டாக்டர்கள் பரிந்துரை செய்ய ரூ 1000 கோடி கொடுத்தோமா?.. பிசினசே 300 கோடி தான்.. டோலா நிறுவனம் விளக்கம்
டெல்லி: டோலோ-650 மாத்திரைகளை விளம்பரப்படுத்த டாக்டர்களுக்கு ரூ.1,000 கோடி செலவில் சலுகைகளை இலவசமாக வழங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என்றும், வருவாயே ரூ. 300 கோடியாக இருக்கையில் எப்படி 1000 கோடி செலவு செய்ய முடியும் என்று அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
Recommended Video
காய்ச்சல் என்றாலே அனைவரும் முதலில் மெடிக்கல் கடைகளில் கேட்பது பாராசிட்டமல் மாத்திரை தான். அதிலுல் ஒருசிலர் குறிப்பாக டோலோ 650 மாத்திரை கொடுங்க... என கேட்பதை பார்த்திருப்போம்.
குறிப்பாக கடந்த கொரோனா பரவல் காலக்கட்டத்தில் அதிகளவில் மக்கள் இந்த மாத்திரையை தான் வாங்கினர் என்று சொல்லலாம்

உச்சநீதிமன்றத்தில் மனு
அந்த அளவுக்கு மாத்திரை விற்பனையில் இடம்பிடித்த பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் மைக்ரோ லேப்ஸ் லிமிடெட் நிறுவனம் மீது உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று போடப்பட்டுள்ளது. அதில், ''பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் டோலோ மாத்திரை நிறுவனம், மருந்துகளை பரிந்துரைத்ததற்காக ஆயிரம் கோடி ரூபாய் பரிசுபொருட்களை மருத்துவர்களுக்கு வழங்கியுள்ளது. குறிப்பாக டோலோ 650 மாத்திரையினை டாக்டர்கள் பரிந்துரை செய்வதற்காக அவர்கக்கு ரூபாய் 1000 கோடி செலவில் சலுகைகளை அளித்துள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.

முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினை
டோலோ 650 மாத்திரை தொடர்பாக எழுந்த இந்த குற்றச்சாட்டு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சமூக வலைத்தளத்திலும் இந்த விவகாரம் பேசு பொருளாக மாறியது. இந்த நிலையில் வழக்கை விசாரித்து உச்ச நீதிமன்றம், ''இந்த வழக்கு முக்கியத்துவம் வாய்ந்த பெரிய பிரச்சினை என்றும், இது குறித்து உரிய விசாரணை நடத்தி மத்திய அரசு 10 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்ததோடு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தது.

பிசினசே 350 கோடி தான்
இந்த நிலையில், டோலா 650 மாத்திரையை தயாரிக்கும் நிறுவனம் இவ்விவகாரங்கள் தொடர்பாக அந்த நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் நிர்வாக துணைத் தலைவர் ஜெயராஜ் கோவிந்தராஜு விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:- ''இது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு. கொரோனா கால கட்டத்தில் 350 கோடி ரூபாய் மட்டுமே பிஸினஸ் செய்த எந்த ஒரு நிறுவனத்தாலும் விளம்பரத்துக்காக 1000 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது என்பது சாத்தியமற்ற செயலாகும்.

இயலாத காரியம்
அதிலும் குறிப்பாக வருமானமாக 300 கோடியே கிடைத்த பட்சத்தில், எப்படி மார்க்கெட்டிங் செய்வதற்காக ரூபாய் 1000 கோடி செலவிட முடியும். இது எந்த நிறுவனத்தாலும் இயலாத காரியம். அதிலும் டோலோ 650 மாத்திரைக்கு விலைக்கட்டுப்பாட்டு இருந்த சமயத்தில் இது எந்த வகையிலும் சாத்தியம் இல்லாதது. கொரோனா காலங்களில் டோலோ 650 மாத்திரை மட்டும் அல்ல... வைட்டமின் சி, வைட்டமின் காம்பினேஷன்ஸ் மாத்திரைகளும் அதிகம் பயன்படுத்தப்பட்டது" என்று தெரிவித்துள்ளார்.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications