ஒன்னுகூடிட்டாங்க.. பாஜகவை வீழ்த்த வியூகம்.. டெல்லியில் கேசிஆர் ‛மெகாமூவ்’.. திரண்ட தலைவர்கள்.. ஆஹா
டெல்லி: 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் முனைப்பில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் பாரத் ராஷ்ட்ர சமிதி எனும் கட்சியை துவங்கி உள்ளார். இந்நிலையில் தான் அவர் புதிதாக டெல்லியில் கட்சி அலுவலகத்தை திறந்த நிலையில் அகிலேஷ் யாதவ், குமாரசாமி திருமாவளவன் உள்பட பல கட்சிகளின் தலைவர்கள் ஒன்றிணைந்த சம்பவம் தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது.
தெலங்கானா முதலமைச்சராக இருப்பவர் கே சந்திரசேகர ராவ் (கேசிஆர்). இவரது தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி எனும் கட்சியின் ஆட்சி தெலங்கானாவில் நடைபெற்று வருகிறது. ஆந்திராவில் இருந்து தெலங்கானா புதிய மாநிலமாக்க சந்திரசேகர ராவ் பல போராட்டங்களை முன்னெடுத்தார்.
இதையடுத்து தெலங்கானாவை புதிய மாநிலமாக மத்திய பாஜக அரசு அறிவிப்பு தெரிவித்தது. இதைடுத்து புதிய மாநிலமாக உருவானபோது தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி, பாஜகவுடன் கூட்டணி அமைத்து செயல்பட்டு வந்தது. அதன்பிறகு இருகட்சிகள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

பிரதமர் மோடியுடன் மோதல்
மத்திய அரசு சார்பில் திட்டங்களுக்கு மானியம், இழப்பீடு ஆகியவற்றை மத்திய பாஜக அரசு சரியாக தருவது இல்லை. தெலங்கானாவை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசு பார்க்கிறது என முதல்வர் சந்திரசேகரராவ் கடுமையாக விமர்சனம் செய்தார். அதோடு தெலங்கானா வரும் பிரதமர் மோடியை சந்திரசேகர ராவ் சந்திப்பை தொடர்ந்து தவிர்த்து வருகிறார். இந்த ஆண்டு மட்டும் 3 தனித்தனி சந்தர்ப்பங்களில் பிரதமர் மோடியை, சந்திரசேகர ராவ் சந்திக்கவில்லை. இதுதொடர்பாக தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி மற்றும் பாஜகவினர் இடையே கருத்து மோதல்களை ஏற்படுத்தி உள்ளது.

தேசிய அரசியலுக்கு புதிய கட்சி
மேலும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை எதிர்த்து தேசிய அளவில் கூட்டணி அமைக்க சந்திரசேகர ராவ் முடிவு செய்துள்ளார். இதற்கான வேலைகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் தான் தசரா தினத்தில் சந்திரசேகரராவ் ‛பாரத் ராஷ்ட்ர சமிதி' (பிஆர்எஸ்) கட்சியை துவக்கினார். இவர் கடந்த 2001ல் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி எனும் கட்சியை துவங்கிய நிலையில் அதன்பிறகு 21 ஆண்டுகள் கழித்து தேசிய அரசியலுக்காக பாரத் ராஷ்ட்ர சமிதி என்ற புதிய கட்சியை அறிவித்தார்.

டெல்லியில் கட்சி அலுவலகம் திறப்பு
மேலும் எதிர்க்கட்சி தலைவர்களை அவர் சந்தித்து பேசி வருகிறார். இதன் தொடர்ச்சியாக தான் தற்போது தேசிய அரசியலுக்காக டெல்லியில் பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சியின் அலுவலகத்தை தெலங்கானா முதல்வரும் கட்சியின் தலைவருமான சந்திரசேகர் ராவ் நேற்று திறந்து வைத்தார். அதன்பிறகு அவர் அலுவலகத்தல் சந்திரசேகரராவ் கட்சி கொடியை ஏற்றி வைத்தார். இதனால் மூலம் 2024ல் பாஜகவுக்கு எதிராக கூட்டணி அமைத்து தாமரையை வீழ்த்தும் முனைப்பில் தொடர்ந்து சந்திரசேகரராவ் தீவிரம் காட்டி வருவது தெரியவந்துள்ளது.

ஒன்று கூடிய எதிர்க்கட்சிகள்
இந்த கட்சி அலுவலகம் திறப்பு நிகழ்ச்சியில் பாஜகவுக்கு எதிரான கொள்கைகள் கொண்ட கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். அதன்படி கர்நாடகத்தை சேர்ந்த முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் மகனும், கர்நாடகா முன்னாள் முதல்வருமான ஜனதாதளம்(எஸ்) கட்சியை சேர்ந்த குமாரசாமி, உத்தர பிரதேசத்தில் எதிர்க்கட்சியாக உள்ள சமாஜ்வாடியின் அகிலேஷ் யாதவ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் எம்பியுமான தொல் திருமாவளவன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். இவர்கள் தவிர பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம், ஒடிசா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் செயல்பட்டு வரும் விவசாய அமைப்புகளின் தலைவர்கள் இந்த விழாவில் பங்கேற்றனர்.

எதிர்க்கட்சி தலைவர்களுடன் சந்திப்பு
முன்னதாக சந்திரசேகர ராவ் எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து பேசி வருகிறார். முன்னாள் பிரதமரான ஜனதாதளம் (எஸ்) கட்சியின் தேவேகவுடா, கர்நாடாக முன்னாள் முதல்வரான அவரது மகன் குமாரசாமி, மகாராஷ்டிரா மாஜி முதல்வர் உத்தவ் தாக்கரே, பீகாரில் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய பீகார் முதல்வரான ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவருமான நிதிஷ் குமார் உள்ளிட்டவர்களை சந்திரசேகர ராவ் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications