முதற்கட்ட லோக்சபா தேர்தல் நிறைவு.. 5 மணி நிலவரம்: அதிகபட்சமாக மேற்கு வங்கத்தில் 77.57% வாக்குகள் பதிவு
டெல்லி: தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் 102 லோக்சபா தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை லோக்சபா தேர்தல் நடத்தப்பட்டு புதிய அரசு தேர்வு செய்யப்படுகிறது. அந்த வகையில் தற்போது மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் பதவிக்காலம் விரைவில் முடிவுக்கு வருகிறது. எனவே புதிய அரசை தேர்வு செய்வதற்காக கடந்த மாதம் 16 ஆம் தேதி லோக்சபா தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்தது.

தமிழ்நாடு, புதுவை: அதன்படி நாட்டில் லோக்சபா தேர்தல் இன்று தொடங்கி ஜூன் 1 வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட லோக்சபா தேர்தலுக்கான தேதியை கடந்த மாதம் 16 ஆம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது. தமிழ்நாடு, புதுவையில் ஒரே கட்டமாக இன்று வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்றது.
இதேபோல், தமிழகத்தில் காலியாக உள்ள விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. 7-வது கட்ட மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1 ஆம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 04 ஆம் தேதி நடைபெறுகிறது.
102 தொகுதிகள்: முதற்கட்டமாக இன்று 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 லோக்சபா தொகுதிகளுக்கு இன்று ஓட்டுப்பதிவு தொடங்குகிறது. அருணாசலபிரதேசம் - 2, அசாம் - 5, பீகார் - 4, சத்தீஸ்கர் - 1, மத்திய பிரதேசம் - 6, மகாராஷ்டிரா - 5, மணிப்பூர் - 2, மேகாலயா - 2, மிசோரம் -1, நாகலாந்து - 1, ராஜஸ்தான் - 12, சிக்கிம் - 1, தமிழ்நாடு - 39, திரிபுரா - 1, உத்தர பிரதேசம் - 8, உத்தரகாண்ட் - 5, மேற்கு வங்கம் - 3, அந்தமான் நிக்கோபர் தீவுகள் - 1, ஜம்மு காஷ்மீர் - 1, லட்சத்தீவு - 1, புதுச்சேரி - 1. ஆகிய தொகுதிகளில் வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவு பெற்றது. அருணாசல பிரதேசம், சிக்கிம் ஆகிய மாநிலங்களில் மட்டும் 5 மணியுடன் வாக்குப்பதிவு முடிந்தது. அந்த இரு மாநிலங்களிலும் சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடைபெற்றது. மாலை 5 மணி நிலவரப்படி கிட்டதட்ட 59.71 0 சதவிகித வாக்குகள் பதிவானது. அதிகபட்சமாக மேற்கு வங்கத்திலும், குறைந்தபட்சமாக பீகாரிலும் வாக்குபதிவாகியுள்ளது.
மாலை 5 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு சதவிகிதம் விவரம் வருமாறு:
* அந்தமான் நிகோபார் (1 தொகுதி): 56.87 சதவிகிதம்
* அருணாசல பிரதேசம்,(2): 64.07 சதவிகிதம்
* அசாம் (5 தொகுதி): 70.07 சதவிகிதம்
* பீகார்(04 சதவிகிதம்); 46.32 சதவிகிதம்
* சத்தீஷ்கர்(1 தொகுதி): 63.41 சதவிகிதம்
* ஜம்மு காஷ்மீர் (1 தொகுதி): 65.08 சதவிகிதம்
* லட்சத்தீவு (1 தொகுதி) : 59.02 சதவிகிதம்
* மத்திய பிரதேசம் (6 தொகுதி): 63.25 சதவிகிதம்
* மகராஷ்டிரா (5 தொகுதி): 54.85 சதவிகிதம்
* மணிப்பூர் (2 தொகுதி)ள் 68.62 சதவிகிதம்
* மேகலாயா (02 தொகுதி): 69.91 சதவிகிதம்
* மிசோரம் (1 தொகுதி): 53.96 சதவிகிதம்
* நாகலாந்து (1 தொகுதி): 56.18 சதவிகிதம்
* புதுவை (01 தொகுதி)72.84 சதவிகிதம்
* ராஜஸ்தான் (12 தொகுதி): 50.27 சதவிகிதம்
* சிக்கிம் (1 தொகுதி): 68.06 சதவிகிதம்
* தமிழ்நாடு (39 தொகுதிகள்): 62.08 சதவிகிதம்
* திரிபுரா (01 தொகுதி); 76.10 சதவிகிதம்
* உத்தர பிரதேசம் (8 தொகுதி): 57.54 சதவிகிதம்
* உத்தரகாண்ட் (05 தொகுதி); 53.56 சதவிகிதம்
* மேற்கு வங்காளம் (03 தொகுதி): 77.57 சதவிகிதம் பதிவாகியுள்ளது.
இன்று வாக்குப்பதிவு நடைபெற்ற 102 லோக்சபா தொகுதிகளில் கடந்த ஒரு மாதமாக கொளுத்தும் வெயிலுக்கு மத்தியிலும் தேர்தல் பிரசாரம் அனல் பறந்தது. தேசிய மற்றும் மாநில கட்சி தலைவர்கள் சூறாவளியாக சுழன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இதனால் கடந்த ஒரு மாத காலம் தேர்தல் களம் அனல் பறந்தது. நேற்று முன்தினம் மாலையுடன் பிரசாரங்கள் ஓய்ந்தது.
இன்று தொடங்கியிருக்கும் 102 தொகுதிகளுக்கான லோக்சபா தேர்தல் மற்றும் 2 மாநில சட்டசபை தேர்தலுக்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. அந்தந்த மாநில போலீசாருடன் இணைந்து துணை ராணுவப்படையினரும் தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டனர். வாக்குப்பதிவு முடிந்தது, முகவர்கள் முன்னிலையில் வாக்குப்பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு கட்டுப்பாட்டு அறைக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
-
"தமிழ்நாட்டின் வருவாயில் 3-ல் 1 ரூபாய் வட்டிக்கு மட்டுமே செல்கிறது.." வெள்ளை அறிக்கை ரிப்போர்ட் -
இனி யாரும் தப்ப முடியாது.. 16 நாட்களில் 16 ஆயிரம் வழக்குகள்.. ரூ.3.13 கோடி வசூல்! -
4874 EV சார்ஜிங் நிலையங்கள் ரூ.2000 கோடியில்! தமிழகத்தில் எங்கே தெரியுமா? மத்திய அரசின் மாஸ் பிளான் -
நடுக்கடலில் உயிரிழந்த தமிழக மாலுமி.. 3 நாட்களுக்கு பிறகு ஒரு வழியாக மீட்கப்பட்ட உடல்! என்ன நடந்தது? -
மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகாவைவிட தமிழக மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைவு.. வெள்ளை அறிக்கை -
தமிழக நிதிநிலை கவலைக்கிடம்?.. கடன் வளர்ச்சி 14.3%.. வெள்ளை அறிக்கை தகவல் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு!












Click it and Unblock the Notifications