டெல்லி சிறையில் தாஜ்பூரியா கொலை- 6 தமிழக போலீஸ் சஸ்பெண்ட்- விசாரிக்க டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு!
டெல்லி: டெல்லி திஹார் சிறையில் தாதா தாஜ்பூரியா படுகொலை சம்பவத்தில் 6 தமிழக போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.
டெல்லி நீதிமன்ற வளாகத்தில் 2 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நடந்தது. இதில் தாதா தில்லு தாஜ்பூரியா கோஷ்டிக்கு தொடர்பு இருக்கிறது என்பது போலீஸ் குற்றச்சாட்டு. பல்வேறு வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் தில்லு தாஜ்பூரியா.

இந்நிலையில் தில்லு தாஜ்பூரியாவை மற்றொரு தாதா கும்பல், சிறைக்குள் நுழைந்து துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்தது. இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இப்படுகொலையை தடுக்க தவறியதாக பாதுகாப்பு பணியில் இருந்த 6 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த 6 பேரும் தமிழ்நாடு சிறப்பு காவல்படையை சேர்ந்தவர்கள். ஒரு குற்ற சம்பவத்தில் 6 தமிழ்நாடு போலீஸ் கூண்டோடு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியது.

தற்போது 6 தமிழ்நாடு போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது தொடர்பாக விசாரணை நடத்த டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இதற்காக தமிழ்நாடு கமாண்டோ படை ஏடிஜிபி ஜெயராமன் டெல்லி விரைந்துள்ளார்.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
தஞ்சையில் கள்ளக்காதல்.. நள்ளிரவில் புருஷன்- சொந்த அக்காவை தீயில் கொளுத்திய அமுதா -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சந்தீப் ராய் ரத்தோருக்கு புதிய பொறுப்பு.. சிறைத்துறை டிஜிபியாக நியமனம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications