டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நீதிபதியாக LGBTQ செளரவ் கிர்பால்- மத்திய அரசு முடிவை நிராகரித்து மீண்டும் கொலிஜியம் பரிந்துரை!

Google Oneindia Tamil News

டெல்லி: தன்பால் ஈர்ப்பு (ஓரின சேர்க்கை) கொண்ட மூத்த வழக்கறிஞர் செளரவ் கிர்பால் நீதிபதியாக முடியாது என்ற மத்திய அரசின் முடிவுக்கு நீதிபதிகளை தேர்வு செய்யக் கூடிய உச்சநீதிமன்றத்தின் கொலிஜியம் குழு கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. பாலின அடிப்படையில் நீதிபதிகள் தகுதியை நிராகரிக்க கூடாது எனக் கூறி மீண்டும் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக செளரவ் கிர்பாலை நியமிக்க கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது. மூத்த வழக்கறிஞர் செளரவ் கிர்பால், உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த பி.என்.கிர்பாலின் மகன்.

மூத்த வழக்கறிஞர் செளரவ் கிர்பால், தன்பால் ஈர்ப்பு கொண்டவர். இவரது வாழ்க்கைத் துணையாக இருக்கும் நபர் சுவிஸ் நாட்டைச் சேர்ந்தவர். செளரவ் கிர்பாலை டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக 2021-ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தின் கொலிஜியம் குழு மத்திய அரசுக்கு பரிந்துரைத்தது. ஆனால் மத்திய அரசு செளரவ் கிர்பால் நியமனத்தை ஏற்காமல் திருப்பி அனுப்பி வைத்தது.

Supreme Court Collegium again recommends of Gay lawyer Saurabh Kirpal as Judge

மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு உச்சநீதிமன்ற கொலிஜியம் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளது. மேலும், ஓரின சேர்க்கையில் ஈடுபாடு கொண்டவர் என்பதாலேயே செளரவ் கிர்பாலுக்கு நீதிபதி பதவியை நிராகரிப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்கின்றனர் கொலிஜியம் குழுவில் இடம்பெற்றுள்ள உசநீதிமன்ற நீதிபதிகள்.

நீதிபதிகளை தேர்வு செய்யக் கூடிய உச்சநீதிமன்றத்தின் கொலிஜியம் குழுவில் தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், கேஎம் ஜோசப் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இக்குழுவானது செளரவ் கிர்பாலை டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க வேண்டும் என மீண்டும் பரிந்துரைத்துள்ளது. இந்த பரிந்துரையின் போதுதான் பாலின வேறுபாடு கூடாது என்கிற கருத்தை நீதிபதிகள் வலியுறுத்தி உள்ளனர்.

2018-ம் ஆண்டு ஓரினச் சேர்க்கை என்பது இந்தியாவில் குற்றம் இல்லை என உச்சநீதிமன்றம் மிக முக்கியமான தீர்ப்பு வழங்கியது. தன்பால் ஈர்ப்பு அல்லது ஓரினச் சேர்க்கையாளர்களாகிய LGBTQ சமூகத்துக்கான மிகப் பெரிய உரிமையாக இது கொண்டாடப்பட்டது. இந்த தீர்ப்பை வாதாடிப் பெற்றதில் செளர்வ் கிர்பாலின் பங்கு மிக முக்கியமானது. ஓரினச் சேர்க்கை குற்றம் அல்ல என வழக்கு தொடர்ந்த 2 பேரின் சார்பாக உச்சநீதிமன்றத்தில் வாதாடியவர் செளரவ் கிர்பால்.

நீதிபதியாக செளரவ் கிர்பாலை 2018-ம் ஆண்டு பரிந்துரைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனாலும் பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டி நீதிபதியாகும் தகுதி அவருக்கு மறுக்கப்பட்டது.

குறிப்பாக செளரவ் கிர்பாலின் வாழ்க்கை துணையாக இருக்கும் நபர் சுவிஸ் நாட்டைச் சேர்ந்தவர். இதனால் தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்கிறது உளவு அமைப்புகள். இந்த கருத்தையே மத்திய அரசும் சுட்டிக்காட்டுகிறது. ஆனால் கொலிஜியம் குழுவில் உள்ள உச்சநீதிமன்ற நீதிபதிகளோ, நாட்டின் மிக முக்கிய பொறுப்பில் உள்ளவர்களின் வாழ்க்கை துணை என்பவர்கள் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். அவர்கள் மூலம் எல்லாம் ஏற்படாத தேச பாதுகாப்புக்கான ஆபத்து செளரவ் கிர்பாலின் வாழ்க்கை துணை மூலம் எப்படி ஏற்படும் எனவும் கேள்வி எழுப்புகின்றனர்.

இந்த சர்ச்சை தொடர்பாக முன்னர் செளரவ் கிர்பால் விளக்கமும் அளித்திருந்தார். இது தொடர்பாக ஒரு பேட்டியில் கூறியிருத செளரவ் கிர்பால், என்னுடன் வாழ்க்கை துணையாக இருக்கும் நபர் 20 ஆண்டுகளாக இருக்கிறார். ஆகையால் அவரை மையமாக வைத்து நீதிபதியாகும் தகுதி நிராகரிக்கப்படுகிறது என்பதை எல்லாம் நம்ப முடியாது. என் பாலின ஈர்ப்பு உணர்வை மையாக வைத்துதான் முடிவெடுக்கிறார் எனவும் கூறியிருந்தார் செளரவ் கிர்பால். 2020-ம் ஆண்டும் செளரவ் கிர்பால் பெயர், நீதிபதியாக பரிந்துரைக்கப்பட்டது.

யார் இந்த செளரவ் கிர்பால்?

டெல்லியில் கல்வி கற்ற செளரவ் கிர்பால், ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் சட்டம் பயின்றார். கேம்பிரிட்ஸ் பல்கலைக் கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றார். ஜெனிவாவில் ஐநாவில் சில ஆண்டுகள் பணிபுரிந்தார். 1990களில் தாய்நாடு திரும்பினார். இவரது தந்தை உச்சநீதிமன்றத்தின் 31-வது தலைமை நீதிபதி பிஎன் கிர்பால் என்பதும் குறிப்பிடத்தக்கது.

English summary
The Supreme Court Collegium again recommended of Gay lawyer Saurabh Kirpal as Delhi High court Judge
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X