டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சூப்பர்ல.. உலகின் பிரம்மாண்டமான தேசிய கொடி.. ராணுவ தினமான இன்று காட்சிக்கு வைக்க ஏற்பாடு

உலகின் நீளமான தேசிய கொடி காட்சிக்கு வைக்கப்பட உள்ளது

Google Oneindia Tamil News

டெல்லி: ராணுவ தினத்தில் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் உலகின் மிக பெரிய தேசிய கொடி காட்சிக்கு வைக்கப்பட உள்ளது... அதேபோல, இந்த நாளில் 13 லட்சம் பேர் கொண்ட இந்திய ராணுவத்துக்கு புது வடிவ சீருடை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அரும்பாடுபட்டு, நம் நாடு சுதந்திரம் பெற்ற பிறகு 1949-ம் ஆண்டு ஜனவரி 15-ந்தேதி, சுதந்திர இந்தியாவின் முதல் ராணுவ தளபதியாக ஜெனரல் கேஎம் கரியப்பா பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதை நினைவுகூரும் விதத்தில்தான், ஒவ்வொரு ஆண்டும் இந்திய ராணுவ தினம் ஜனவரி 15-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.

'எல்லையில் வாலாட்டினால் தக்க பதிலடி'.. ராணுவ தினத்தில் சூளுரைத்த தளபதி எம்.எம்.நரவனே!'எல்லையில் வாலாட்டினால் தக்க பதிலடி'.. ராணுவ தினத்தில் சூளுரைத்த தளபதி எம்.எம்.நரவனே!

 தியாகிகள்

தியாகிகள்

இன்றைய நாளில் ராணுவ வீரர்கள் மற்றும் போரில் உயிர்நீத்த மாபெரும் தியாகிகளுக்கு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று ராணுவ தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.. தேசிய ராணுவ தினத்தையொட்டி பிரதமர் மோடி, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்டோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்...

 வீடியோ

வீடியோ

இந்த நாளை சிறப்பிக்கும் வகையில், ராணுவ வீரர்களின் சாகசங்களை பதிவு செய்யும் வகையில், இந்திய ராணுவம் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில், முப்படைகளின் சாகசங்கள், வீரம் உள்ளிட்ட பல அம்சங்கள் குறித்து விளக்கப்பட்டுள்ளன... அதேபோல, காதி துணியால் உருவாக்கப்பட்ட உலகின் மிக பெரிய தேசிய கொடி பொதுமக்களின் காட்சிக்கு வைக்கப்பட உள்ளது.. குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான அமைச்சகம் இது தொடர்பான ஒரு செய்தியையும் வெளியிட்டுள்ளது.

 ராணுவ தினம்

ராணுவ தினம்

அதில், "ராணுவ தினத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லையில், ஜெய்சால்மர் பகுதியில், முற்றிலும் காதி துணியால் உருவாக்கப்பட்ட உலகின் மிக பெரிய தேசிய கொடி பொதுமக்களின் காட்சிக்கு வைக்கப்பட உள்ளது.. இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே 1971ம் ஆண்டில் நடந்த வரலாற்று போரின் மைய பகுதியான லாங்கிவாலா என்ற இடத்தில் கொடி காட்சிக்கு வைக்கப்படும்.. 225 அடி நீளம், 150 அடி அகலம், 1,400 எடை கொண்டதாக இந்த தேசிய கொடி தயாரிக்கப்பட்டுள்ளது.." என்று தெரிவித்துள்ளது.

 தேசிய கொடி

தேசிய கொடி

இதுவரை 4 இதேபோன்ற பிரம்மாண்ட தேசிய கொடி இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இன்றைய தினம் 5 வது முறையாக பிரம்மாண்ட தேசிய கொடி பொதுமக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது... அதேபோல, இந்திய ராணுவம் தன்னுடைய வீரர்களுக்கு அதிக வசதி மற்றும் நீடித்து உழைக்கும் தன்மை வாய்ந்த புது சீருடையை இன்று முதல் அறிமுகப்படுத்தி உள்ளது.. அதன்படி, இந்த நாளில் 13 லட்சம் பேர் கொண்ட இந்திய ராணுவத்துக்கு புது வடிவ சீருடை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

English summary
The largest national flag made of Khadi cloth is displayed in Jaisalmer
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X