டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கட்டுமான பணிகள் முடியும் முன்னரே.. 2023 டிசம்பரில் திறக்கப்படும் அயோத்தி ராமர் கோயில்.. என்ன காரணம்

Google Oneindia Tamil News

டெல்லி: அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகள் வரும் 2025இல் முடிக்கப்படும் என்றும் இருப்பினும் அதற்கு முன்னதாகவே 2023 டிசம்பர் மாதம் முதல் மக்கள் வழிபாட்டிற்குத் திறக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் அமைந்துள்ள அயோத்தியில் ராமர் கோயிலைக் கட்ட இருந்த சட்ட ரீதியிலான சிக்கல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தான் சரியானது.

அங்கு ராமர் கோயிலைக் கட்ட ராமர் கோயில் டிரஸ்ட்டும் அமைக்கப்பட்டு, கட்டுமான பணிகள் விரைவாகத் தொடங்கப்பட்டன.

மத்திய அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. 44 பணியிடங்கள்.. நல்ல சம்பளம்.. உடனே விண்ணப்பீங்க!மத்திய அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. 44 பணியிடங்கள்.. நல்ல சம்பளம்.. உடனே விண்ணப்பீங்க!

 அயோத்தி ராமர் கோயில்

அயோத்தி ராமர் கோயில்

அயோத்தி ராமர் கோயில் கட்டுமானப் பணிகளுக்குக் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி இந்த கோயிலின் கட்டுமானப் பணிகளுக்குப் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.இந்தக் கோயில் 110 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ளது. இந்த கோயிலைக் கட்ட ரூ 1000 கோடி வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டது. இருப்பினும், இதுவரை நன்கொடைகள் மூலம் மட்டுமே கட்டுமானப் பணிகளுக்கு 3000 கோடி ரூபாய் வரை வசூலிக்கப்பட்டுள்ளதாகக் கோயில் டிரஸ்ட் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 2023ஆம் ஆண்டு

2023ஆம் ஆண்டு

இந்நிலையில், அயோத்தி ராமர் கோயில் வரும் 2023 டிசம்பர் மாதம் முதல் மக்கள் வழிபாட்டிற்குத் திறக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து கோயில் டிரஸ்டில் உள்ள ஒருவர் கூறுகையில், "தரை தளம் மற்றும் கர்ப்ப கிரகம் 2023 ஆம் ஆண்டின் இறுதிக்குள் முடியும். எனவே, அப்போது ராமரின் சிலைகள் புதிய கோவிலுக்குள் கொண்டு செல்லப்படும். அப்போது முதல் பக்தர்களை அனுமதிக்கத் திட்டமிட்டுள்ளோம்.

 கட்டுமானப் பணிகள் தொடரும்

கட்டுமானப் பணிகள் தொடரும்

மக்களைத் தரிசனத்திற்கு அனுமதிப்பதற்கும் கோயில் கட்டுமானப் பணிகளை முழுமையாக முடிப்பதற்கும் நிறையே வேறுபாடுகள் உள்ளது. சிற்பங்கள், மற்றும் கோயில் வளாகத்தின் மற்ற வேலைகள் 2025 வரை நடக்கும். இதுவரை கட்டுமானப் பணிகள் அனைத்தும் திட்டமிட்டபடியே நடந்து வருகிறது. அதில் எந்த தாமதமும் இல்லை" என்று அவர் தெரிவித்தார்.

 ராமர் கோயில்

ராமர் கோயில்

360 அடி நீளம், 235 அடி அகலத்தில் அமையவுள்ள இந்த கோயில் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து எடுத்து வரப்பட்ட கற்களின் கட்டப்படுகிறது. கட்டுமானப் பணிகளில் இரும்பு மற்றும் செங்கற்கள் பயன்படுத்தப்படவில்லை. மூன்று தளங்களைக் கொண்டிருக்கும் இந்த கோயிலில், ஐந்து மண்டபங்கள் இருக்கும். பக்தர்களுக்கான தனி மையம், அருங்காட்சியகம், ஆராய்ச்சி மையம், ஆடிட்டோரியம், கால்நடை மையம் ஆகியவற்றையும் இந்த கோயில் கொண்டிருக்கும்.

English summary
Ram temple in Ayodhya will be completed by 2025 but it will be opened to the public from December 2023. Work on the grand temple started a year ago on August 5 when Prime Minister Narendra Modi launched the temple construction
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X