"இந்த" வகை கார்களுக்கு நாடு முழுக்க தடை? உச்ச நீதிமன்றம் சொன்ன வார்த்தை! கார் பிரியர்கள் அதிர்ச்சி
டெல்லி: இந்தியாவில் சொகுசு கார்களுக்கு முழுமையாகத் தடை விதிப்பது தொடர்பாக மத்திய அரசு யோசிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. வெகு சிலரால் மட்டுமே சொகுசு கார்களை வாங்க முடியும் என்பதால் இதனால் பெரிய பாதிப்பு இருக்காது என்றும் தெரிவித்தனர். அரசும் இந்த யோசனையை ஆதரிப்பதாக அட்டர்னி ஜெனரல் தெரிவித்தார்.
இந்தியாவில் இப்போது கார் சந்தை வேகமாக அதிகரித்து வருகிறது. அதிகரிக்கும் டிராபிக், வெயில் உள்ளிட்ட காரணங்களால் கார்கள் கிட்டத்தட்ட மிடில் கிளாஸ் மக்களுக்கும் அவசியமான ஒன்றாக மாறுகிறது. அதிலும் சமீபத்தில் சில ஆண்டுகளாகச் சொகுசு கார் விற்பனை இந்தியாவில் கணிசமாக அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே சொகுசு கார்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் சில கருத்துகளைக் கூறியுள்ளது.

உச்ச நீதிமன்றம்
அதாவது மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க மத்திய அரசு வகுத்த திட்டங்களைச் சரியாகச் செயல்படுத்த, சொகுசு பெட்ரோல் மற்றும் டீசல் கார்களுக்கு தடை விதிப்பது ஒரு நல்ல தொடக்கமாக அமையும் என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
மத்திய அரசின் மின்சார வாகன மேம்பாட்டுக் கொள்கைகளைச் சரியாக அமல்படுத்த வேண்டும் எனச் சொல்லி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் ஜாய்மால்யா பக்ஜி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தான் நீதிபதிகள் இந்தக் கருத்துகளைத் தெரிவித்தனர்.
சொகுசு கார்கள்
இது தொடர்பாக நீதிபதி சூர்யா காந்த் மேலும் கூறுகையில், "இந்த விவகாரத்தைக் கையாள்வதில் எனக்கு ஒரு யோசனை இருக்கிறது. இப்போது சந்தையில் பல மின்சார வாகனங்கள் இருக்கிறது. பெரிய சைஸ் கார்களும் உள்ளன. இவை பல விஐபிகளும் பெரிய நிறுவனங்களும் பயன்படுத்தும் சொகுசு கார்களுக்கு இணையான வசதிகளைக் கொண்டிருக்கின்றன.
முதலில் மிக உயர்ந்த சொகுசு வாகனங்களுக்குத் தடை விதிப்பது பற்றி யோசியுங்கள். இந்தத் தடை எந்த விதத்திலும் சாமானிய மக்களைப் பாதிக்காது. ஏனெனில் இந்திய மக்கள் தொகையில் மிகச் சிறிய பகுதியினரால் மட்டுமே அத்தகைய வாகனங்களை வாங்க முடியும்" என்றார்.
மத்திய அரசு
இந்த யோசனையை அரசு ஆதரிப்பதாக மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் ஆர். வெங்கடரமணி தெரிவித்தார். இந்தப் பிரச்சினையைக் கையாள 13 அமைச்சகங்கள் ஈடுபட்டுள்ளதாகவும், அரசு இந்த விஷயத்தில் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அவர் விளக்கினார்.
மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், மின்சார வாகனங்களின் விலை முன்பு அதிகமாக இருந்ததாகவும் இதனால் அப்போது மக்களை ஊக்குவிக்க ஊக்கத் தொகைகள் தரப்பட்டதாகக் குறிப்பிட்டார். இப்போது விலை குறைந்துவிட்டாலும் இப்போது மின்சார கார்களுக்கு போதுமான சார்ஜிங் நிலையங்கள் இல்லாதது முக்கிய சவாலாக மாறியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
உச்ச நீதிமன்றம் கருத்து
அப்போது குறுக்கிட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், "மின்சார வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது மேலும் கூடுதல் சார்ஜிங் நிலையங்கள் வரும். இது மார்கெட் தொடர்பான பிரச்சினைகள். மின்சார வாகனங்கள் அதிகரிக்கும்போது, சார்ஜிங் நிலையங்களும் தானாகவே உருவாகும்.. மேலும், பெட்ரோல் பம்புகளிலும் சார்ஜிங் வசதிகளை அறிமுகப்படுத்த வேண்டும். இதற்காக மின்சார வாகனக் கொள்கையை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கலாம்" என்றார்.
இது தொடர்பாக மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பாக விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்யவுள்ளதாக அட்டர்னி ஜெனரல் தெரிவித்தார். இதையடுத்து இந்த வழக்கு அடுத்த நான்கு வாரங்கள் ஒத்திவைக்கப்பட்டது.
-
இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்.. டிரம்பின் பகீர் குற்றச்சாட்டும், பின்னணியும்! -
நடுக்கடலில் தத்தளித்த இந்தியர்கள்.. அடுத்த நொடி அமெரிக்க செய்த காரியம்.. மீண்டும் மீண்டுமா.! -
டிரைவர் மறந்தாலும் தானாக பிரேக் பிடிக்கும்! கார்களில் புதிய தொழில்நுட்பத்துக்கு மத்திய அரசு அனுமதி -
சீனா, பாகிஸ்தானுக்கு ஷாக் கொடுத்த இந்தியா! 2 நாட்களில்.. 3 ஏவுகணை சோதனைகள்! DRDO அசத்தல்! -
13 நாள் மனைவியுடன் கணவர் பேசாதது மனரீதியான கொடுமை அல்ல! கோவை இளைஞர் வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி -
இந்திய மாலுமிகள் மீது அட்டாக்! அமெரிக்க வெளியுறவு செயலாளரை கூப்பிட்டு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங்












Click it and Unblock the Notifications