குர்கானில் 18 மாடி கட்டிடத்தில் மோசமான விபத்து.. ஒருவர் பலி! பலர் சிக்கியிருக்கலாம் என தகவல்
டெல்லி: குர்கான் பகுதியில் அமைந்துள்ள 18 மாடிகள் கொண்ட குடியிருப்பு கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானாவின் குர்கான் பகுதியில் உள்ள செக்டார் 109இல் 18 மாடிகளைக் கொண்ட குடியிருப்பு கட்டிடம் உள்ளது. இந்தக் கட்டிடம் நேற்று திடீரென இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.
இந்தச் சம்பவத்தில் முதற்கட்டமாக ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மீட்புப் படைகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

விபத்து
வியாழக்கிழமை இரவு குர்கானின் செக்டார் 109 பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் குறைந்தது ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதில் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 18 மாடிகள் கொண்ட சின்டெல்ஸ் பாரடிசோ வளாகத்தின் அடுக்குமாடிக் குடியிருப்பில் மாடியில் உள்ள ஒரு அறை முதலில் கீழே விழுந்தது. அதைத் தொடர்ந்து கீழ் தளங்களில் இருந்த அறைகள் அப்படியே இடிந்து விழுந்துள்ளது.

எப்படி ஏற்பட்டது
இது தொடர்பான தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த சென்ற தேசிய பேரிடர் மீட்புப் படையினர் உள்ளே சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இந்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. ஆறாவது மாடியில் ஏற்பட்ட முதல் விபத்து அப்படியே தரைதளம் வரை தொடர்ச்சியான விபத்தை ஏற்படுத்தியுள்ளதாக மீட்பு படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

முதல்வர் கருத்து
இந்த விபத்து சின்டெல்ஸ் பாரடிசோ வளாகத்தின் "டவர் D" இல் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தின் மீட்பு பணிகளை நேரடியாகக் கண்காணித்து வருவதாக ஹரியான முதல்வர் மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "குருகிராமில் உள்ள பாரடிசோ குடியிருப்பு வளாகத்தில் அடுக்குமாடி கூரை துரதிர்ஷ்டவசமாக இடிந்து விழுந்தது. இதையடுத்து அதிகாரிகள், மீட்புப் படையினருடன் நிவாரணப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நான் மீட்புப் பணிகளை நேரடியாகக் கண்காணித்து வருகிறேன்" என்று ட்வீட் செய்துள்ளார்.

டவர் டி
தற்போது இடிந்து விழுந்த டவர் டி, கடந்த 2018 இல் கட்டப்பட்டது. இந்த வளாகத்தில் மொத்தம் நான்கு கோபுரங்கள் உள்ளன. 18 மாடிகளைக் கொண்ட டவர் டி நான்கு படுக்கையறை குடியிருப்புகளைக் கொண்டுள்ளது. அலட்சியமான ரிப்பேர் பணிகள் காரணமாகவே நேற்றிரவு இரவு 7 மணியளவில் இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் ஏற்பட்டுள்ளது. மீட்புப் பணிகள் இன்னும் முடியாததால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications