டெல்லி போராட்டம்! மாணவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது! உச்சநீதிமன்றம் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நீட் போராட்டத்தில் ஈடுபட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்ட மாணவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் மாணவர்கள் மீது தடியடி நடத்திய விவகாரத்தில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே 3 ஆம் தேதி நாடு முழுவதும் நடந்தது. இந்த தேர்வில் வினாத்தாள் கசிவு ஏற்பட்டு முறைகேடு நடந்ததாக கூறி தேசிய தேர்வுகள் முகமையே இந்த தேர்வை ரத்து செய்துவிட்டு மறுத்தேர்வு நடத்தியது.

delhi supreme court

இந்த நிலையில் வினாத்தாள் கசிவை கண்டித்து கடந்த 20ஆம் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி கட்சியினர் போராட்டம் நடத்தினர். மேலும் அவர்கள் நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்லவும் தயாராக இருந்தனர்.

இந்த போராட்டங்களை ஒடுக்கும் வகையில் மாணவர்கள் மீது போலீஸார் கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டனர். இந்த தாக்குதல்களில் பலர் காயமடைந்தனர்.

இந்த நிலையில் போலீஸாரின் இந்த தடியடியை கண்டித்து உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தலைமை நீதிபதி கூறியிருப்பதாவது: அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் உரிமையை அரசியல் சாசனம் வழங்கியுள்ளது. மக்களின் போராடும் உரிமையை யாரும் மறுக்க முடியாது.

போராட்டம் நடத்துகிறார்கள் என்பதற்காகவே அவர்களிடம் போலீஸார் அத்துமீறி, அதிகார துஷ்பிரயோகம் செய்ததை நியாயப்படுத்தவே முடியாது. அதே போல் போலீஸாரும் தாக்கப்பட்டது கவலைக்குரியதாகும். போராட்டம் நடத்தினாலே தடியடி நடத்த வேண்டும் என்பது தவறு. யாராக இருந்தாலும் உணர்வுப்பூர்வ விஷயங்களில் சுய கட்டுப்பாடு முக்கியம் என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இந்த தடியடி தொடர்பான புதிய மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் அனைத்து மனுக்கள் மீது இன்று விசாரணை நடைபெற்றது.

அப்போது நீதிபதி சூர்யகாந்த் தனது உத்தரவில், கைது செய்யப்பட்டுள்ள மாணவர்களை விடுவிக்க வேண்டும். வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள மாணவர்கள்
மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது. குர்றப் பின்னணி இல்லாத மாணவர்கள் சிறையில் இருந்தால் அவர்களை விடுவிக்க வேண்டும். சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு (எஸ்ஐடி) உத்தரவிடுவதாக தெரிவித்தார்.

போராட்டத்தின் போது மாணவர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் டெல்லி, பீகார், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. சிசிடிவி உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் பாதுகாத்து வைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார் நீதிபதி. மேலும் இந்த வழக்கு ஆகஸ்ட் 3 ஆம் தேதிக்கு ஒத்தி வை்க்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+