டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"சிகரெட்டால் சூடு" அப்தாப் சித்ரவதையை சகித்துக் கொண்ட ஷ்ரத்தா.. ஏன் தெரியுமா? தோழன் வெளியிட்ட திடுக்

Google Oneindia Tamil News

டெல்லி: கொலை செய்யப்படுவதற்கு முன்பாக ஷ்ரத்தா அப்தாப் என்ன அடித்து துன்புறுத்துவதாகவும்.. சிகரெட்டால் சூடு வைத்து கொடுமை செய்ததாகவும் தனது தோழிகளிடம் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக அவரது நண்பர்கள் போலீசில் புகார் அளிக்க சென்ற போது அப்தாப்புக்கு ஒரு வாய்ப்பு கொடுப்போம் என்றும் ஷ்ரத்தா கூறியுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.

தலைநகர் டெல்லியில் லிவிங்டுகெதர் முறையில் வாழ்ந்து விட்டு, திருமணம் செய்ய வற்புறுத்தியதால் தனது காதலியான ஷர்த்தாவை அப்தாப் அமீன் (வயது 28) என்ற இளைஞர் கொடூரமாக கொலை செய்தார்.

பின்னர் அந்த கொலையை மறைக்க அவர் செய்த காரியங்கள் அனைத்தும் கிரைம் திரில்லர் படங்களையே மிஞ்சும் அளவிற்கு அமைந்தது.

டக்கென தலைக்கேறிய கோபம்.. சிறு சண்டைக்கு காதலியை 35 பீஸாக வெட்டிய அப்தாப்! அதிர வைக்கும் வாக்குமூலம்டக்கென தலைக்கேறிய கோபம்.. சிறு சண்டைக்கு காதலியை 35 பீஸாக வெட்டிய அப்தாப்! அதிர வைக்கும் வாக்குமூலம்

ஒன்றும் தெரியாத அப்பாவி போல

ஒன்றும் தெரியாத அப்பாவி போல

டெல்லி மட்டும் அல்லாது நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்படும் ஒரு கொலை வழக்காக மாறிய ஷர்த்தா வழக்கில் போலீசார் விசாரணையில் தினம் தினம் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி பலரையும் அதிர்ச்சி அடைய வைத்து வருகிறது. கடந்த மே மாதமே ஷ்ரத்தாவை கொலை செய்து விட்டு ஒன்றுமே தெரியாதது போல அப்தாப் அமீன் சர்வ சாதாரணமாக நடமாடி வந்து இருக்கிறார்.

 உடலை 35 துண்டுகளாக வெட்டி

உடலை 35 துண்டுகளாக வெட்டி

ஷ்ரத்தாவின் தந்தை மகளை பற்றி எந்த தகவலும் இல்லாததால், போலீசிடம் நடத்திய விசாரணைக்கு பிறகே இந்த கொடூர கொலை சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. அதுவும் ஷ்ரத்தாவை கொலை செய்த அப்தாப், கொலையை மறைப்பதற்காக ஷ்ரத்தாவின் உடலை 35 துண்டுகளாக வெட்டி டெல்லியில் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவில் கொண்டு வீசி விட்டு வந்த சம்பவம் கேட்போரை நடுநடுங்க வைக்கும் வகையில் அமைந்தது. ஷ்ரத்தாவை கொலை செய்துவிட்டு யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக அவரது சமூக வலைத்தளங்களையும் அப்தாப் பயன்படுத்தி வந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

கட்டி வைத்து அடித்ததாக ஷ்ரத்தா புகார்

கட்டி வைத்து அடித்ததாக ஷ்ரத்தா புகார்

தற்போது கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டு இருக்கும் அப்தாப்பிடம் உண்மைக் கண்டறியும் சோதனையும் நடத்தப்பட்டு இருக்கிறது. இந்தக் கொலை சம்பவத்தில் முக்கிய ஆதாரங்களை திரட்டும் பணியிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர். கடந்த 2020 ஆம் ஆண்டு அப்தாப் அமீனுக்கு எதிராக ஷர்த்தா அளித்த புகாரை மும்பை போலீசர் பகிர்ந்து இருக்கின்றனர். ஷ்ரத்தா அளித்த புகாரில், அப்தாப் அமீன் தன்னை கட்டி வைத்து அடித்ததாகவும், கழுத்தை நெறித்து கொலை செய்ய முயன்றதாகவும் தெரிவித்து இருக்கிறார்.

கொன்றுவிடுவதாக மிரட்டினார்

கொன்றுவிடுவதாக மிரட்டினார்

மேலும், அப்தாப் அடித்து துன்புறுத்துவது அவரது பெற்றோருக்கு தெரியும் என்றும் தனியாக வசித்து வருவதையும் அப்தாப்பின் பெற்றோர்கள் அறிந்து வைத்திருந்தனர் என்றும் அப்தாப் தொடர்ந்து துன்புறுத்துவதால் அவருடன் வாழத்தயாராக இல்லை என்றும் கூறியிருக்கிறார். மேலும் என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டி வருகிறார் என்றும் அவரால் எனக்கு எந்த பாதிப்பும் நேராமல் இருப்பதை போலீசார் உறுதி செய்ய வேண்டும் என்றும் புகாரில் கூறியிருந்து இருக்கிறார்.

சிகரெட்டால் சூடு வைத்து சித்ரவதை

சிகரெட்டால் சூடு வைத்து சித்ரவதை


இந்த புகரை அளித்தபிறகும் 2 ஆண்டுகள் அப்தாப்புடன் ஷ்ரத்தா தொடர்பில் இருந்தது இந்த வழக்கில் புரியாத புதிராக அமைந்தது. இந்த நிலையில், அப்தாப் தன்னை சிகரெட்டால் சூடு வைத்து சித்ரவதை செய்ததாகவும் ஆனால், அப்தாப்பிற்வுடன் சேர்ந்து வாழ ஒரு வாய்ப்பு கொடுத்து பார்ப்போம் என்ற எண்ணத்தில் ஷ்ரத்தா இதை சகித்துக் கொண்டதாகவும் அவரது தோழிகளிடம் தெரிவித்துள்ளார்.

ஒரு வாய்ப்பு கொடுத்து பார்ப்போம்

ஒரு வாய்ப்பு கொடுத்து பார்ப்போம்

இது தொடர்பாக ஷ்ரத்தாவின் கல்லூரி கால நண்பர் ரஜத் சுக்லா கூறுகையில், "கடந்த 2021 ஆம் ஆண்டு தனது நெருங்கிய தோழிகளிடம் ஷ்ரத்தா, அப்தாப் தன்னை சிகரெட்டால் சூடு வைப்பதாக கூறியிருக்கிறார். இதைக் கேள்வி பட்டு நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டோம். உடனே அப்தாப்பை சந்தித்த ஷ்ரத்தாவின் நண்பர்கள் போலீசிடம் புகார் அளிப்போம் என்று எச்சரித்து இருக்கின்றனர். ஆனால், ஷ்ரத்தாதான், அவருக்கு மேலும் ஒரு வாய்ப்பு கொடுத்து பார்ப்போம் என்று சமாதானப்படுத்தி இருக்கிறார். ஆனால், இதுவே அவரது உயிருக்கு உலை வைத்து விட்டது" என்றார்.

English summary
Before the murder, Shraddha Abtab told her friends that she was beating and harassing her. And when her friends went to file a complaint with the police in this regard, Shraddha said that she would give a chance to Abtab.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X