ஷாக்.. டெல்லி சைக்கோ கொலைக்காரன் ஒரு "சீரியல் கில்லரா"? உண்மை கண்டறியும் சோதனைக்கு ரெடியான போலீஸ்
டெல்லி: டெல்லியில் தன்னுடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்த காதலி சாரதாவை கொடூரமாக கொலை செய்த சைக்கோ கொலைக்காரன் அப்தாப்பை உண்மைக் கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்த அனுமதியை அடுத்து, இன்னும் ஓரிரு தினங்களில் கொலையாளி அப்தாப்புக்கு உண்மை கண்டறியும் சோதனையை நடத்த போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
அப்தாப்பிடம் இதுவரை நடத்திய விசாரணையில், அவர் ஒரு சீரியல் கொலையாளியாக இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். அதாவது, சாராதவுக்கு முன்பே அவர் யாரையாவது கொலை செய்திருக்கக் கூடும் என போலீஸார் கருதுகின்றனர். எனவே இந்த உண்மைக் கண்டறியும் சோதனையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாக வாய்ப்பிருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதிர வைத்த சைக்கோ..
மும்பையைச் சேர்ந்த இளம்பெண்ணான சாரதா தனது பெற்றோரின் எதிர்ப்பை மீறி அப்தாப் அமீன் (26) என்ற இளைஞருடன் திருமணம் ஆகாமலேயே சேர்ந்து வாழும் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்தார். மும்பையில் தங்கியிருந்த அவர்கள், சாரதாவின் பெற்றோரின் தொடர் எதிர்ப்பால் டெல்லிக்கு குடிபெயர்ந்தனர். டெல்லிக்கு வந்ததும் அப்தாப்புக்கு ஏராளமான இளம்பெண்களுடன் தொடர்பு ஏற்பட்டது. இது சாரதாவுக்கு பிடிக்காததால், அப்தாப்பை கண்டித்துள்ளார். மேலும், தன்னை உடனடியாக திருமணம் செய்து கொள்ளுமாறு அப்தாப்பை வலியுறுத்தி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அப்தாப், கடந்த மே மாதம் சாரதா கழுத்தை நெரித்து கொலை செய்தார்.

அடுத்தடுத்து அதிர்ச்சி..
இந்நிலையில், சாரதாவிடம் இருந்து எந்த தொலைப்பேசி அழைப்பும் வராததால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் போலீஸில் புகார் அளித்தனர். அதன் பிறகு, போலீஸார் நடத்திய விசாரணையில்தான் ஈரக்குலையை நடுங்க வைக்கும் தகவல்கள் வெளிவந்தன. சாரதாவை கொலை செய்ததோடு, அவரது உடலை 35 துண்டுகளாக வெட்டி, அவற்றை ஃப்ரிட்ஜில் வைத்து பல நாட்களாக அவற்றை ஒவ்வொன்றாக காட்டுப் பகுதிகளில் புதைத்து வந்திருக்கிறார் அப்தாப். அது மட்டுமல்லாமல், சாரதாவின் தலையும், உடல் பாகங்களும் தனித்தனியாக ஃப்ரிட்ஜில் இருந்த போதே, ஒரு துளி பயம் கூட இல்லாமல் தனது வீட்டிற்கு பல இளம்பெண்களை அழைத்து வந்து அவர்களுடன் அப்தாப் உடலுறவு வைத்துக் கொண்டிருக்கிறார்.

சீரியல் கில்லரா?
போலீஸ் விசாரணையில், மேற்கூறிய தகவல்களை வாக்குமூலமாக அளித்துள்ளார் அப்தாப். இது, போலீஸாரையே குலைநடுங்கச் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அப்தாப்பின் நடவடிக்கையை பார்க்கும் போது அவன் சைக்கோவாக இருப்பதற்கு அதிக வாய்ப்புள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர். மேலும், சாரதா கொலையிலும் அவர் பல உண்மைகளை மறைப்பதாக போலீஸாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், சாரதாவை கொலை செய்வதற்கு முன்பே அவர் வேறு யாரையாவது கொன்றிருக்கலாம் எனவும் போலீஸார் கருதுகின்றனர். அதாவது அவர் ஒரு சீரியல் கில்லராக இருக்கலாம் என்பது போலீஸாரின் யூகமாக இருக்கிறது.

உண்மைக் கண்டறியும் சோதனை..
எனவே, அப்தாப்பிடம் உண்மைக் கண்டறியும் சோதனையை நடத்த போலீஸார் முடிவு செய்தனர். இதற்கு அனுமதிக் கோரி டெல்லி செஷன்ஸ் நீதிமன்றத்திலும் போலீஸார் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை ஆய்வு செய்த நீதிபதி, கொலையாளி அப்தாப்புக்கு உண்மைக் கண்டறியும் சோதனையை நடத்த அனுமதி அளித்தார். அதன்படி, இன்னும் ஓரிரு தினங்களில் அப்தாப்பிடம் உண்மைக் கண்டறியும் சோதனை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவரும் என போலீஸார் உறுதியாக கூறுகின்றனர்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை?












Click it and Unblock the Notifications