கரூர் சம்பவம்! அரசு வேலை வழங்குவதை தடுக்க நீங்கள் யார்? நாதகவுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்
டெல்லி: கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்குவதில் அரசியல் செய்யக் கூடாது என மனுதாரரான நாம் தமிழர் கட்சி பிரமுகருக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் கடும் கண்டனத்தை தெரிவித்தனர்.
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் 31 பேருக்கு அரசு பணியை தவெக அரசு வழங்கியது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நாதக பிரமுகர் மனுதாக்கல் செய்திருந்தார்.

அப்போது நீதிபதிகள், கரூர் சம்பவத்தில் அரசுப் பணி வழங்கியதற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இதையடுத்து உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசும், பாதிக்கப்பட்டவர்களும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர்.
அந்த மனு மீது உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, வினோத் சந்திரன் ஆகியோர் அமர்வில் இன்று விசாரணை நடந்தது. அப்போது நாதக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 3 முறை நிவாரணங்கள் வழங்கப்பட்டுவிட்டன.
அப்படியிருக்கும் போது ஒரே சம்பவத்திற்கு மீண்டும் மீண்டும் நிவாரணம் வழங்கக் கூடாது. டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் அரசு பணிகளுக்கு ஆட்கள் நியமிக்கப்பட வேண்டிய நிலையில் இப்படி தகுதியில்லாமல் நியமிப்பது தவறான முன்னுதாரணம் என தெரிவித்தார்.
இதையடுத்து தமிழக அரசு தரப்பில் அபிஷேக் சிங்வி, முகுல் ரோத்தகி ஆகியோர் ஆஜராகி, கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப நிலவரத்தை விளக்கினர்.
இதையடுத்து நீதிபதிகள் கூறுகையில், கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு பணி வழங்கக் கூடாது என சொல்வதற்கு நீங்கள் யார்? என கேட்டனர். அதற்கு அந்த நபர், "நான் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்" என தெரிவித்தார்.
உடனே நீதிபதிகள், இப்போது புரிகிறது. உங்கள் மனுத்தாக்கில் ஒரு அரசியல் இருக்கிறது நன்றாக புரிகிறது. கரூர் துயர சம்பவத்தில் அரசியல் செய்யக் கூடாது. கரூர் சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு பணி கொடுத்தால் அதை ஏன் தடுக்கிறீர்கள்? உங்களுக்கு என்ன பிரச்சினை
பாதிக்கப்பட்டவர்கலுக்கு பணமாகவோ அரசுப் பணியாகவோ நிவாரணம் வழங்குவதில் என்ன தவறு இருக்கிறது கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர், அவரது குடும்பத்தில் ஒரே வருமானம் ஈட்டுபவர் என்றால் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கக் கூடாதா? என கேள்வி எழுப்பியிருந்தனர்.
முன்னதாக இந்த வழக்கு விசாரணை தொடங்குவதற்கு முன்னர் நீதிபதிகள் தங்களுக்கு ஏதோ ஆலோசனை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து கரூர் கூட்ட நெரிசல் ஏற்பட்டு உயிரிழந்தோர் குடும்பத்திற்கு அரசு பணி ஆணையை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவிற்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.


Click it and Unblock the Notifications
