அடுத்த லெவலுக்கு இறங்கிய கரப்பான் பூச்சி கட்சி.. பள்ளிகளில் ஆய்வு செய்து வீடியோ எடுக்க வேண்டுகோள்
டெல்லி: கிராமப்புறங்களில் உள்ள அரசு பள்ளிகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில் நாடு முழுவதும் புதிய இயக்கத்தை தொடங்க உள்ளதாக கரப்பான் பூச்சி கட்சி நிறுவனர் அபிஜீத் தீப்கே அறிவித்துள்ளார். அதன் ஒரு பகுதியாக அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் உள்ளதா என்பதை பெற்றோர்களே நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் மதிய உணவு முறையாக வழங்கப்படுகிறதா என்பதை பெற்றோர் நேரில் கண்காணிக்க செய்ய வேண்டும் என அபிஜீத் தீப்கே அறிவித்துள்ளார்.
நீட் தேர்வுக்கு எதிராக நாடு முழுக்க கடந்த ஜூன் மாதம் கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தை நடத்தியிருந்தார். அந்த போராட்டத்தின் விளைவாகவே கல்வி துறை அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதற்கிடையே இப்போது புதியதொரு இயக்கத்தை கரப்பான் பூச்சி கட்சி முன்னெடுத்துள்ளது.

அதன்படி நாடு முழுக்க கிராமங்களில் உள்ள அரசு பள்ளிகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் இந்த இயக்கத்தை தொடங்கியுள்ளனர். அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் உள்ளதா என்பதை பெற்றோர்களே நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் மதிய உணவு முறையாக வழங்கப்படுகிறதா என்பதை பெற்றோர் நேரில் கண்காணிக்க வேண்டும் என அபிஜீத் தீப்கே அறிவித்துள்ளார்.
இந்த புதிய இயக்கம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தில் தொடங்கப்படும் என கரப்பான் பூச்சி கட்சி தெரிவித்துள்ளது. கிராமப்புற கல்வி உள்கட்டமைப்பு நீண்ட காலமாக புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ள கரப்பான் பூச்சி கட்சி, பொதுமக்கள், பெற்றோர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் இணைந்து அரசு பள்ளிகளின் நிலையை மாற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
This Independence Day, let’s pledge to improve the Govt Schools in our villages. pic.twitter.com/fZyRrmoNhu
— Abhijeet Dipke (@abhijeet_dipke) August 10, 2026
இது தொடர்பாக அக்கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே வெளியிட்ட வீடியோவில், "இந்த இயக்கத்தை எனது சொந்த கிராமமான மகாராஷ்டிராவின் ஹிங்கோலியில் இருந்து தொடங்க உள்ளேன். முதற்கட்டமாக எனது கிராமத்தின் தலைவரை சந்தித்து அங்குள்ள அரசு பள்ளிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்க உள்ளேன்.
வரும் ஆகஸ்ட் 15 நமது 80ஆவது சுதந்திர தினம். ஆனால் கடந்த 80 ஆண்டுகளில் மிகவும் புறக்கணிக்கப்பட்ட ஒன்றாக கிராமங்களில் உள்ள அரசு பள்ளிகள் உள்ளன. மேலும், இந்தியா புதிய நாடாளுமன்றக் கட்டடத்தையும், புதிய பிரதமர் இல்லத்தையும் கட்டியுள்ள நிலையில், கிராமங்களில் உள்ள அரசு பள்ளிகளை ஏன் சிறப்பாக இருப்பதில்லை. விவசாயிகள் மற்றும் கூலித் தொழிலாளர்களின் குழந்தைகளை நாட்டின் எதிர்காலமாக நாம் கருதவில்லையா?" என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
கிராமப்புறங்களில் உள்ள பல குழந்தைகள் பள்ளிக்கு செல்வதற்காக நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டிய சூழல் இருப்பதாகவும், பல அரசு பள்ளிகளில் குடிநீர், மின்சாரம் மற்றும் கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லை என்றும் தீப்கே குறிப்பிட்டார். குறிப்பாக, கழிப்பறை வசதி இல்லாதது மாணவிகளுக்கு மிக பெரிய சிரமத்தை ஏற்படுத்துவதாக அவர் விமர்சித்தார்.. இந்தியாவின் வளர்ச்சியில் புதிய தொடக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்றால், கிராமப்புற அரசு பள்ளிகளை மேம்படுத்துவது முக்கியமான முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்த இயக்கத்தின் முக்கிய அம்சமாக அரசு பள்ளிகளில் பெற்றோர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என அழைப்பு விடுத்தார். அரசு பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர்கள் பள்ளிகளுக்கு நேரில் சென்று மின்சாரம், சுத்தமான குடிநீர், செயல்படும் கழிப்பறைகள் மற்றும் மதிய உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. போதிய வசதிகள் இல்லாதபட்சத்தில் அதை வீடியோவாக பதிவு செய்து ஆவணப்படுத்துமாறும் அபிஜீத் தீப்கே கேட்டுக்கொண்டார்.


Click it and Unblock the Notifications
