அதானிக்கு எதிரான ஹிண்டன்பர்க் ரிப்போர்ட்! செபி ஆய்வு என்ன ஆனது? தள்ளி போகும் உச்சநீதிமன்ற விசாரணை
டெல்லி: அதானி குழுமத்தின் மீது அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனத்தின் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற இருந்த நிலையில், விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவை சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான 'ஹிண்டன்பர்க்' சில மாதங்களுக்கு முன்னர் அதானி குழுமம் குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டிருந்தது. 413 பக்கங்கள் கொண்ட இந்த ஆய்வறிக்கையில், அதானி குழுமம் கடந்த 3 ஆண்டுகளாக பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டிருந்ததாக குற்றம்சாட்டியிருந்தது. "இந்த காலகட்டத்தில் அதானி குழுமத்தின் பங்குகள் அபரிமிதமாக வளர்ந்தது. பங்கு மதிப்புகளை அதிகரிக்க போலி நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிறுவனங்கள் வரி ஏய்ப்பிலும், பண மோசடியிலும் ஈடுபட்டுள்ளன" என்று ஹிண்டன்பர்க் குற்றம் சாட்டியிருந்தது.

இந்த அறிக்கை வெளிவரும் போது அதானி குழுமத்தின் சொத்து மதிப்பு ரூ.9.84 லட்சம் கோடியாக இருந்தது. இதில் ரூ.8.2 லட்சம் கோடி, அதாவது மொத்த சொத்தில் முக்கால்வாசி சொத்துக்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் ஈட்டப்பட்டிருக்கிறது. அதுபோல இந்நிறுவனத்தின் பங்குகள் சுமார் 819% வளர்ச்சியடைந்திருக்கிறது. இதற்கு காரணம் மொரிசியஸ், கரீபின் தீவு உள்ளிட்ட வரி ஏய்ப்பு செய்ய வாய்ப்புள்ள நாடுகளில் போலி நிறுவனங்களை உருவாக்கி அதன் மூலம் அதானி குழுமத்தின் பங்குகளை வாங்க போலியான போட்டி உருவாக்கப்பட்டிருக்கிறது.
இந்த விஷயங்களைதான் ஹிண்டன்பர்க் விரிவாக பொதுவெளியில் வைத்தது. இதன் காரணமாக அதானி குழுமத்தின் பங்குகள் சரிய தொடங்கி தற்போது பெரும் நஷ்டத்தில் இருக்கிறார் அதானி. இதில் அதானிக்கு மட்டும் இழப்பீடு ஏற்படவில்லை, அதானி நிறுவனத்தை நம்பி ஏராளமான சிறு குறு நிறுவனங்கள் இயங்கி வந்தன. இந்த நிறுவனங்கள் இந்தியாவில் ஏராளமான வேலை வாய்ப்புகளை உருவாக்கி வந்திருந்தன. தற்போது அதானியே காலி எனில், இந்த நிறுவனங்களும் துடைத்தெறியப்பட்டன. இதில் வேலைப்பார்த்தவர்களின் நிலை என்னவென்று தெரியவில்லை.
அதேபோல அதானி நிறுவனத்தில் எல்ஐசி மற்றும் எஸ்பிஐ வங்கி ஆகிய பொதுத்துறை நிறுவனங்களில் பங்குகளும் முதலீடு செய்யப்பட்டன. தற்போது அதானி நஷ்டமடைந்துள்ளது எனில் இந்த பொதுத்துறை நிறுவனத்தின் பங்குகளின் நிலை என்ன? என்று எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பி வருகின்றன. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மெற்கொள்ள ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.எம்.சாப்ரே தலைமையில் நிபுணர் குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
ஆனால் பங்குசந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபி (SEBI) செய்த மாற்றங்கள் காரணமாக நிபுணர் குழுவின் விசாரணை திறன் கட்டுப்படுத்தப்பட்டதாக ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.எம்.சாப்ரே உச்சநீதிமன்றத்தில் கடந்த மே மாதம் அறிக்கை தாக்கல் செய்திருந்தார். இதனையடுத்து செபி இது குறித்து விசாரணையில் இறங்கியது. தனது விசாரணை குறித்து கடந்த 26ம் தேதி உச்சநீதிமன்றத்தில் செபி அறிக்கை தாக்கல் செய்தது. அதில், "24 அம்சங்கள் குறித்த விசாரணையில் 22 விசாரணைகள் நிறைவடைந்துவிட்டன. மீதமுள்ள இரண்டு குறித்து விசாரிக்க வெளிநாட்டு நிறுவனங்களின் உதவியை நாடியுள்ளோம்" என்று கூறியிருந்தது. இதனையடுத்து இன்று உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை மீண்டும் வர இருந்தது. ஆனால் உச்சநீமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அரசியல் ஜம்மு காஷ்மீரின் 370வது சட்டப் பிரிவை ரத்து செய்தது தொடர்பான வழக்கு விசாரணையை மேற்கொள்வதால், அதானியின் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
பாஜகவை விட்டு விலகுகிறேன்.. 39 ஆண்டு பயணத்திற்கு முற்றுப்புள்ளி.. காரணம் இதுதான்! நடிகர் பாண்டி ரவி ஆதங்கம் -
“அண்ணாமலைக்கும், அவர் பின்னால் போன ஆட்டு மந்தைக்கும் பாஜகவின் கொள்கை புரியவில்லை” - வேலூர் இப்ராஹிம் -
வேலைக்காகாத பாஜக மாடல்.. “கழக” பாணியைக் கையிலெடுக்கும் அண்ணாமலை! வேற லெவலாகும் வீ தி லீடர்! -
இனிமே நம்மதான்..பக்காவாய் காய் நகர்த்தும் பாஜக! டெல்லியில் எகிறும் செல்வாக்கு! மோடி போட்ட பலே ப்ளான் -
தமாகாவை கரைத்த பாஜக.. என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன்? ஜிகே வாசன் முடிவில் பின்னணி -
பாஜக கூட்டணிக்கு ‘குட்பை'.. வெளியேறிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி - ஜிகே வாசன் அறிவிப்பு -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
கைவிட்ட பாஜக.. மம்தாவையும் பகைத்து கொண்ட திரிணாமுல் தலைவர்கள்.. இடியாப்ப சிக்கல்! -
காங்கிரசுக்கு நீங்க ஏன் உயிர் கொடுக்குறீங்க விஜய்? கடுப்பான பாஜக.. கோபத்தின் உச்சிக்கே போன அமித் ஷா -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
புதுப்பொலிவு பெறும் புதுச்சேரி.. அள்ளி கொடுத்த மத்திய அரசு! எல்.முருகன் சொன்ன குட் நியூஸ்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்!












Click it and Unblock the Notifications