டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நீழ்மூழ்கி எதிர்ப்பு போர் திறன்.. மேகத்தை கிழித்து பறந்த சூப்பர்சானிக் ஏவுகணை-ஸ்மார்ட் சோதனை வெற்றி

Google Oneindia Tamil News

டெல்லி: டார்பிடோவை ஏவ உதவும் சூப்பர்சானிக் ஏவுகணை (ஸ்மார்ட்) ஓடிசா கடலை ஒட்டிய வீலர் தீவில் 2020 அக்டோபர் 5ம் தேதி 11.45-மணிக்கு வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

வேகக் குறைப்பு மெக்கானிசத்தை நிலை நிறுத்துதல், டார்பிடோவை வெளிதள்ளுதல், மூக்கு கூம்பு பிரிதல்,ஏவுகணை விமானத்தின் வரம்பு மற்றும்உயரம் வரை உள்ளிட்ட அனைத்து இயக்க நோக்கங்களும் கச்சிதமாக நிறைவேற்றப்பட்டது.

 SMART successfully flight tested today from Wheeler Island off coast of Odisha

கடற்பகுதியை ஒட்டி உள்ள கண்காணிப்பு நிலையங்கள்(ரேடார்கள், ஆப்டிக்கல் சிஸ்டம்கள்) மற்றும் கீழ்நிலை கப்பல்கள் உள்ளிட்ட டெலிமெட்ரி நிலையங்கள் அனைத்து நிகழ்வுகளையும் கண்காணித்தன.

நீர்மூழ்கி எதிர்ப்பு போர் செயல்பாடுகளுக்கான குறைந்த எடை கொண்ட நீர்மூழ்கி எதிர்ப்பு டார்பிடோ முறையை டார்பிடோவின் இலக்கைத் தாண்டியும் ஏவ உதவும் ஏவுகணை ஸ்மார்ட் ஆகும். நீழ்மூழ்கி எதிர்ப்பு போர் திறன்களை நிறுவுவதில் இந்த ஏவுகணை சோதனையும், செயல்விளக்கமும் குறிப்பிடத்தக்க ஒன்றாக திகழ்கிறது.

ஸ்மார்ட் ஏவுகணைக்குத் தேவையான தொழில்நுட்பங்களை விசாகபட்டிணத்தில் உள்ள எஸ்டிஎல், ஆக்ராவில் உள்ள ஏடிஆர்டிஇ, ஐதராபாத்தில் உள்ள ஆர்சிஐ மற்றும் டிஆர்டிஎல் உள்ளிட்ட ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையத்தின் ஆய்வகங்களும் முன்னெடுத்தன.

இந்த முக்கியமான சாதனைகளுக்காக பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங் டிஆர்டிஓ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.

English summary
Supersonic Missile Assisted Release of Torpedo (SMART) has been successfully flight tested today 5th Oct 2020 at 1145 hrs from Wheeler Island off the coast of Odisha. All the mission objectives including missile flight upto the range and altitude, separation of the nose cone, release of Torpedo and deployment of Velocity Reduction Mechanism (VRM) have been met perfectly.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X