காவிரியில் 15 நாட்களுக்கு 9,000 கன அடி நீர் திறக்கனும்.. ஒழுங்காற்று குழு பரிந்துரை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் இன்று காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 141 ஆவது கூட்டம் காணொளி வாயிலாக நடந்தது. இதில், காவிரியில் அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 9,000 கன அடி நீர் திறக்க வேண்டும் என காவிரி ஒழுங்காற்று குழு, காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு பரிந்துரைத்துள்ளது. இதன்படி காவிரியில் நீர் திறக்கப்பட்டால் தமிழகத்திற்கு 11.66 டிஎம்சி நீர் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காவிரியில் தண்ணீர் திறக்க தொடர்ந்து கர்நாடக அரசு மறுத்து வருகிறது. தமிழகத்தில் நியாயமாக கிடைக்க வேண்டிய நீரை கொடுக்க கூட கர்நாடகா அரசு மறுத்து வருகிறது. உச்ச நீதிமன்ற உத்தரவு மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, கர்நாடக அரசு தமிழகத்திற்கு ஆண்டுதோறும் மொத்தம் 177.25 டி.எம்.சி நீர் திறந்துவிட வேண்டும்.

Karnataka release 9 000 cusecs of water into the Cauvery for 15 days - Regulatory Committee recommends

9,000 கன அடி நீர் திறக்க பரிந்துரை

ஆனால், கர்நாடக அரசோ வெறும் உபரி நீரை மட்டுமே தமிழகத்திற்கு திறந்துவிடுகிறது. காவிரி ஆணையம், காவிரி ஒழுங்காற்று ஆணையம் உத்தரவிட்டாலும் கூட கர்நாடக அரசு தண்ணீர் திறக்க மறுத்து வருகிறது. இது தொடர்பாக உரிய நீரை திறந்துவிட வலியுறுத்தி கர்நாடக அரசுக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதில் தண்ணீர் திறந்துவிடாத கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்விகளை எழுப்பி இருந்தது.

இது ஒரு புறம் இருக்க இன்று காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 141 ஆவது கூட்டம் காணொளி வாயிலாக நடந்தது. இந்த கூட்டத்தின் முடிவில், காவிரி ஒழுங்காற்று குழு காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு பரிந்துரை ஒன்றை அளித்துள்ளது. அதில், "நாளை முதல் அடுத்த 15 நாட்களுக்கு, காவிரியில் கர்நாடக அரசு வினாடிக்கு 9,000 கன அடி நீர் வீதம் திறந்து விட வேண்டும்" என காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு பரிந்துரைத்தது.

தற்போது எவ்வளவு நீர் வருகிறது?

இதன்படி காவிரியில் நீர் திறக்கப்பட்டால் தமிழகத்திற்கு 11.66 டிஎம்சி நீர் கிடைக்கும். காவிரி ஒழுங்காற்று குழுவின் இந்த பரிந்துரை குறித்து விவாதம் செய்து நாளை காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கபினி அணைக்கு இன்று காலை வினாடிக்கு 8,260 கன அடி நீர் வந்து கொண்டு இருந்தது. இதில், கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் வினாடிக்கு 11,725 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 13,000 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அதிகளவில் தண்ணீர் வருவதால், ஒகேன்னக்கலில் பாதுகாப்பு கருதி பரிசல் இயக்க இன்று 9-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு

அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்துள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கடந்த 4ஆம் தேதி முதல் வரத்தொடங்கியதால் மேட்டூர் அணையின் நீர்மட்டமும் கடகடவென உயந்து வருகிறது. அணைக்கு வரும் நீர்வரத்தை விட குறைவான நீரே குடிநீர் தேவைக்காக திறந்துவிடப்படுகிறது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர தொடங்கி இருக்கிறது.

அதாவது இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணை நீர்மட்டம் 87.41 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 13,415 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. வினாடிக்கு 2,000 கனஅடி தண்ணீர் திற்ந்துவிடப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+