ஷாக்! இந்தியாவில் ஒரே வாரத்தில் 40% அதிகரித்த கொரோனா.. அதுவும் இந்த 3 மாநிலங்கள்தான் டாப்!
டெல்லி: இந்தியாவில் ஒரே வாரத்தில் கொரோனா தொற்றுகள் 40% அதிகரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தியாவில் இதுவரை தகுதியான மக்களில் 89.4% பேர் ஒரு டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர்
உலகம் முழுவதும் கொடிய கொரோனா வைரஸ் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நிலையில் தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஓமிக்ரான் பல நாடுகளை பாடாய்படுத்தி வருகிறது. இதற்கு இந்தியாவும் விதிவிலக்கு அல்ல.

உச்சத்தில் கொரோனா
பல்வேறு கட்டுப்பாடுகள் போடப்பட்ட போதிலும் ஓமிக்ரான் வைரஸ் இந்தியாவுக்குள் புகுந்து விட்டது. ஓமிக்ரான் வைரஸ் காரணமாக இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2.58 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

40% அதிகரிப்பு
நாட்டில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 365 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து 1,54,740 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கேரளா குஜராத், ஆந்திரா, கர்நாடகா என்று பல மாநிலங்ளிலும் கொரோனா தொற்று உச்சத்தில் இருக்கிறது. இதில் அச்சுறுத்தும் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்தியாவில் ஒரே வாரத்தில் கொரோனா தொற்றுகள் 40% அதிகரித்துள்ளன என்பதுதான்.

ஒரே ஆயுதம் தடுப்பூசி
நாட்டில் மகாராஷ்டிராவில்தான் அதிக பாதிப்புகள் உள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிராவில் 41,327 ஆக பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை பதிவாகியுள்ளன. இதனை தொடர்ந்து கர்நாடகாவில் 34,047 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 23,975 பேருக்கு கொரோனா பாதிப்புகள் என்று வரிசையில் முதலிடத்தில் அமர்ந்துள்ளன. கொரோனாவை தடுக்கும் ஒரே ஆயுதம் தடுப்பூசிதான். நாட்டில் கோவிஷீல்டு, கோவேக்சின், ஸ்புட்னிக்-வி ஆகிய 3 தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.

சாதனை படைத்த மாநிலங்கள்
தடுப்பூசி போட தொடங்கி ஒரு ஆண்டு நிறைவடைந்த நிலையில் இந்தியாவில் இதுவரை தகுதியான மக்களில் 89.4% பேர் ஒரு டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர். அதே நேரத்தில் 64.4% பேர் மட்டுமே இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர். கர்நாடகா, குஜராத், சிக்கிம், ஜம்மு & காஷ்மீர், உத்தரகாண்ட், மத்தியப் பிரதேசம், லட்சத்தீவு மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகியவை 80% பேருக்கு தடுப்பூசி செலுத்தி சிறந்த நிலையில் உள்ளன.
Recommended Video

பூஸ்டர் டோஸ்கள் எத்தனை?
பஞ்சாப், ஜார்க்கண்ட், மணிப்பூர், மேகாலயா மற்றும் நாகாலாந்து ஆகியவை தடுப்பூசி செலுத்துதலில் பின்தங்கியுள்ளன ஜனவரி 3-ம் தேதி முதல் 15-17 வயதுப் பிரிவினருக்கான தடுப்பூசி போடும் பணி தொடங்கிய நிலையில் இதுவரையிலும் 15-17 வயதுடைய 46.5% பேர் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர். ஜனவரி 16-ம் தேதி வரை இந்தியா முழுவதும் 91 கோடி முதல் டோஸ், 65 கோடி இரண்டாம் டோஸ் மற்றும் 43 லட்சம் பூஸ்டர் டோஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications