எஸ்ஐஆர் சர்ச்சைக்கு நடுவே.. தமிழகம் உள்பட 17 மாநிலங்களில் SSR பணிகள்! தேர்தல் ஆணையம் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தமிழ்நாடு உள்பட 17 மாநிலங்களில் வாக்காளர் பட்டியலின் சிறப்பு சுருக்கத் திருத்தப் (SSR) பணியை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ள பஞ்சாப், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் இந்தப் பணி மேற்கொள்ளப்படுகிறது. தகுதியுள்ள புதிய வாக்காளர்களை, குறிப்பாக இளம் வாக்காளர்கள் மற்றும் முதல் முறையாக வாக்களிக்க உள்ளவர்களைப் பட்டியலில் சேர்ப்பதும், இரட்டைப் பதிவுகள் மற்றும் இறந்தவர்களின் பெயர்களை நீக்குவதும் இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர்களைச் சேர்ப்பதற்கும், பட்டியலில் விடுபட்டவர்களை இணைப்பதற்கும் தமிழ்நாடு உள்பட 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியலின் சிறப்பு சுருக்கத் திருத்தப்பணிகள் (SSR) நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

SSR exercises to be held in 17 states including Tamil Nadu Election Commission

பீகார், தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக எஸ்.ஐ.ஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடைபெற்றது. தற்போது கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இந்த பணிகளை தேர்தல் ஆனையம் மேற்கொண்டு வருகிறது.

எஸ்.ஐ.ஆரை வைத்து வாக்குரிமை பறிக்கப்படுவதாகவும், தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். இந்த பரபரப்புகளுக்கு மத்தியில், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த பணிகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மேற்கு வங்கம், உத்தர பிரதேசம், பஞ்சாப், பீகார், தமிழ்நாடு உள்ளிட்ட 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்தத் திருத்தப் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதில் புதிய வாக்காளர்கள் மற்றும் ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் இடம்பெறாமல் விடுபட்டவர்களைச் சேர்ப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2027 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் சேர்க்கை நடைபெறும். இதற்கான வரைவு வாக்காளர் பட்டியல் நவம்பர் 12 ஆம் தேதி வெளியிடப்படும். இறுதி வாக்காளர் பட்டியல் 2027 ஆம் ஆண்டு ஜனவரி 4 ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், விடுபட்டவர்கள், இளம் வாக்காளர்கள் மற்றும் முதன்முறையாக வாக்களிக்கத் தகுதி பெற்றவர்களைப் பட்டியலில் சேர்ப்பதற்கான சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டிருந்ததாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், அசாம், பீகார், சத்தீஸ்கர், கோவா, குஜராத், கேரளா, லட்சத்தீவு, மத்தியப் பிரதேசம், மணிப்பூர், புதுச்சேரி, பஞ்சாப், ராஜஸ்தான், தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்த பணிகள் நடைபெற உள்ளன. நவம்பர் 12 முதல் டிசம்பர் 11 வரை இந்த பணிகள் மேற்கொள்ளப்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+