ஹோம் லோன் இருக்கா? ஜாக்பாட் அறிவிப்பு! ரெப்போ விகிதம் குறைப்பு! யாருக்கெல்லாம் பலன் கிடைக்கும்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நமது நாட்டின் ரிசர்வ் வங்கி இப்போது ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 புள்ளிகள் குறைத்துள்ளது. ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவீதத்தில் இருந்து 6.25%ஆகக் குறைக்கப்பட்டுள்ள சூழலில், இதன் மூலம் சீக்கிரமே அனைத்து வங்கிகளும் தங்கள் லோன்களுக்கான வட்டி விகிதத்தைக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் மக்கள் செலுத்த வேண்டிய ஹோம் லோன் கடன்களுக்கான வட்டி விகிதமும் கணிசமாகக் குறைய உள்ளது.

ரிசர்வ் வங்கியின் கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையில் ஆர்பிஐ கூட்டம் நடைபெற்றது. அதில் வங்கிகளின் குறுகியகால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.25% குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

rbi mpc meeting home loan rbi

ரெப்போ விகிதம் குறைப்பு:

இதன் மூலம் ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவீதத்தில் இருந்து 6.25%ஆக குறைக்கப்பட்டுள்ளது. கடந்த 2020ம் ஆண்டு கொரோனா காலகட்டத்திற்குப் பிறகு ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். கொரோனாவுக்கு பிறகு ரெப்போ விகிதம் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வந்த சூழலில், கடந்த 2023ம் ஆண்டு ரெப்போ வட்டி விகிதம் 6.5%ஆக உயர்த்தப்பட்டது. அதன் பிறகு எந்தவொரு மாற்றமும் இல்லாமல் அதே வட்டி விகிதத்தில் தொடர்ந்தது. இந்தச் சூழலில் தான் இப்போது ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.

வீட்டுக் கடன்கள் உட்பட எல்லா வகையிலான வங்கி லோன்களின் வட்டி விகிதங்களை நிர்ணயிப்பதில் இந்த ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதம் முக்கிய பங்கு வகிக்கிறது.. இந்த ரெப்போ விகிதத்தைப் பொறுத்தே கடன்களுக்கான வட்டி விகிதங்கள் தீர்மானிக்கப்படும் என்பதால் இதை இஎம்ஐ போட்டு வீடு உள்ளிட்ட பொருட்களை வாங்கியவர்கள் ஆர்வமாக எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.

வட்டி குறையும்:

ரிசர்வ் வங்கி தனது ரெப்போ விகிதத்தை அதிகரித்தால் மக்களுக்கு வங்கிகள் தரும் கடன்களின் வட்டி விகிதங்களும் உயர்த்தப்படும். இதனால் வீட்டுக் கடன் உள்ளிட்ட லோன்களுக்கான வட்டி விகிதம் உயரும். மக்கள் செலுத்த வேண்டிய இஎம்ஐ தொகையும் அதிகரிக்கும். மறுபுறம் ரெப்போ விகிதத்தைக் குறைக்கும் போது, வங்கிகள் தங்கள் கடன் விகிதங்களைக் குறைக்கிறது. இதன் மூலம் மிடில் கிளாஸ் மக்கள் கடன்களுக்குக் கட்ட வேண்டிய தொகையும் குறையும்.. இது தனி நபர்களுக்குப் பெரியளவில் பலன் அளிப்பதாக இருக்கும்.


யாருக்கெல்லாம் குறையும்:

அதாவது ஹோம் லோன் எடுக்கும் போது இரண்டு வகையான வட்டி ஆப்ஷன் இருக்கும். ஒன்று நிலையான வட்டி (fixed interest rate).. மற்றொன்று மாற்றத்திற்கு உட்படும் வட்டி (floating interest rate). நிலையான வட்டியில் நீங்கள் லோன் வாங்கிய மாதம் முதல் கடைசி மாதம் முதல் அதே வட்டியைத் தான் கட்ட வேண்டும். ரெப்போ உள்ளிட்ட எந்தவொரு விஷயமும் அதைப் பாதிக்காது. அதேநேரம் ஃப்ளோட்டிங் வட்டி விகிதம் என்பது ரெப்போ உள்ளிட்ட சந்தை நிலையைப் பொறுத்து மாறிக்கொண்டே இருக்கும்.

இதில் ஃப்ளோட்டிங் வட்டி என்பது நிலையான வட்டியைக் காட்டிலும் சற்றுக் குறைவாக இருக்கும். இதனால் பெரும்பாலான மக்கள் ஃப்ளோட்டிங் வட்டி விகிதத்தைத் தான் எடுப்பார்கள். இப்போது ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தைக் குறைத்துள்ள சூழலில், ஃப்ளோட்டிங் வட்டி விகிதத்தில் வட்டி வாங்கியோரின் கடனும் இஎம்ஐ தொகையும் கணிசமாகக் குறையும்.

எப்போது குறையும்:

ரிசர்வ் வங்கி இப்போது வட்டி விகிதத்தைக் குறைத்துள்ள சூழலில், சீக்கிரம் மற்ற வங்கிகளும் வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டிய கடன்களுக்கான வட்டியையும் குறைக்க உள்ளன. வரும் நாட்களில் எஸ்பிஐ, ஹெச்டிஎஃப்சி உள்ளிட்ட ஒவ்வொரு வங்கியும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+