வரியை போட்டு தாக்கிய டிரம்ப்.. அடுத்து இந்தியா என்ன செய்யப்போகிறது? மத்திய அரசு கொடுத்த ரியாக்‌ஷன்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 27 சதவீதம் வரியை டிரம்ப் அறிவித்து இருக்கிறார். டிரம்பின் இந்த வரி விதிப்பு நடவடிக்கையால், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்கள் மீது கடுமையான வரி விதிக்கப்படும். இந்த நிலையில் அமெரிக்காவின் வரி விதிப்புக்கு நடவடிக்கை தொடர்பாக இந்தியா என்ன கூறியுள்ளது என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

அமெரிக்கா அதிபராக கடந்த ஜனவரி மாதம் டொனால்டு டிரம்ப் பதவியேற்றதையடுத்து பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதில், தற்போது சர்வதேச அளவில் பொருளாதார நெருக்கடியை அளிக்கும் விதமாக டிரம்ப் பரஸ்பர வரியை அறிவித்து இருக்கிறார். அந்த வகையில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 27 சதவீதம் வரியை டிரம்ப் அறிவித்து இருக்கிறார்.

talks-with-us-for-a-multi-sectoral-trade-agreement-says-india-after-trump-imposed-reciprocal-tariff

இந்தியாவின் கருத்து

டிரம்பின் இந்த வரி விதிப்பு நடவடிக்கையால், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்கள் மீது கடுமையான வரி விதிக்கப்படும். வரி விதிப்பு நடவடிக்கை இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று சொல்லப்படுகிறது. டிரம்ப் பரஸ்பர வரி விதிப்பு அறிவிபுக்கு பிறகு இந்திய அரசு இது தொடர்பாக கருத்துக்களை கூறியுள்ளது. இந்திய அதிகாரிகள் கூறியிருப்பதாவது:-

பரஸ்பரம் பயனளிக்கும் வகையிலும் பல்துறை இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாகவும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. டிரம்ப் விதித்த இந்த வரி விதிப்பால் ஏற்படும் சிக்கல்கள் பற்றி அதிகாரிகள் உன்னிப்பாக ஆய்வு செய்து வருகிறார்கள். டொனால்டு டிரம்ப் தனது வர்த்தக கூட்டாளி நாடுகளிடம் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவிதம் முதல் 50 சதவீதம் வரியை விதித்து இருக்கிறார்.

கூடுதலாக 27 சதவீதம் வரி விதிப்பு

இதில், "10% அடிப்படை வரி ஏப்ரல் 05, 2025 முதல் அமலுக்கு வரும். கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கான வரி ஏப்ரல் 9 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும். இந்தியாவுக்கு கூடுதலாக 27 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. வளர்ந்த பாரதம் என்ற தொலைநோக்கு பார்வையை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட தரப்பிடம் இந்தியா ஆலோசித்து வருகிறது. இந்திய தொழில்துறை மற்றும் ஏற்றுமதியாளர்களிடம் ஆலோசனை நடைபெற்று வருகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய தொழில் துறை மற்றும் வர்த்தக துறை இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

வரி விதிப்பை அமல்படுத்துவதாக பேசிய டிரம்ப்

அமெரிக்க பொருள்கள் மீது அதிக இறக்குமதி வரி விதிக்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளின் பொருட்களுக்கு அமெரிக்காவிலும் பரஸ்பரம் அதே அளவு இறக்குமதி வரி விதிப்பதாக அதிபர் டிரம்ப் கூறினார். இந்த வரி விதிப்பு ஏப்ரல் 2 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறினார். இதன்படி, இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவு 1.30 மணிக்கு பல்வேறு நாடுகளின் பொருட்களுக்கு இறக்குமதி வரிகளை விதித்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி விதிக்கும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு, அந்தந்த நாடுகளில் விதிக்கப்படும் வரியில் இருந்து பாதி அளவு வரி விதித்து டிரம்ப் நடவடிக்கை எடுத்துள்ளார். அதன்படி, அமெரிக்காவில் இந்திய பொருட்களுக்கு 27 சதவீதம் இறக்குமதி வரி விதித்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

மோடி எங்களை சரியாக நடத்தவில்லை

நான் மோடியிடம் 'நீங்கள் எனக்கு ஒரு நண்பர், ஆனால் நீங்கள் எங்களை சரியாக நடத்தவில்லை' என்று சொன்னேன். அமெரிக்கா பல ஆண்டுகளாக இந்திய பொருட்களுக்கு இறக்குமதி வரி விதிக்கவில்லை. இந்தியா எங்கள் பொருட்களுக்கு 52 சதவீதம் வரி விதிக்கிறது. எனவே நாங்கள் இந்திய பொருட்களுக்கு பாதியாக, அதாவது 27 சதவீதம் வரி விதித்து உள்ளோம் என்றும் டிரம்ப் கூறினார்.

டிரம்ப் அறிவிப்பு தொடர்பாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் கூறுகையில், அமெரிக்காவில் தொடர்ச்சியாக ஏற்பட்டு வரும் வர்த்தக பாதிப்புகள் காரணமாக புதிய இறக்குமதி வரி விதிப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. அடிப்படை வரியாக 10 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு வரிவிதிப்பு நடைமுறை வருகிற 5-ந்தேதி நள்ளிரவு 12.01 மணிக்கு (இந்திய நேரப்படி காலை 9.30 மணி) தொடங்கும். அதிக வரிகள் விதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கான வரிவிதிப்பு நடைமுறை வருகிற 9-ந்தேதி நள்ளிரவு 12.01 மணி முதல் அமலுக்கு வரும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வர்த்தக போர் அபாயம்

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் இந்த நடவடிக்கைக்கு இந்தியா உள்பட பல்வேறு நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதனால் உலக நாடுகளிடையே வர்த்தக போர் தொடங்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏராளமான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தற்போது டிரம்ப் விதித்துள்ள இந்த வரி விதிப்பு நடவடிக்கை காரணமாக இந்தியாவில் ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

அதேபோல, இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரிவிதிப்பு காரணமாக இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எப்படி பார்த்தாலும் இந்த வரி விதிப்பு நடவடிக்கை இந்தியாவுக்கு இழப்பு ஏற்படுத்தும் விதமாகவே உள்ளது. இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு கடந்த 2024-ம் ஆண்டு மட்டும் ரூ.11 லட்சம் கோடி ஏற்றுமதி வர்த்தகம் நடைபெற்று உள்ளது.

ரூ.70 ஆயிரம் கோடி

இந்தியாவில் உள்ள விவசாய பொருட்கள் மற்றும் அரிசி, இறால், தேன், காய்கறி ஜூஸ், ஆமணக்கு எண்ணெய், மிளகு உள்ளிட்ட பல பொருட்கள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. தற்போது டிரம்ப் அறிவித்து இருக்கும் வரி விதிப்பால் இந்த பொருட்களுக்கு வரி அதிகம் போடப்படும். இதனால், இந்த பொருட்களின் ஏற்றுமதி பாதிக்கப்படும்.

விவசாய பொருட்கள் மட்டும் ரூ.70 ஆயிரம் கோடி அளவுக்கு அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. டிரம்பின் தற்போதைய வரி விதிப்பு நடவடிக்கையால் 30 ஆயிரம் கோடி அளவுக்கு வர்த்தகம் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. அமெரிக்காவில் இருந்து நம் நாடு,
பாதாம், வால்நட், பிஸ்தா, ஆப்பிள், பருப்பு வகைகள் ஆகியவை இறக்குமதி செய்கிறது.

இந்த பொருட்களுக்கு இந்தியாவில் 52 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. தற்போது விதிக்கப்பட்டு இருக்கும் பரஸ்பர வரி விதிப்பால் இந்தியாவில் அமெரிக்க பொருட்களுக்கு வரியை குறைக்க வேண்டிய நெருக்கடிக்கு டிரம்ப் மறைமுகமாக தள்ளியுள்ளார்.


டிரம்பின் வரி விதிப்பு

சீனா: 34%
இலங்கை: 44%
தாய்லாந்து: 36%
பாகிஸ்தான்: 29%
மியான்மர்: 44%
வியட்நாம்: 46%
தைவான்: 32%
ஜப்பான்: 24%
தென் கொரியா: 25%

சுவிட்சர்லாந்து: 31%
இந்தோனேசியா: 32%
மலேசியா: 24%
கம்போடியா: 49%
இங்கிலாந்து: 10%
ஐரோப்பிய ஒன்றியம்: 20%

தென்னாப்பிரிக்கா: 30%
பிரேசில்: 10%
வங்காளதேசம்: 37%
சிங்கப்பூர்: 10%
இஸ்ரேல்: 17%
பிலிப்பைன்ஸ்: 17%
சிலி: 10%
ஆஸ்திரேலியா: 10%
துருக்கி: 10%

கொலம்பியா: 10%
பெரு: 10%
நிகரகுவா: 18%
நார்வே: 15%
ஜோர்டான்: 20%
டொமினிகன் குடியரசு: 10%
சவுதி அரேபியா: 10.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+