டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆவணப்படத்தில் காளி போஸ்டர் சர்ச்சை.. லீனா மணிமேகலையை கைது செய்ய சுப்ரீம் கோர்ட் தடை

Google Oneindia Tamil News

டெல்லி: ஆவணப் படத்தில் காளி சிகரெட் பிடிப்பது போன்ற போஸ்டர் வெளியிட்டு பெரும் சர்ச்சையாகி இயக்குநர் லீனா மணிமேகலை மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில் அவரை கைது செய்யத் தடை விதித்து உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

இயக்குநர் லீனா மணிமேகலை காளி என்ற பெயரில் ஆவணப்படம் தயாரித்து வந்தார். அதுகுறித்த போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியிட்டார். இதில் காளி கையில் சிகரெட் வைத்திருப்பது போலவும், எல்ஜிபிடி கொடி வைத்திருப்பது போலவும் சித்தரிக்கப்பட்டிருந்தது.

 மணிமேகலை விருது.. குறிஞ்சிப்பாடி மகளிர் திட்ட வட்டார இயக்க மேலாளருக்கு வேளாண் அமைச்சர் பாராட்டு மணிமேகலை விருது.. குறிஞ்சிப்பாடி மகளிர் திட்ட வட்டார இயக்க மேலாளருக்கு வேளாண் அமைச்சர் பாராட்டு

மத உணர்வுகள்

மத உணர்வுகள்

இந்து மத உணர்வுகளை லீனா மணிமேகலை புண்படுத்திவிட்டார் என கூறி அவருக்கு எதிராக சமூகவலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்தன. டெல்லி அரசு, மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் லீனா மணிமேகலைக்கு எதிராக பலர் புகார் அளிக்கவே அவருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

 லீனா மணிமேகலை

லீனா மணிமேகலை

இந்த வழக்குகளுக்கு எதிராக லீனா மணிமேகலை தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தன் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்கவும், கைது செய்யாமல் இருக்கவும் பாதுகாப்பு கோரப்பட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் பிஎஸ் நரசிம்மா ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

உள்நோக்கம் இல்லை

உள்நோக்கம் இல்லை

லீனா மணிமேகலை தரப்பிஸ் வழக்கறிஞர் காமினி ஜெய்ஸ்வால் ஆஜராகினர். அப்போது ஜெய்ஸ்வால் கூறுகையில் மத உணர்வுகளை காயப்படுத்தும் எந்த உள்நோக்கமும் மணிமேகலைக்கு இல்லை. அவரை கைது செய்ய இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்றார். இதையடுத்து தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வு பிறப்பித்த உத்தரவில் மனுதாரருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருந்தது.

கைது செய்யக் கூடாது

கைது செய்யக் கூடாது

எனினும் அவரை கைது செய்யக் கூடாது. பல வழக்குகளில் எஃப்ஐஆர் பதிவு செய்வது முன்கூட்டிய தீர்மானமாகக் கூட இருக்கலாம். அனைத்து முதல் தகவல் அறிக்கையும் சட்டத்தின்படி ஒருங்கிணைக்கப்பட வேண்டும். இந்த வழக்கில் மத்திய அரசு, டெல்லி, மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம். உத்தரகாண்ட் அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறோம் என உத்தரவில் தெரிவித்தனர்.

English summary
Supreme Court bans to arrest Director Leena Manimegalai in Kali Poster Controversy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X