நக்சல்களுடன் தொடர்பு.. நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்க முயலும் இன்போசிஸ்.. ஆர்எஸ்எஸ் ஊடகம் பகீர்
டெல்லி: வருமான வரி மற்றும் ஜிஎஸ்டி தாக்கல் செய்யும் தளங்களில் தொடர்ந்து பிரச்சினை ஏற்பட்டு வரும் நிலையில். இத்தளங்களை உருவாக்கிய இன்போசிஸ் நிறுவனம் நக்சல் மற்றும் இடசாரி இயக்கங்களுடன் கைகோர்த்துக்கொண்டு வேண்டுமென்றே இந்தியப் பொருளாதாரத்தைச் சீர்குலைக்க முயல்வதாக ஆர்எஸ்எஸ் சார்பு ஊடகமான பாஞ்சஜன்யா குற்றம்சாட்டியுள்ளது,
Recommended Video
புதிதாகத் தொடங்கப்பட்ட வருமான வரி தாக்கல் செய்யும் தளம் மற்றும் ஜிஎஸ்டி தளம் ஆகியவற்றில் பல்வேறு பிரச்சினைகள் இருப்பதாகப் புகார்கள் எழுந்தவண்ணம் உள்ளன.
இந்நிலையில் இத்தளங்களை உருவாக்கிய இன்போசிஸ் நிறுவனம் வேண்டுமென்றே இந்தியப் பொருளாதாரத்தைச் சீர்குலைக்க முயல்வதாக ஆர்எஸ்எஸ் சார்பு ஊடகமான பாஞ்சஜன்யா குற்றம்சாட்டியுள்ளது,

பொருளாதாரத்தைச் சீர்குலைக்க முயலும் இன்போசிஸ்
பாஞ்சஜன்யா வார இதழில் இன்று Reputation and Harm என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை வெளியானது. அதில் இன்போசிஸ் நிறுவனத்தைக் கடுமையாகச் சாடி கருத்துகள் இடம் பெற்றிருந்தன. ஜிஎஸ்டி மற்றும் கார்ப்பரேட் விவகாரத் துறை இணையதளங்களில் இருக்கும் பிரச்சினைகளை மேற்கோள் காட்டி, "இவை மீண்டும் மீண்டும் நிகழும்போது, அது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இன்போசிஸ் நிர்வாகம் வேண்டுமென்றே இந்தியாவின் பொருளாதாரத்தைச் சீர்குலைக்க முயல்வதாகக் குற்றச்சாட்டுகள் உள்ளன.

வெளிநாட்டு வாடிக்கையாளர்கள்
சில தேச விரோத சக்திகள் இன்போசிஸ் மூலம் இந்தியாவின் பொருளாதார நலன்களுக்குத் தீங்கு விளைவிக்க முயல்கிறதா? வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கு இன்போசிஸ் இதே போன்ற மோசமான சேவையை வழங்குமா?" என்றும் அந்த கட்டுரையில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. மேலும், இந்த குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் இல்லை என்றாலும் நிறுவனத்தின் வரலாறும் இப்போது தொடர்ச்சியாக நடக்கும் சம்பவங்களும் இதற்குப் பதிலாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளது.

Array
மேலும், அந்த கட்டுரையில், "நக்சல்கள், இடதுசாரிகள் அமைப்புகளுக்கு உதவி செய்ததாக இன்போசிஸ் மீது ஏற்கனவே குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நாட்டில் பிளவுபடுத்தும் சக்திகளை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இன்போசிஸ் ஆதரிப்பது ஏற்கனவே வெளிப்படையாகத் தெரியவந்துள்ளது. தவறான தகவல்களைப் பரப்பும் தளங்களும் இன்போசிஸால் நிதி அளிப்பதாகக் கூறப்படுகிறது. சாதிய வெறுப்புகளைப் பரப்பும் சில அமைப்புகளுக்கும் இன்போசிஸ் நிதி அளிக்கிறது. இன்போசிஸ் நிறுவனம் தேச விரோத அமைப்புகளுக்கு ஏன் நிதி அளிக்கிறது என்பதை விளக்க வேண்டும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

பாஞ்சஜன்யா ஆசிரியர்
இந்த கட்டுரை குறித்து பாஞ்சஜன்யா ஆசிரியர் ஹித்தேஷ் சங்கர் கூறுகையில், "இந்த கவர் ஸ்டோரி ஒரு பெரிய நிறுவனத்தைப் பற்றியது (இன்போசிஸ்). அதன் வேலை அதன் நற்பெயருக்கு ஏற்றதாக இல்லை. அந்நிறுவனத்தின் செயல் கோடிக்கணக்கான மக்களுக்குச் சிரமத்தை ஏற்படுத்துகிறது. இன்போசிஸ் தேச விரோத செயல்களில் ஈடுபடவில்லை என்றால், அது உண்மைகளை விளக்க வேண்டும். நாங்கள் மக்களிடையே எழுந்துள்ள அதிருப்தியைப் பற்றி இதில் பதிவு செய்துள்ளோம். தங்கள் ஒரு ஐடி நிறுவனமா இல்லை சமூகத்தில் சிக்கலை உருவாக்கும் கருவியா என்பதை அந்நிறுவனம் தான தெளிவுபடுத்த வேண்டும்" என்றார்.

புதிய தளம்
இந்தியாவில் வருமான வரி தாக்கல் செய்யும் முறையை எளிமைப்படுத்தும் வகையில் புதிய இணைய தளத்தை உருவாக்க அரசு திட்டமிட்டது. இதற்காகக் கடந்த 2019ஆம் ஆண்டு இன்போசிஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. வருமான வரி தாக்கல் செய்வதற்குப் புதிதாக www.incometax.gov.in என்ற தளம் கடந்த ஜூன் 7ஆம் தேதி தொடங்கப்பட்டது. ஆனால், ஆரம்பம் முதலே இந்தத் தளத்தில் ஏகப்பட்ட பிரச்சினைகள் இருந்ததாகப் பயனாளர்கள் புகார் தெரிவித்தனர்.

முடக்கம்
இது குறித்து பொதுமக்கள் பல்வேறு புகார்களை அளித்திருந்தனர். இதையடுத்து தளத்தில் தேவையான மாற்றங்களை செப் 15ஆம் தேதிக்குள் மேற்கொள்ளும்படி இன்போசிஸ் நிறுவனத்திற்கு நிதியமைச்சர் உத்தரவிட்டார். இருப்பினும், 2.5 மாதங்கள் கழித்தும் பிரச்சினைகள் தொடர்ந்தன. குறிப்பாகக் கடந்த ஆகஸ்ட் 21க்கு பிறகு தளம் முடங்கிவிட்டது. அதேபோல ஜிஎஸ்டி தாக்கல் செய்யும் தளம், காப்ரேட் விவகாரத் துறை அமைச்சகத்தின் இணையதளத்திலும் பல்வேறு பிரச்சினைகள் இருப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications