர் ராகேஷ் டிக்கைட் அறிவித்துள்ளார்.

விவசாய சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கப்பட்ட இந்தப் போராட்டம், 100 நாட்களைக் கடந்தும் தொடர்கிறது. இச்சட்டங்கள் ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என்பதில் விவசாயிகள் திட்டவட்டமாக உள்ளனர்.

வங்கிகள் வரும் 15, 16ம் தேதி ஸ்டிரைக்.. 4 நாட்கள் வங்கிகள் இயங்காது! வங்கிகள் வரும் 15, 16ம் தேதி ஸ்டிரைக்.. 4 நாட்கள் வங்கிகள் இயங்காது!

இருப்பினும், விரைவில் அறுவடைக் காலம் தொடங்கவுள்ளதால், போராட்டம் என்னவாகும் என்ற கேள்வி நிலவியது. இந்நிலையில், அடுத்தகட்டமாக விவாசியகளின் போராட்டத்தை எவ்வாறு எடுத்துச் செல்வது என்பது குறித்த திட்டத்தை விவசாயச் சங்க தலைவர் ராகேஷ் டிக்கைட் அறிவித்துள்ளார்.

மாஸ்டர் பிளான்

மாஸ்டர் பிளான்

இது குறித்து அவர் கூறுகையில், "ஒவ்வொரு கிராமத்திலிருந்தும், 15 நபர்கள் போராட்ட களத்தில் இருக்க வேண்டும். மற்றவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பி வழக்கமான அறுவடை பணிகளை மேற்கொள்ளலாம். 10 நாட்கள் கழித்து, மீண்டும் போராட்ட களத்திற்குத் திரும்பி, இங்குள்ள விவசாயிகளை அறுவடைக்கு அனுப்ப வேண்டும். ஒரு கிராமம், ஒரு டிராக்டர், 15 பேர், 10 நாட்கள். இதுதான் நம் போராட்ட மந்திரம்" என்றார்.

செயற்கை தட்டுப்பாடு

செயற்கை தட்டுப்பாடு

இந்த மந்திரத்தை நாம் முறையாகக் கடைப்பிடித்தால் ஆண்டுக் கணக்கில் கூட நம்மால் போராட்டத்தைத் தொடர முடியும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த விவசாய சட்டங்கள் அமல்படுத்தப்பட்டால், குடோன்களில் தானியங்கள் பூட்டி வைக்கப்படும். செயற்கையான முறையில் உருவாக்கப்படும் தட்டுப்பாடு காரணமாக வர்த்தகர்களும் பெரு நிறுவனங்களும் உணவு தானியங்களின் விலையை தீர்மானிக்கும் ஆபத்தான நிலை உருவாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

குறைந்தபட்ச ஆதரவு விலை

குறைந்தபட்ச ஆதரவு விலை

அதேபோல விவசாய பயிர்களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யச் சட்டத்தை இயற்ற வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். குறைந்தபட்ச ஆதரவு விலை என்பது எப்போதும் தொடரும் என நாடாளுமன்றத்திலேயே பிரதமர் மோடி பேசியிருந்தார். இருப்பினும், குறைந்தபட்ச ஆதரவு விலைக்குச் சட்ட ரீதியான பாதுக்பாப்பு வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்

போராட்டம் தொடரும்

போராட்டம் தொடரும்

முன்னதாக, கடந்த வியாழக்கிழமை ராகேஷ் டிக்கைட் மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொள்ளும் வரை நீண்ட போராட்டத்திற்கு விவசாயிகள் தயாராக இருக்க வேண்டும் என அழைப்பு விடுத்திருந்தார். இதுவரை 11 கட்ட பேச்சுவார்த்தை மத்திய அரசுக்கும் விவசாயிகளும் நடைபெற்றுள்ளன. மத்திய அரசு 18 மாதங்கள் வரை விவசாய சட்டங்களை நிறுத்தி வைக்க தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது. இருப்பினும், சட்டங்களை ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

English summary
Rakesh Tikait new formula for Delhi farmers' protest.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X