தமிழகத்திற்கு 2.5 டிஎம்சி நீரை தர கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு
டெல்லி: காவிரி மேலாண்மை ஆணையத்தின் 28வது கூட்டம் இன்று டெல்லியில் கூடியது. பிப்ரவரி மாதத்துக்குள் 2.5 டிஎம்சி தண்ணீரைத் தமிழ்நாட்டிற்குக் காவிரியில் திறக்க கர்நாடக அரசுக்குக் காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.
காவிரி நீரை பெறுவதற்கு தமிழ்நாடு தொடர்ந்து கர்நாடக மாநிலத்திடம் போராடி வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் விநாடிக்கு 25,000 கன அடி நீர் திறந்து விட வேண்டும் என்று தமிழ்நாடு வலியுறுத்தியிருந்தது. இதனை கர்நாடகா ஏற்கவில்லை. எனவே உச்சநீதிமன்றத்தை தமிழக அரசு நாடியது. அதேபோல கர்நாடக அரசும் நீதிமன்றத்தை நாட காவிரி மேலாண்மை ஆணையம் இந்த விவகாரம் குறித்து முடிவெடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆணையமானது, விநாடிக்கு 5,000 கனஅடி நீரை திறக்க கர்நாடகாவுக்கு கூறியது. ஆனால் கர்நாடக இதை ஏற்கவில்லை. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் போதுமான மழை இல்லாததாலும், ஒட்டுமொத்தமாக பருவமழை குறைந்ததாலும் நீர் வரத்து குறைவாக இருக்கிறது என்று கூறி இந்த நீரை திறக்க மறுத்துவிட்டது. இதனையடுத்து உச்சநீதிமன்றமானது, காவிரி மேலாண்மை ஆணையம் வழிகாட்டிய அளவுக்கு தண்ணீரை திறக்க வேண்டும் என்று கறாராக உத்தரவிட்டது.
ஆனால் கர்நாடக அரசு இதற்கு செவி சாய்த்தது போல தெரியவில்லை. தமிழகத்திற்கு தண்ணீரை திறக்க கூடாது என கர்நாடகாவில் போராட்டங்கள் வெடித்தன. இந்த சலசலப்புகள் ஓரளவுக்கு ஓய்ந்த நிலையில், கடந்த 18ம் தேதி ஒழுங்காற்று குழு கூட்டம் கூட்டப்பட்டது. அதில், பிப்ரவரி மாத இறுதிக்குள் தமிழகத்துக்கு 4 டிஎம்சி நீரை திறந்துவிட வேண்டும் என கர்நாடகாவுக்கு பரிந்துரைக்கப்பட்டது.
இந்த பரிந்துரையையும் கண்டுகொள்ளாமல், தினமும் ஆயிரம் கன அடிக்கும் குறைவான நீரையே கர்நாடகா திறந்து வந்தது. இதனால் ஜனவரி மாதம் வரை 90.532 டிஎம்சி தண்ணீரைக் கர்நாடகா நிலுவையில் வைத்திருக்கிறது. இந்த சூழலில்தான் மூன்று மாதங்களுக்குப் பிறகு டெல்லியில் காவிரி மேலாண்மை கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் இன்று கூடியது. இதில் மேகதாது தொடர்பாக விவாதிக்கக் கர்நாடக அதிகாரிகள் வலியுறுத்திய நிலையில், அதற்குத் தமிழக அதிகாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து மேகதாது அணை தொடர்பாக விவாதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. தொடர்ந்து நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில், பிப்ரவரி மாதத்துக்குள் தமிழ்நாட்டுக்கு 2.5 டிஎம்சி நீரைக் காவிரியில் திறக்க வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது.
-
Bike Taxi Tamil Nadu: விதிமுறைகள் எப்போது அமலுக்கு வரும்?.. அறிக்கை அளிக்க உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன்












Click it and Unblock the Notifications