Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டெல்லி கடமைப்பாதையில் தேசியக் கொடியேற்றினார் ஜனாதிபதி.. குடியரசு தின அணிவகுப்பில் எகிப்து ராணுவம்!

டெல்லி கடமைப்பாதையில் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.

Subscribe to Oneindia Tamil

டெல்லி : நாட்டின் 74வது குடியரசு தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தலைநகர் டெல்லியில் கடமைப்பாதையில் (முன்னர் ராஜபாதை) நடைபெற்று வரும் குடியரசு தின விழாவில் குடியரசுத் தலைவர் திரௌவுபதி முர்மு மூவர்ணக் கொடியேற்றி மரியாதை செலுத்தினார். தேசியக் கொடியை ஏற்றிவைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்று வருகிறார் ஜனாதிபதி திரௌபதி முர்மு. திரௌவுபதி முர்மு குடியரசுத் தலைவராகப் பதவி ஏற்ற பின், கொடியேற்றும் முதல் குடியரசு தினம் இது.

பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் நடைபெற்று வரும் இந்த குடியரசு தின விழாவில், எகிப்து அதிபர் அப்தெல் பத்தா எல் சிசி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார். குடியரசு தின அணிவகுப்பில் எகிப்து ராணுவத்தினரும் பங்கேற்றுள்ளனர்.

நமது நாட்டின் குடியரசு தின விழாவுக்கு எகிப்து நாட்டின் அதிபர் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு கலந்து கொள்வது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

குடியரசு தின விழா

குடியரசு தின விழா

நாட்டின் 74-வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. தலைநகர் டெல்லியில் குடியரசு தின விழா அணிவகுப்பு கடமைப்பாதையில் தொடங்கி இந்தியா கேட் பகுதி வரை நடக்கிறது. குடியரசுத் தலைவர் திரௌவுபதி முர்மு தேசியக் கொடியை ஏற்றி வைத்து, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டுள்ளார். அணிவகுப்பு, ஜனாதிபதி மாளிகை அருகே தொடங்கி விஜய் சவுக், இந்தியா கேட் வழியாக செங்கோட்டை வரை செல்கிறது. சிறப்பாக பணியாற்றிய வீரர்களுக்கு பதக்கங்களையும் ஜனாதிபதி வழங்குகிறார். இந்த குடியரசு தின நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், முப்படை தளபதிகள், உயரதிகாரிகள் பங்கேற்றுள்ளனனர்.

எகிப்து அதிபர் + ராணுவம்

எகிப்து அதிபர் + ராணுவம்

எகிப்து அதிபர் அப்தெல் பத்தா எல் சிசி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். மேலும், குடியரசு தின அணிவகுப்பில் எகிப்து ராணுவ படைப்பிரிவும் கலந்து கொள்கிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க கடமைப் பாதையில் கலை நிகழ்ச்சிகளும், வீரதீர செயல்களும், ராணுவத்தின் பலத்தை பறைசாற்றும் வகையில் முப்படைகளின் பல்வேறு பிரிவுகளின் அணிவகுப்புகளும் நடைபெற உள்ளன. முப்படை வீரர்களின் கண்கவர் அணிவகுப்பு மரியாதையை குடியரசு தலைவர் ஏற்றுக்கொள்கிறார். காலை 10.30 மணிக்கு தொடங்கி, நண்பகல் 12 மணிக்கு குடியரசு தின விழா நிறைவடைகிறது.

ராணுவ அணிவகுப்பு

ராணுவ அணிவகுப்பு

குடியரசு தின விழா தொடங்கும் முன்பாக, தேசிய போர் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார். விஜய் சவுக் பகுதியில் இருந்து கடமைப்பாதை வழியாக ராணுவ அணிவகுப்பு நடைபெற உள்ளது. ராணுவ பலத்தை காட்டும் வகையில் அதிநவீன பீரங்கிகள், டாங்கிகள், ஆகாஷ் ஏவுகணைகள் அணிவகுப்பில் இடம்பெற உள்ளன.

சாகச நிகழ்ச்சிகள்

சாகச நிகழ்ச்சிகள்

மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர், அதிநவீன டிரோன்கள், ரஃபேல் போர் விமானங்கள் உள்ளிட்ட நவீன போர் விமானங்கள் கொண்ட விமானப் படை சாகசமும் நடைபெற உள்ளது. கடமைப்பாதையில் ஆயுதப்படையினர் மற்றும் துணை ராணுவப்படையினரின் அணிவகுப்பு, மாநிலங்கள் மற்றும் ஒன்றிய அமைச்சகங்கள், துறைகளின் அலங்கார ஊர்தி அணிவகுப்பு, குழந்தைகளின் கலாசார நிகழ்ச்சிகள், மோட்டார் சைக்கிள் சாகசங்கள் உள்ளிட்டவையும் நடைபெற உள்ளன. பல்வேறு மாநிலங்களின் கண்கவர் வாகனங்களும் அணிவகுத்து வரவுள்ளன.

கலை நிகழ்ச்சிகள்

கலை நிகழ்ச்சிகள்

நாட்டின் கலாசார பாரம்பரியம், பொருளாதார முன்னேற்றம் மற்றும் வலுவான பாதுகாப்பு ஆகியவற்றை சித்தரிக்கும் 23 அலங்கார ஊர்திகள் இடம்பெறுகின்றன. 17 ஊர்திகள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்தும், 6 ஊர்திகள் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் சார்பில் இந்த அணிவகுப்பில் இடம்பெறுகின்றன. இந்த ஆண்டு குடியரசுத் தின விழா கொண்டாட்டத்தில் பல்வேறு புதிய நடன, கலை, இசை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தீவிர பாதுகாப்பு

தீவிர பாதுகாப்பு

ராஜபாதை முதல் செங்கோட்டை வரையிலான பகுதிகள் கடந்த சில நாட்களாக பாதுகாப்பு வளையத்தில் இருந்து வருகிறது. டெல்லி போலீசார், துணை ராணுவ படைவீரர்கள் பல்வேறு குழுக்களாக ஒருங்கிணைந்து பாதுகாப்பு பணியை மேற்கொண்டுள்ளனர். டெல்லியில் செங்கோட்டை, சாந்தி சவுக் உள்ளிட்ட முக்கியமான இடங்கள் சிசிடிவி மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. பேருந்து மற்றும் ரயில் நிலையங்கள் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்களில் தீவிர சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+