டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திமுக முக்கியமான கட்சி.. “பாஜக பார்ப்பதற்குதான் இப்படி.. உண்மையில்?” சொல்வது நோபல் வென்ற எக்ஸ்பர்ட்!

Google Oneindia Tamil News

டெல்லி : 2024ல் நடைபெறவுள்ள லோக்சபா தேர்தல் முழுமையாக பாஜகவுக்குச் சாதகமானதாக இருக்காது என்றும் மாநிலக் கட்சிகள் முக்கியமான பங்கு வகிக்கும் என்றும் நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணரான அமர்த்தியா சென் தெரிவித்துள்ளார்.

90 வயதான பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென், இந்தியாவில் நிலவி வரும் அரசியல் சூழல் பற்றியும், 2024 நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் பற்றியும் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 15 மாதங்கள் உள்ள நிலையில், பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டியதன் அவசியம் பற்றிப் பேசியுள்ளார்.

ஒரே நாடு ஒரே தேர்தல்.. அடம்பிடிக்கும் பாஜக! முதல் ஆளாய் ஆதரவு கொடுத்த ’அண்ணா’ திமுக! சாத்தியமா? ஒரே நாடு ஒரே தேர்தல்.. அடம்பிடிக்கும் பாஜக! முதல் ஆளாய் ஆதரவு கொடுத்த ’அண்ணா’ திமுக! சாத்தியமா?

திமுக மிக முக்கியமான கட்சி

திமுக மிக முக்கியமான கட்சி

பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில் பேசியுள்ள அமர்த்தியா சென், "வரும் நாடாளுமன்ற தேர்தலில் மாநிலக் கட்சிகளின் பங்கு மிக முக்கியமானதாக இருக்கும் எனக் கருதுகிறேன். இதில் எந்தச் சந்தேகமும் இல்லை. 2024 தேர்தலைப் பொறுத்தவரை திமுக மிக முக்கியமான கட்சி. சமாஜ்வாதி கட்சியும் முக்கியமானது, ஆனால் அது எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் எனத் தெரியவில்லை.

அடுத்த முதல்வராகும் தகுதி

அடுத்த முதல்வராகும் தகுதி

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் மிக முக்கியமான பங்கு வகிக்கும். மம்தா பானர்ஜிக்கு நாட்டின் அடுத்த பிரதமராக வருவதற்கு தகுதி உள்ளது. ஆனால், பாஜகவுக்கு எதிரான சக்திகளை ஒன்றிணைத்து இந்தியாவில் பிரிவினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தலைமையை மம்தாவால் இன்னும் நிகழ்த்திக் காட்ட முடியவில்லை.

இந்தி பேசும் இந்தியா

இந்தி பேசும் இந்தியா

இந்தியாவின் நோக்கத்தை, பார்வையை பாஜக முழுவதுமாக குறைத்துவிட்டது. இந்தியா என்றால் 'இந்து-இந்தியா' மற்றும் 'இந்தி பேசும் இந்தியா' எனும் அளவுக்கு இந்தியாவை சுருக்கிவிட்டது. பாஜகவுக்கு மாற்று இல்லை என்றால் அது இன்னும் மோசமானதாக மாறக்கூடும். அந்தக் கட்சிக்கு மாற்றாக வேறு எந்த ஒரு கட்சியும் இல்லை என்ற முடிவுக்கு வருவது தவறு என்று நான் நினைக்கிறேன்.

பாஜக பார்ப்பதற்குத்தான் இப்படி

பாஜக பார்ப்பதற்குத்தான் இப்படி

பாஜக பார்ப்பதற்கு வலிமையாகவும், அதிகாரம் மிக்கதாகவும் தெரிகிறது. எனினும், அந்தக் கட்சியிடமும் பலவீனங்கள் இருக்கின்றன. பாஜக எவ்வளவு வலிமையானதாக உள்ளதோ அதே அளவுக்கு அக்கட்சிக்கு பின்னடைவான காரணிகளும் உள்ளது. பாஜகவை உண்மையாகவே எதிர்க்கும் மற்ற கட்சிகள் அதை எடுத்து விவாதிக்க முன்வர வேண்டும்.

காங்கிரஸ் பலம்

காங்கிரஸ் பலம்

2024ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெல்வதற்கான வாய்ப்புகள் குறைவாக இருக்கிறது தான். ஆனால் காங்கிரஸ் மட்டுமே அனைவருக்குமான இந்தியா என்ற நோக்கத்தை கொண்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சிக்கு இருக்கும் அகில இந்திய தொலைநோக்கு பார்வை, வேறு எந்தக் கட்சிக்கும் கிடையாது." எனத் தெரிவித்துள்ளார்.

English summary
Nobel laureate Amartya Sen, said regional parties will hold the key if the ruling BJP is to be defeated in the 2024 Lok Sabha elections.He also said DMK, TMC have the important work in 2024 parliament election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X