கிளிக்குள் மறைந்திருக்கும் பெண்.. உங்க கண்களுக்கு தெரியுதா?.. தெரிஞ்சா புத்திசாலி தாங்க!
டெல்லி: கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் கிளியின் படத்தில் ஒரு பெண்ணின் படமும் மறைந்து இருக்கிறது. 5 நொடிகளுக்குள் நீங்கள் கண்டுபிடித்துவிட்டால் நீங்கள் அதி புத்திசாலிதான்.
Recommended Video
நமது கண்களை குழப்பும் ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கு எப்போதும் தனி வரவேற்பு இருக்கும்.
அந்த வகையில் தற்போது நெட்டிசன்களின் அறிவுப்பசிக்கு தீனி போடும் வகையில் ஒரு புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.

ஆப்டிகல் இல்யூஷன்
நமது கவனிக்கும் திறனை பரிசோதிக்கும் ஒரு டெஸ்ட் என்ற அடைமொழியுடன் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் பரவி வருவதால் நெட்டிசன்கள் பலரும் எப்படியும் நாம் முதல் ஆளாக படத்தில் ஒளிந்திருப்பதை கண்டுபிடித்து பிறரின் பாராட்டை பெற்று விட வேண்டும் என்ற ஆர்வத்தில் போட்டி போட்டுக்கொண்டு ஆர்வமுடன் நெட்டிசன்கள் இந்த படங்களை ஆராயத்தொடங்கி விடுவார்கள். இந்த வகையில், தான், நெட்டிசன்களுக்கு இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் கிளியின் படத்தில் ஒரு பெண்ணின் படமும் மறைந்து இருக்கிறது.

5 நொடிகளுக்குள்..
5 நொடிகளுக்குள் இதை கண்டுபிடித்து விடவேண்டும் என்பதே உங்களுக்கான சவால். 5 நொடிகளுக்குள் மறைந்திருக்கும் பெண்ணை கண்டுபிடித்துவிட்டால் நீங்கள் அதி புத்திசாலிதான்.... போட்டிக்கு ரெடியா இருக்கீங்களா.... ஒரு மரத்தண்டில் கிளி ஒன்று மகிழ்ச்சியுடன் அமர்ந்து இருக்கும் படம் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதை பார்க்கும் போது வனவிலங்குகளை புகைப்படம் எடுக்கும் கலைஞர் மிகவும் ரம்மியான முறையில் இந்த படத்தை கிளிக் செய்து இருக்கிறார் என்று உங்களுக்கு தோன்றுகிறதா?...

பெண் மறைந்து இருக்கிறார்
ஆனால், இந்த படத்தில்தான் ஒரு பெண் மறைந்து இருக்கிறார் என்பதே ட்விஸ்ட்... கொஞ்சம் உற்று பாருங்கள்... இப்போ மறைந்து இருக்கும் பெண்ணை கண்டுபிடித்து வீட்டீர்களா? ... அட இன்னும் கண்டுபிடிக்கவில்லையா? இந்த படத்தை மீண்டும் உன்னிப்பாக பாருங்கள்.. இப்போது உங்களுக்கு படத்தில் சற்று வித்தியாசம் தெரிகிறதா?.. தெரியவில்லையா.. மீண்டும் ஒருமுறை உற்றுபாருங்கள்.. இந்த முறை எப்படியும் கண்டுபிடித்திருப்பீர்கள் என்று நினைக்கிறோம்...

கவனிப்பு திறன் அசாத்தியமானது
கிளியில் மறைந்து இருக்கும் பெண்ணை கண்டுபிடித்து வீட்டீர்கள் என்றால் உங்களை கண்டிப்பாக பாராட்டியே தீர வேண்டும். ஏனென்றால் உங்களின் கவனிப்பு திறன் அசாத்தியமானது... இன்னமும் சிலருக்கு படத்தில் மறைந்து இருக்கும் பெண்ணை கண்டுபிடிக்க முடியாமல் தலையை பிய்த்துக்கொள்ள வேண்டும் போல் இருக்கா... டோன்வொர்ரி... நாங்களே விடையை சொல்லிடுகிறோம்..

ஓவியர் ஜோஹன்னஸ் ஸ்டோட்டரின் படைப்பு
இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பல வண்ணங்களை கொண்ட கிளி தெரிகிறது. இதில் வேறு எதுவுமே தெரியவில்லையே என்று திரும்ப திரும்ப பார்த்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு சிம்பிளா ஒரே டிப்ஸ் தர்றோம்... கொடுக்கப்பட்டு இருக்கும் கிளியின் படத்தில் தான் ஆப்டிகல் இல்யூஷனே மறைந்து இருக்கிறது. நீங்கள் கிளியில் பெண் படத்தை தேடிக்கொண்டு இருக்கீங்காதீங்க.. ஏனென்றால், கிளி வடிவத்தில் இருப்பதே ஒரு பெண்..தான். ஒரு பெண்ணின் வடிவத்தில் தான் கிளி தத்ரூபமாக வரையப்பட்டு இருக்கிறது. இந்த படம் முன்னாள் உலக சாம்பியனான இத்தாலிய ஓவியர் ஜோஹன்னஸ் ஸ்டோட்டரின் தலைசிறந்த படைப்புகளில் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications