காந்தி ஜெயந்தி 2021: காந்தி மகானின் கோட்பாடுகள் பல கோடி கணக்கானவர்களுக்கு வலிமை தருகிறது - மோடி
மகாத்மா காந்தியின் உன்னதக் கோட்பாடுகள் உலகளாவிய ரீதியில் பொருத்தமானவை. பல கோடி கணக்கானவர்களுக்கு வலிமை அளிக்கின்றன என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
டெல்லி: தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 153வது பிறந்த நாளை முன்னிட்டு ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். மகாத்மா காந்தியின் உன்னதக் கோட்பாடுகள் உலகளாவிய ரீதியில் பொருத்தமானவை. பல கோடி கணக்கானவர்களுக்கு வலிமை அளிப்பதாகவும் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மகாத்மா காந்தியின் 153வது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. மகாத்மா காந்தியின் சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் மகாத்மா காந்திக்கு புகழாரம் சூட்டியுள்ளார். ''மகாத்மா காந்தியின் உன்னதக் கோட்பாடுகள் உலகளாவிய ரீதியில் பொருத்தமானவை. பல கோடி கணக்கானவர்களுக்கு வலிமை அளிக்கின்றன'' என்று பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். டெல்லி முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்த நாளையொட்டி விஜய் காட்டில் பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார்.ராஜ்காட்டில் மகாத்மா காந்திக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி மகாத்மா காந்திக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள காந்தி சிலை முன்பு வைக்கப்பட்டுள்ள மகாத்மா காந்தி படத்திற்கு ஆளுநர் ஆர்.என். ரவி, முதல்வர் மு.க ஸ்டாலின் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், காந்தி பிறந்தநாளில் கதர் உடைகளை உடுத்துவோம், நெசவாளர்களை உயர்த்துவோம். தமிழகத்தில் உள்ள கதரங்காடிகள் ஆண்டு முழுவதும் 30% தள்ளுபடியில் கதர் துணிகள் விற்கப்படுகிறது. அந்நியர் ஆதிக்கத்திற்காக காந்தியடிகள் கையில் எடுத்த ஆயுதமாக கதர் இருந்தது என்றும் பதிவிட்டுள்ளார்.

மகாத்மாவின் பொன் மொழிகள்
• மகிழ்ச்சி உன் எண்ணத்தில் இருக்கிறது, உன் வார்த்தையில் இருக்கிறது. நீ செய்யும் நல்லிணக்கத்தில் இருக்கிறது.
• கண் பார்வை அற்றவன் குருடன் அல்ல. தன் குற்றம் குறையை உணராமல் எவன் இருக்கிறானோ அவனே
உண்மையான குருடன்.
• மற்றவர்களை கெட்டவர்கள் என்று சொல்வதன் மூலம் நாம் நல்லவர்களாகி விட மாட்டோம்...!
• நண்பர்களைப் பற்றி பெருமையாக நிறையப் பேசுங்கள். பிடிக்காதவர்களைப் பற்றி எந்த இடத்திலும் எதுவும் பேசாதீர்கள்.
• எல்லா விதத்திலும் ஒத்துப் போவது நட்பல்ல. கருத்து மோதல் ஏற்படும் போதிலும் அதைத் தாங்கிக் கொள்வது தான் உண்மையான நட்பு.
• அன்பு எங்கிருக்கிறதோ அங்கே கடவுள் இருக்கிறார். என் வாழ்க்கையே எனது அறிவுரை
•எங்கே அன்பு இருக்கிறதோ அங்கே வாழ்வு உயித்திருக்கிறது
•நீ என்ன செய்கிறாய் என்பது முக்கியமல்ல; நீ செய்கிறாய் என்பதுதான் முக்கியம்.
•அமைதியை அடைவதற்கென எந்தப் பாதையும் கிடையாது. அமைதியேதான் பாதை
•எல்லாவற்றுக்கும் அறம்தான் அடிப்படை. அந்த அறத்திற்கே உண்மைதான் அடிப்படை.
•பிறர் எப்படி இருக்க வேண்டும் என்று நீ விரும்புகிறாயோ முதலில் அதுபோல நீ மாறு.
•அகிம்சை என்பது இதயத்தின் ஒரு பண்பு. அதற்கு மூளையுடன் தொடர்பு கிடையாது.
•குறிக்கோளை அடையும் முயற்சியில்தான் மகிமை இருக்கிறது அந்த குறிக்கோளை அடைவதில் இல்லை.
•பொறுமையும் விடாமுயற்சியும் இருந்தால் சிரமங்கள் எனும் மலையை வென்றுவிடலாம்.

• முதலில் உங்களை உதாசீனப்படுத்துவார்கள், பின்னர் உங்களைப் பார்த்து நகைப்பார்கள், பின்னர் உங்களோடு சண்டையிடுவார்கள். பின்னர் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.
• நீங்கள் எதை செய்தாலும் உங்கள் உள்ளத்திற்கும் உலகத்திற்கும் உண்மையாகவே நடந்து கொள்ளுங்கள்.
• தியாகம் தான் வாழ்க்கை. அது இயற்கை கற்றுத் தரும் பாடம்.
• பலம் உடல் வலிமையை சார்ந்தது அல்ல, வெல்ல முடியாத மன தைரியத்தை சார்ந்தது. மன தைரியத்தில் ஒருவர் நிலைத்து இருந்தாலே, எளிதாக வெற்றிபெற்று விடலாம்.
-
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
“போர் நடந்தாலும்.. எரிபொருள் கொள்முதலில் பாதிப்பு இருக்காது”.. நாடாளுமன்றத்தில் மோடி உறுதி! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம்












Click it and Unblock the Notifications