48 லட்சம் இன்சூரன்ஸ்! தனி சீருடை, 30 நாள் லீவு! அக்னிபாத்தில் சேர்வது எப்படி? ஐஏஎப் வெளியிட்ட தகவல்!
டெல்லி : நான்காண்டு ஒப்பந்த அடிப்படையில் இந்திய ராணுவத்திற்கு முப்படைகளுக்கும் ஆட்கள் சேர்க்கும் அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட போராட்டம் வன்முறையாக மாறியுள்ள நிலையில், இதில் சேருவதற்கான 29 விவரங்களை இந்திய விமானப்படை வெளியிட்டுள்ளது.
4 ஆண்டுகளுக்கு மட்டும் இந்திய ராணுவத்தில் இளைஞர்கள் இணையும் அக்னிபத் திட்டத்தின் கீழ் விமானப்படையில் இணைவதற்கான வழிமுறைகளை இந்திய விமானப்படை வெளியிட்டுள்ளது. '
தற்போது சேர்க்கை முதல், சீருடை, ஊதியம், இன்ஸ்சூரன்ஸ், விடுமுறை ஆகிய தகவல்களுடன் 29 வகையான விளக்கங்கள் மற்றும் விதிமுறைகள் இந்த பட்டியலில் உள்ளன. ஏற்கனவே அக்னிபாத் திட்டம் விலக்கிக் கொள்ளப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், தற்போது ஆட்சேர்ப்பு விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அக்னிபத் திட்டம்
அதன்படி,"அக்னிபத் என்பது ஆயுதப்படைகளுக்கான புதிய மனிதவள மேலாண்மை திட்டமாகும். இந்தத் திட்டத்தின் மூலம் உள்வாங்கப்படும் விண்ணப்பதாரர்கள் அக்னிவீரர்கள் என்று அழைக்கப்படுவார்கள். இந்த அக்னிவீரர்கள் இந்திய விமானப் படையில் ஒருமுறை சேர்ந்தால், நான்கு ஆண்டுகளுக்கு விமானப்படைச் சட்டம் 1950ன் கீழ் நிர்வகிக்கப்படும். நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் விண்ணப்பதாரர்களை அக்னிவேர்களாக பதிவு செய்ய முயற்சி மேற்கொள்ளப்படும்,

விமானப்படை விளக்கம்
பதிவுச் செயல்முறையின் ஒரு பகுதியாக, ஒவ்வொரு 'அக்னிவீரரும்' அக்னிபாத் திட்டத்தின் அனைத்து விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் முறையாக ஏற்க வேண்டும். 18 வயதுக்குட்பட்ட பணியாளர்களுக்கு, தற்போதுள்ள விதிகளின்படி, பெற்றோர்/பாதுகாவலர்களால் பதிவுப் படிவத்தில் கையொப்பமிடப்பட வேண்டும். நான்கு வருட காலத்திற்குப் பிறகு, அனைத்து அக்னிவீரர்களும் படையிலியிருந்து சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். இருப்பினும், நிறுவனத் தேவைகள் மற்றும் IAF வெளியிடும் கொள்கைகளின் அடிப்படையில், வெளியேறிய அக்னிவீரர்கள் வழக்கமான கேடரில் IAFஇல் சேர்வதற்கு விண்ணப்பிக்க ஒரு வாய்ப்பு வழங்கப்படும்.

தகுதிகள் என்னென்ன?
பணிக்காலத்தின்போது 48 லட்ச ரூபாய் வரையிலான ஆயுள் காப்பீடு வழங்கப்படும் எனவும் 18 வயதுக்குட்பட்டவர்களும் இதில் இணையலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. ராணுவத்தினருக்கான உயர்தர ஆன்லைன் தரவுத்தளம் பராமரிக்கப்பட்டு அதில் ஒவ்வொருவரின் தனித்தன்மை குறித்து விவரங்கள் குறிப்பிடப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. வயது வரம்பு, கல்வித் தகுதி, உடற்தகுதி. தகுதியான வயது 17.5 வயது முதல் 21 வயது வரை இருக்கும். பிற கல்வித் தகுதிகள் மற்றும் உடல் தரநிலைகள் இந்திய விமானப்படையால் வழங்கப்படும்.

தனி சீருடை
இளைஞர்களின் சுறுசுறுப்பை ஊக்குவிக்கவும் அங்கீகரிக்கவும், அக்னிவீரர்கள் நிச்சயதார்த்த காலத்தில் அவர்களின் சீருடையில் ஒரு தனித்துவமான அடையாளத்தை அணிவார்கள். ஒரு ஆண்டுக்கு 30 நாட்கள் விடுமுறை என தெரிவிக்கப்பட்டுள்ளதோடு மருத்துவ விடுப்பும் உண்டு என கூறப்பட்டுள்ளது. 4 ஆண்டு முடிவதற்குள் ராணுவத்தினர் தங்கள் சொந்த கோரிக்கையின்படி விடுவிக்கப்பட மாட்டார்கள் எனவும், இருப்பினும் அதில் சில விதிவிலக்குகள் உள்ளன எனவும் இந்திய விமானப்படை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அக்னிபத் திட்டம் குறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications