டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்த்தனவுக்கு இந்தியாவுடன் "இப்படி ஒரு நெருக்கமான உறவு" உள்ளது தெரியுமா?

Google Oneindia Tamil News

டெல்லி/கொழும்பு: இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள தினேஷ் குணவர்த்தனவின் குடும்பத்துக்கு இந்தியாவுடன் மிக நெருக்கமான உறவு உண்டு என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள்.

இலங்கையின் பொருளாதார சீரழிவானது அந்நாட்டின் அரசியலையே தலைகீழாகப் புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறது. பிரதமர் பதவியை விட்டு மகிந்த ராஜபக்சே ஓடினார். ஜனாதிபதியை பதவியை ராஜினாமா செய்த கோத்தபாய ராஜபக்சே, இலங்கையைவிட்டே தப்பிச் சென்றார்.

ராஜபக்சக்களும் ரணிலும் ஒன்னு தான்! இலங்கை பிரச்சினை இப்போதைக்கு முடியாது போல! ப.சிதம்பரம் பளீர்! ராஜபக்சக்களும் ரணிலும் ஒன்னு தான்! இலங்கை பிரச்சினை இப்போதைக்கு முடியாது போல! ப.சிதம்பரம் பளீர்!

 ஒற்றை எம்பி ரணில்

ஒற்றை எம்பி ரணில்

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக நாடாளுமன்ற எம்.பி.க்களாள் இப்போது ரணில் விக்கிரமசிங்கே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இத்தனைக்கும் இலங்கை நாடாளுமன்றத்தில் ரணிலின் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஒரே ஒரு எம்.பி. அதுவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.யும் அல்ல. நியமன எம்.பி. அந்த ஒரே ஒரு நியமன எம்.பி.யும் ரணில் விக்கிரமசிங்கேதான்.

 தினேஷ் குணவர்த்தன

தினேஷ் குணவர்த்தன

இதனைத் தொடர்ந்து இலங்கையின் புதிய பிரதமராக தினேஷ் குணவர்த்தன இன்று பதவியேற்றார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே முன்னிலையில் தினேஷ் குணவர்த்தன பதவியேற்றார். அடிப்படையில் தொழிற்சங்கவாதியாக இருந்தாலும் இனவாதிகளான ராஜபக்சேக்களின் மிக நெருக்கமானவர். தினேஷ் குணவர்த்தன தலைமையில் 18 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.

 தினேஷ் குணவர்த்தனவும் ராஜபக்சேக்களும்

தினேஷ் குணவர்த்தனவும் ராஜபக்சேக்களும்

இப்போது 73 வயதாகும் தினேஷ் குணவர்த்தன, கடந்த ஏப்ரல் மாதம் கோத்தபாய ராஜபக்சேவால் உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டவர். இலங்கையில் சுமார் 22 ஆண்டுகள் கேபினட் அமைச்சராகப் பதவி வகித்திருக்கிறார். அவர் மீது மிகப் பெரிய ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படவில்லை. இந்தியாவுடன் நல்லுறவு வளர்க்கப்பட வேண்டும் என்பதை பகிரங்கமாக வலியுறுத்தி வருபவர் தினேஷ் குணவர்த்தன.

Recommended Video

    Srilanka-வின் புதிய அதிபர்... யார் இந்த Ranil Wickremesinghe? *Srilanka
     தினேஷ் குணவர்த்தன- இந்தியா உறவு

    தினேஷ் குணவர்த்தன- இந்தியா உறவு

    இந்தியா மீது தினேஷ் குணவர்த்தனவேவுக்கு ஒரு சாப்ட் அப்ரோச் இருப்பதற்கு வரலாற்று ரீதியான பின்னணியும் உண்டு. தினேஷ் குணவர்த்தனவின் தந்தை பிலிப் குணவர்த்தனே, இலங்கையில் சோசலிசத்தை அறிமுகப்படுத்தியவர்கள் முதன்மையானவர். University of Wisconsin-ல் இந்தியாவின் புரட்சியாளர் ஜே.பி எனப்படும் ஜெயப்பிரகாஷ் நாராயணன் மற்றும் விகே கிருஷ்ணன் மேனன் ஆகியோரின் கிளாஸ்மேட் பிலிப் குணவர்த்தன. லண்டனில் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான இந்திய லீக்கின் தலைமை பொறுப்பும் வகித்தவர். 2-வது உலகப் போரின் போது பிலிப் குணவர்த்தனவும் அவரது மனைவி குசுமாவும் இலங்கையில் இருந்து தப்பி இந்தியாவுக்கு வந்தனர். இத்தகைய காரணங்களால் இந்தியாவுடனான நட்புறவில் தினேஷ் குணவர்த்தன அக்கறையுடன் செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Srilanka's New Prime Minister Dinesh Gunawardena had strong links with India.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X