முஸ்லீம் மக்கள் தொகை அதிகரிக்கவில்லை.. குறைந்து தான் வருகிறது.. மோகன் பகவத் கருத்துக்கு ஒவைசி பதிலடி
டெல்லி: இந்தியாவில் மக்கள்தொகை அதிகமாகியுள்ளது என்று கூறிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்துக்கு, ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஒவைசி, நீங்கள் கவலைப்பட வேண்டாம்.. முஸ்லீம் மக்கள் தொகை அதிகரிக்கவில்லை என்று பதிலளித்துள்ளார்.
ஆண்டு தோறும் விஜயதசமி நாளில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், நாக்பூரில் உள்ள அந்த அமைப்பின் தலைமையகத்தில் உரையாற்றுவார்.
அதன்படி, கடந்த வியாழக்கிழமை மோகன் பகவத் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினார். அவர் கூறியதாவது:-

இயல்பு நிலையில் பொருளாதாரம்
பெண்களை நாம் சமத்துவத்துடன் நடத்த வேண்டும். வாழ்க்கையில் தேவையான சொந்த முடிவுகளை எடுக்கும் சுதந்திரத்தையும் அதிகாரத்தையும் பெண்களுக்கு அளிக்க வேண்டும். பெண்கள் இல்லாமல் சமூகம் முன்னேற முடியாது. சர்வதேச அளவில் இந்தியாவின் மதிப்பும் நம்பகத்தன்மையும் அதிகரித்து உள்ளது. கொரோனா பெருந்தொற்று காலத்திற்கு பிறகு வெகு விரைவாக பொருளாதாரம் இயல்பு நிலையை எட்டிவிட்டது.

மத ஏற்றத்தாழ்வுகள் அதிகரிப்பு
இந்தியாவின் வளர்ச்சி சிறப்பானதாக இருக்கும் என்றும் உலக பொருளாதார நிபுணர்கள் பலரும் கணித்துள்ளனர். நமது நாட்டில் மக்கள் தொகை கட்டுப்பாட்டு சட்டம் அவசியம். மத அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்துள்ளன. அதேபோல் கட்டாய மதமாற்றமும் அதிகரித்து இருக்கிறது. மக்கள்தொகை கட்டுப்பாட்டு மட்டுமின்றி, மத அடிப்படையிலான மக்கள்தொகை சமநிலையும் முக்கியத்துவம் வாய்ந்த விஷயம்.

மக்கள் தொகை மட்டும் அதிகரித்தால்...
இதை நாம் ஒருபோதும் புறக்கணிக்க முடியாது. மக்கள் தொகைக்கு ஏற்ப வளங்கள் தேவை. வளங்கள் முறையாக உருவாக்காமல் மக்கள் தொகை மட்டும் அதிகரித்துக்கொண்டே சென்றால் அது சுமையாக மாறிவிடும். எனவே இந்த இரண்டையும் மனதில் வைத்த முடிவுகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

நீங்கள் கவலைப்பட வேண்டாம்
மோகன் பகவத்தின் இந்த பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஐதராபாத் எம்.பி அசாதூதின் ஒவைசி பேசியுள்ளார். இது குறித்து அசாதூதின் ஓவைசி கூறுகையில், ''முஸ்லீம் மக்கள் தொகை அதிகரிக்கவில்லை. எனவே கவலைப்பட வேண்டாம். முஸ்லீம் மக்கள் தொகை சரிந்துதான் வருகிறது. எனவே இந்த விவகாரம் குறித்து மோகன் பகவத் பேச வேண்டாம்'' என்றார்.

மோகன் பகவத் குர்ரானை படிக்க வேண்டும்
மேலும் ஓவைசி பேசும் போது, ''மோகன் பகவத் குர்ரானை படிக்க வேண்டும் என நான் அழைப்பு விடுக்கிறேன். சிசுவை கொல்வது மிகப்பெரும் பாவம் என்று அல்லா சொல்லியிருக்கிறார். கர்ப்ப கால இடைவெளியை முஸ்லீம்கள் பின்பற்றுகிறார்கள். காண்டம்களை அதிகம் முஸ்லீம்களே பயன்படுத்துகின்றனர்'' எனவும் தெரிவித்தார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications