கெத்து காட்டும் இந்திய விமானப்படை..! சீனாவை பின்னுக்குத் தள்ளி மூன்றாமிடம்! முழு விவரங்கள் இதோ..!
டெல்லி : இந்திய விமானப் படை உலகின் சக்திவாய்ந்த விமானப் படைகளில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. நவீன ராணுவ விமானங்களின் உலக டைரக்டரி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சீனாவை இந்தியா வென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நம் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதில் முப்படைகளில் விமானப்படையின் பங்கு மிக முக்கியமானதாக இருந்து வருகிறது. அந்த வகையில் இந்தியாவின் பாதுகாப்புப் படைகளில் விமானப்படை முக்கியத்துவம் அதிமாகவே உள்ளது என கூறலாம்..
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தின் போது பிரிட்டிஷ் ராயல் விமானப் படையின் ஓர் அங்கமாக அக்டோபர் 8, 1932 அன்று இந்திய விமானப்படை தோற்றுவிக்கப்பட்டது. முதலில் வெறும் 25 வீரர்களைக் கொண்டு இந்திய விமானப் படை தொடங்கப்பட்டது.

இந்திய விமான படை
இரண்டாம் உலகப்போரில், பர்மாவிலிருந்து ஜப்பானியப் படைகள் முன்னேறி வருவதைத் தடுக்கும் பணியில், இந்திய விமானப்படை மிகச் சிறப்பாகச் செயலாற்றியதால், 'ராயல் இந்தியன் ஏர் போர்ஸ்' என்ற பெயரை வழங்கி கௌரவித்தது ஆங்கிலேய அரசு. 1950ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை இந்திய விமானப்படை பாகிஸ்தானுடன் 4 போர்களிலும், சீனாவுடன் ஒரு போரிலும் ஈடுபட்டிருக்கிறது.

உலக அளவில் தரவரிசை
ஆபரேஷன் விஜய், ஆபரேஷன் மேக்தூத், ஆபரேஷன் காக்டஸ், ஆபரேஷன் பூமாலை உள்ளிட்ட முக்கிய வான்வெளி ஆபரேஷன்களை இந்திய விமானப்படை நிகழ்த்தியிருக்கிறது. போர் விமானங்கள், போக்குவரத்து விமானங்கள், ஹெலிகாப்டர்கள் என சுமார் 1,600 விமானங்கள் இந்திய விமானப்படையின் வசம் உள்ளன. 1,70,000க்கும் மேற்பட்டோர் இந்திய விமானப் படையில் பணியாற்றி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாகவே உலகின் நான்காவது சக்திமிக்க விமான படையாக இந்தியன் ஏர் போர்ஸ் இருந்து வந்தது.

படைகளில் 3வது இடம்
தற்போது வெளியான தகவல்களின் படி இந்திய விமானப் படை உலகின் சக்திவாய்ந்த விமானப் படைகளில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. World Directory of Modern Military Aircraft எனப்படும் நவீன ராணுவ விமானங்களின் உலக டைரக்டரி வெளியிட்டுள்ள அறிக்கையின் படி அண்டை நாடான சீனாவை பின்னுக்குத் தள்ளி வரலாற்று சாதனையை எட்டியிருக்கிறது இந்தியா விமானப்படை. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வரை முதல் 3 இடங்களில் சீனா இருந்தது குறிப்பிடத்தக்கது.

முதலிடத்தில் அமெரிக்கா
இந்தப் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும் ரஷ்யா இரண்டாவது இடத்திலும் உள்ளது. இந்தியா 3வது இடத்திலும், சீனா 4வது இடத்திலும் உள்ளன. குறிப்பாக உலகின் சக்திமிக்க நாடுகளாக கருதப்படும் ஜப்பான், இஸ்ரேல், பிரான்ஸ் விமானப்படைகளை பின்னுக்கு தள்ளியுள்ளது குறிப்பிடத்தக்கது. 98 நாடுகளின் 124 விமானப்படை சேவைகள் மற்றும் 47,140 போர் விமானங்களை ஆய்வுக்கு உட்படுத்திய உலக டைரக்டரி , இறுதியில் இந்த முடிவுகளை வெளியிட்டுள்ளது.

இந்தியா 69. 4 புள்ளி
அந்த தகவல்களின் அடிப்படையில் அமெரிக்கா 242.9 புள்ளிகளை பெற்று முதலிடத்தையும் ரஷ்யா 114. 2 புள்ளிகளுடன் 2ஆம் இடத்தையும், இந்தியா 69. 4 புள்ளிகளுடன் 3ஆம் இடத்தையும் பிடித்துள்ளது. வெறும் விமானங்களின் எண்ணிக்கை மட்டும் கணக்கில் கொள்ளாமல், செயல்பாடுகள், நவீன தொழில்நுட்பங்கள், பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு தகவல்களின் அடிப்படையில் இந்த தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications