அரசு பள்ளி தூய்மை பணியாளரின் ஓய்வூதிய உரிமைகளை பெற துணை நின்ற உச்சநீதிமன்றம்.. தமிழக அரசுக்கு குட்டு
டெல்லி: தூய்மை பணியாளர் ஓய்வூதியம் பெற உரிமை உள்ளது என அவருக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து ரூ 1 லட்சம் அபராதம் செலுத்த உத்தரவிட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை அடுத்த விரிகோடைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவர் அரசு பள்ளியில் தூய்மை பணியாளராக கடந்த 1992 ம் ஆண்டு சேர்ந்தார். இவருக்கு ஆரம்ப கால தொகுப்பு ஊதியமாக மாதம் ரூ 150 வழங்கப்பட்டது.
இந்த நிலையில் இவருடைய பணி 2002 ஆம் ஆண்டு நிரந்தரம் செய்யப்பட்டது. இதையடுத்து 2012 இல் லட்சுமணன் ஓய்வு பெற்றார். தனது பணியை நிரந்தரப்படுத்துவதற்கு முன் உள்ள சேவையை கணக்கில் எடுத்துக் கொண்டு தனக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என அவர் விண்ணப்பித்துள்ளார்.

தமிழக பள்ளிக் கல்வித் துறை
ஆனால் தமிழக பள்ளிக் கல்வித் துறையோ அவ்வாறு கணக்கிட்டு ஓய்வூதியம் வழங்க மறுத்தது. இதையடுத்து அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி, லட்சுமணனுக்கு ஓய்வூதிய பலன்களை வழங்குமாறு கடந்த 2017ஆம் ஆண்டே தமிழக பள்ளிக் கல்வித் துறைக்கு உத்தரவிட்டது.

சென்னை உயர்நீதிமன்றம்
இதை எதிர்த்து தமிழக பள்ளிக் கல்வித் துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை 2020 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும் லட்சுமணனுக்கு ஓய்வூதிய பலன்களை கணக்கிட்டு 8 வாரங்களுக்குள் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மறு ஆய்வு
இதையடுத்து அந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவையும் சென்னை உயர்நீதிமன்றம் இந்த ஆண்டு மார்ச் 2 ஆம் தேதி தள்ளுபடி செய்தது. இதனால் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

உச்சநீதிமன்றம்
இந்த வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தலைமையிலான அமர்வு விசாரித்தது. இது தொடர்பாக நீதிபதி வெளியிட்ட தீர்ப்பில், லட்சுமணனுக்கு அவருடைய ஓய்வூதிய பலன்களை பெற உரிமை உள்ளது. உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டும் தூய்மை பணியாளருக்கு ஓய்வூதிய பலன்களை வழங்காமல் இத்தனை ஆண்டுகளாக இந்த வழக்கை தேவையில்லாமல் தமிழக பள்ளிக் கல்வித் துறை இழுத்தடித்துள்ளது.

ரூ 1 லட்சம் அபராதம்
எனவே ரூ 1 லட்சம் அபராதத்தை தமிழக பள்ளிக் கல்வி துறை செலுத்துமாறு உத்தரவிட்டு இந்த வழக்கை தள்ளுபடி செய்வதாக நீதிபதி அறிவித்தார். மேலும் மாநில அரசு செலுத்தும் ரூ 1 லட்சம் அபராத பணத்தை உச்சநீதிமன்ற ஊழியர்கள்நலச் சங்கத்தில் டெபாசிட் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கை இழுத்தடித்ததற்கான செலவை அரசு அதிகாரிகளிடமே வசூலிக்க லட்சுமணனுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

90 நாட்கள்
பொதுவாக உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய 90 நாட்கள் மட்டுமே கால அவகாசம் உள்ளது. ஆனால் லட்சுமணன் விவகாரத்தில் பள்ளிக் கல்வித் துறையின் முதன்மைச் செயலாளர் கொரோனா காலகட்டத்தை சேர்க்காமல் 156 நாட்கள் தாமதமாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த காலதாமதமாக மேல்முறையீடு செய்ததற்கு மாநில அரசு எந்தஒரு உறுதியான காரணத்தையும் சொல்லவில்லை. எனவே ஒட்டுமொத்தமாக பார்த்தோமேயானால் மாநில அரசின் மேல்முறையீட்டு மனு தாமதத்தை இந்த கோர்ட் ஏற்கவில்லை என்றும் நீதிபதி தெரிவித்திருந்தார்.

தூய்மை பணியாளர்
தூய்மை பணியாளரின் ஓய்வூதிய உரிமைகளை காத்து அவருக்கு சாதகமான தீர்ப்பை வழங்கிய உச்சநீதிமன்றத்தின் உத்தரவானது தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்டின் சமீபத்திய கருத்துகளுடன் ஒத்து போகின்றன. அதாவது சாதாரண மனிதர்களின் கஷ்டங்களையும் போராட்டங்களையும் கேட்பதற்காக உச்சநீதிமன்றம் உள்ளது. குடிமக்களின் உரிமைகளை பாதுகாப்பதே நீதிமன்றங்களின் முக்கிய பங்கு என தலைமை நீதிபதி சந்திரசூட் அடிக்கடி குறிப்பிடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications