பெட்ரோல் டீசல் விலை.. மே 4முதல் தற்போது வரை 21 முறை உயர்வு.. நாட்டிலேயே எங்கு அதிகம் தெரியுமா?
டெல்லி: பெட்ரோல் டீசல் விலை கடந்த மே 4ம் தேதியில் இருந்து தற்போது வரை 21 முறை உயர்த்தப்பட்டிருக்கிறது. கடந்த மாதத்தில் மட்டும் 18 முறை உயர்த்தப்பட்டுள்ளது.
அத்தியவாசிய பொருட்களின் விலையை தீர்மானிப்பது பெட்ரோல் டீசலின் விலை தான். இதன் விலை கடந்த 6மாதத்தில் மட்டும் மிக கடுமையாக உயர்ந்துள்ளது. வரிகள் காரணமாகவும், சர்வதே சந்தையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வதற்கு ஏற்ப இந்தியாவில் விலை அதிகரிக்கப்படுவதாலும் உயருகிறது.
தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் மாதத்தில் மட்டும் உயர்த்தப்படாமல் இருந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை, மே 4ம் தேதி முதல் மீண்டும் உயர தொடங்கியது.

கடந்த மாதம்
கடந்த ஒரு மாதத்தில் எரிபொருள் விலை 18 முறை உயர்த்தப்பட்டுள்ளது. மே 4 முதல் 18 முறை உயர்வால், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ .4.36 அதிகரித்தது., டீசல் விலை லிட்டருக்கு ரூ .4.93 ரூபாய் அதிகரித்துள்ளது.

சென்னை பெட்ரோல் விலை
ஜூன் 8ம் தேதியான இன்று டெல்லியில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ .94.76 ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ .85.66 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. மும்பையில் பெட்ரோல் எப்போதும் இல்லாத அளவாக லிட்டருக்கு ரூ .100.98 ஆக உயர்ந்துள்ளது. டீசல் விலையும் லிட்டருக்கு ரூ .92.99 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் பெட்ரோல் விலை ரூ.96.23 ஆக விற்பனையாகிறது. டீசல் விலை ரூ.90.38 ஆக உயர்ந்து விற்பனையாகிறது.

ஆறு மாநிலங்கள்
நாட்டில் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய ஐந்து மாநிலங்களிலும், லடாக் யூனியன் பிரதேசத்திலும் பெட்ரோல் லிட்டருக்கு 100 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது.
வாட் மற்றும் சரக்குக் கட்டணங்கள் போன்ற உள்ளூர் வரிகளை பொறுத்து எரிபொருள் விலைகள் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகின்றன.

ராஜஸ்தான் ஸ்ரீ கங்காநகர்
பாகிஸ்தானின் எல்லைக்கு அருகிலுள்ள ராஜஸ்தானின் ஸ்ரீ கங்காநகர் மாவட்டத்தில் நாட்டிலேயே விலை உயர்ந்த எரிபொருள் உள்ளது - பெட்ரோல் விலை லிட்டருக்கு 106.39 ரூபாய் ஆக உயள்ளது. டீசல் 99.24 ரூபாய் ஆக உள்ளது. பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்வதற்கு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்வதே காரணம் என மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.

உயர்வுககு
ஆனால் பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு அண்மைக்காலத்தில் வேண்டுமானால் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக இருக்கலாம் என்றும் ஆனால் ஒட்டுமொத்தமாக பார்த்தால் மத்திய அரசு விதித்துள்ள வரிகளும், மாநில அரசு விதித்துள்ள வரிகளுமே காரணம் என்று சமூக ஆர்வலர்கள் கூறிவருகிறார்கள். பெட்ரோல் டீசல் விலை அதிகரிப்பது நாட்டின் அனைத்து அத்தியாவசிய பொருட்கள் விலையும் உயர்வதற்கு காரணமாக உள்ளதாவும், இவை மக்களுக்கு ஒவ்வொரு நாளும் பெரும் சுமையாக மாறிவருவதாகவும் சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்
-
மொத்த இந்தியாவுக்கும் குட்நியூஸ்.. கச்சா எண்ணெய் விலை பெரும் சரிவு.. அப்போ பெட்ரோல், டீசல் விலை குறையுமா? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications