நமக்கு “ஒரே மாதிரி எதிரி”.. இஸ்ரேல் தூதரின் பரபர ட்வீட்! இந்திய அமைச்சரிடம் பேசியது என்ன? யார் அது?
டெல்லி: இந்தியாவும் இஸ்ரேலும் ஒரே மாதிரியான எதிரிகளிடம் சண்டை போட்டுக்கொண்டு இருப்பதாலும், இருவருக்குமே ஆபத்தான அண்டை நாடுகள் உள்ளதாலும் இருநாட்டு ஒற்றுமை பற்றி மத்திய அமைச்சருடன் தான் பேசிக்கொண்டு இருந்ததாக இஸ்ரேல் தூதர் விளக்கம் அளித்து உள்ளார்.
உலகின் பல நாடுகளிலும், சென்னை உட்பட இந்தியாவின் பல பகுதிகளில் திரைப்பட திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் குறிப்பாக ஆசியாவின் மிகவும் பழமையான திரைப்பட விழாவாக கோவா சர்வதேச திரைப்பட விழா உள்ளது.
கோவாவில் ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த திரைப்பட திருவிழாவில் பல நாடுகள், பல மொழிகளில் வெளியாகும் சிறந்த திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டு திரையிடப்பட்டு வருகின்றன.

53 வது திரைப்பட விழா
அந்த வகையில் கடந்த 20ஆம் தேதி தொடங்கிய 53 வது கோவா திரைப்பட விழா நேற்றுடன் நிறைவடைந்தது. இந்த திரைப்பட விழாவில் 79 நாடுகளை சேர்ந்த 280க்கும் அதிகமான திரைப்படங்கள் திரையிடப்பட்டு சிறந்த நடிகர், திரைப்படத்திற்கான விருதுகள் வழங்கப்பட்டன. மத்திய அரசின் தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகமும் கோவா மாநில அரசும் இணைந்து இதை நடத்தியது.

ஜெய்பீம், காஷ்மீர் பைல்ஸ்
இந்த திரைப்பட விழாவில் கடந்த ஆண்டு தமிழில் வெளியாகி மொத்த நாட்டையும் உலுக்கிய நடிகர் சூர்யாவின் ஜெய்பீம் திரைப்படம் உட்பட 3 தமிழ் திரைப்படங்கள் திரையிடப்பட்டன. அதேபோல் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி இயக்கத்தில் அனுபம் கேர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படமும் திரையிடப்பட்டது.

நாதவ் லாபிட்
இந்த நிலையில் நேற்று நிறைவு விழாவில் பேசிய திரைப்பட திருவிழாவின் தேர்வுக்குழு தலைவர் நாடவ் லேபிட், "தி காஷ்மீர் பைல்ஸ் வெறுப்புணர்வை பரப்பும் இழிவான படம். கவுரவம் மிக்க கோவா சர்வதேச திரைப்பட திருவிழாவிற்கு தகுதியில்லாத இந்த படத்தை தேர்வு செய்துள்ளது அதிர்ச்சி தருகிறது. இதனால் அதிர்ச்சியும் மன உளைச்சலும் அடைந்தோம். மேடையிலேயே நாங்கள் அதிருப்தியை பதிவு செய்கிறோம்." என்று அவர் கூறினார்.

மீண்டும் விவாதப்பொருள்
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக ஆளும் பல மாநில முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்களின் பாராட்டுக்களை பெற்று, பல மாநிலங்களில் வரி விலக்கை பெற்ற காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தை, மத்திய அமைச்சர்கள், திரைபிரபலங்கள் திரண்டிருந்த அரங்கத்திலேயே நாதவ் லேபிட் விமர்சித்ததால் மீண்டும் காஷ்மீர் பைல்ஸ் படம் விவாதப்பொருளாக மாறி இருக்கிறது.

இஸ்ரேல் தூதர்
இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர், நாதவ் லாபிட் தன்னுடைய இந்த விமர்சனத்துக்காக வெட்கப்பட வேண்டும் என்று கூறினார். அவர் தனது பதிவில், "இந்தியா இஸ்ரேல் இடையிலான ஒற்றுமை மற்றும் நெருக்கம் குறித்து இந்திய அமைச்சரும் நானும் உரையாடினோம். இதை ஏன் தொலைக்காட்சி பேட்டியில் தெரிவித்தீர்கள்?

ஒரே மாதிரி எதிரி
ஒரு நாடுகளுக்கும் ஒற்றுமை உள்ளதுதான். காரணம், 'ஒரே மாதிரியான எதிரியிடம் சண்டையிடுகிறோம். மோசமான அண்டை நாட்டை கொண்டுள்ளோம்.' தொழில்நுட்ப வளர்ச்சியடைந்த நாட்டான இஸ்ரேலுக்கு அமைச்சர் வருவது பற்றி பேசினார். இருநாடுகள் திரை துறைகளும் இணைந்து செயல்படுவது பற்றியும் பேசினோம்." என்றார்.

யார் அந்த அமைச்சர்?
ஆனால் அந்த மத்திய அமைச்சரின் பெயரை அவர் குறிப்பிடவில்லை. அதே நேரம் தன்னுடைய ட்வீட்டில் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூருடன் தான் நிற்கும் படத்தை அவர் வெளியிட்டு உள்ளார். அதேபோல் ஒரே மாதிரியான எதிரி என்றாக் யார்? மோசமான அண்டை நாடுகள் பாகிஸ்தானுடம், பாலஸ்தீனுமா? என கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications