'சென்ட்ரல் விஸ்டா' திட்டத்துக்காக.. இடிக்கப்படவுள்ள புராதன சின்ன கட்டிடங்கள்.. அறிஞர்கள் எதிர்ப்பு!
டெல்லி: மத்திய 'சென்ட்ரல் விஸ்டா' திட்ட கட்டுமான பணிக்காக புராதன கட்டிடம் இடிக்கப்பட உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தலைநகர் டெல்லியில் தற்போது இருக்கும் நாடளுமன்ற கட்டிடத்துக்கு மாற்றாக புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை மத்திய அரசு கட்டி வருகிறது.

ரூ.20,000 கோடி
'சென்ட்ரல் விஸ்டா' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின் கீழ் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்துடன் மத்திய தலைமைச் செயலகம், குடியரசுத் தலைவர் பிரதமருக்கான வீடுகள், முக்கிய துறைகளுக்கான அலுவலகங்கள் ஆகியவை கட்டப்பட உள்ளன. 'சென்ட்ரல் விஸ்டா'திட்டத்தின் மதிப்பு ரூ.20,000 கோடி என்று கூறப்படுகிறது.

எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு
இந்தியாவில் தற்போது கொரோனா ஆதிக்கம் இருப்பதால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியவில்லை. ஆக்சிஜன் கிடைக்காமல் தினம், தினம் உயிர்கள் பறிபோகின்றன. நாட்டின் சுகாதாரத்துறைக்கு போதிய நிதி இல்லாத நிலையில் 'சென்ட்ரல் விஸ்டா' தேவைதானா? என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. அதற்கு பயன்படுத்தப்படும் நிதியை சுகாதாரத்துறைக்கு பயன்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

புராதன கட்டிடம் இடிக்கப்படுகிறது
இந்த நிலையில் 'சென்ட்ரல் விஸ்டா' திட்டத்துக்காக டெல்லியில் உள்ள புராதன நினைவு கட்டிடங்கள் இடிக்கப்பட உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதாவது தேசிய அருங்காட்சியகம், இந்திரா காந்தி தேசிய கலை மையம் (ஐஜிஎன்சிஏ), தேசிய ஆவணக்காப்பகத்தின் இணைப்பு கட்டிடம் ஆகியவை இடிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

அரிய பொருள்கள்
இதையும் சேர்த்து சாஸ்திரி பவன், கிருஷி பவன், விஜியன் பவன், துணை குடியரசுத் தலைவர் குடியிருப்பு, ஜவஹர் பவன் உள்பட மொத்தம் 4,58,820 சதுர மீட்டர்.பரப்பளவு உள்ள கட்டிடங்கள் இடிக்கப்பட உள்ளன. தேசிய அருங்காட்சியகத்தில் ஆயிரக்கணக்கான விலைமதிப்பற்ற அரிய சிலைகள், சிற்பங்கள், விலைமதிப்பற்ற நாணயங்கள், ஓவியங்கள் மற்றும் பழங்கால நகைகள் உள்ளன. மேலும் வெண்கலத்தில் நடராஜார் சிலை புத்தரின் நினைவுச்சின்னங்கள், தஞ்சை ஓவியங்கள் உள்ளன. இவை அனைத்தும் வேறு இடத்துக்கு மாற்றப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

அபாய நிலை
தேசிய ஆவணக்காப்பகத்தின் பிரதான கட்டிடம் அப்படியே இருக்கும். இணைப்பு கட்டிடம் இடிக்கப்பட்டு புதிய கட்டிடம் கட்டப்படும். இங்கு வைக்கப்பட்டுள்ள காப்பக பதிவுகளில் 45 லட்சம் கோப்புகள், 25,000 அரிய கையெழுத்துப் பிரதிகள், 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வரைபடங்கள் மற்றும் 1.3 லட்சம் முகலாய ஆவணங்கள் உள்ளன. ஆவணங்களை வேறு இடங்களுக்கு மாற்றும்போது இவற்றில் பல மயமாகும் அபாயம் உள்ளன.

அறிஞர்கள் வேண்டுகோள்
இந்திரா காந்தி தேசிய கலை மையத்தில் பாரம்பரிய துண்டு பிரதிகள், கையெழுத்துப் பிரதிகள் மற்றும் பழமைவாய்ந்த நூலகம் ஒன்றும் உள்ளது குறிப்பிடத்தக்கது. புராதன சின்னங்கள் கொண்ட கட்டிடத்தை இடிக்கக் கூடாது என்று இந்தியா உள்பட வெளிநாடுகளை சேர்ந்த 70-க்கு மேற்பட்ட அறிஞர்கள் பிரதமர் மோடிக்கு ஏற்கனவே கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications