டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனா ஊரடங்கு காலத்தில்.. படுஜோராக நடந்த 'காண்டம்'கள் விற்பனை.. முதலிடம் எந்த மாநிலம் தெரியுமா?

கொரோனா பொதுமுடக்க கால கட்டத்தில் இந்தியாவில் ஆணுறைகள் மற்றும் கருத்தடை மாத்திரைகள் விற்பனை படு ஜோராக நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா பெருந்தொற்று சமயத்தில் போடப்பட்ட ஊரடங்கு நேரத்தில் இந்தியாவில் ஆணுறைகள் மற்றும் கருத்தடை மாத்திரைகள் விற்பனை படு ஜோராக நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது. இது தொடர்பான தகவல்கள் சுகாதார மேலாண்மை தகவல் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக இந்தியாவில் கடந்த 2020-2021 ஆம் ஆண்டு கால கட்டங்களில் லாக்டவுன் போடப்பட்டு இருந்தது. மக்கள் பொது இடங்களில் கூட்டமாக கூடினால் தொற்று பரவல் ஏற்படும் என்பதால் இத்தகைய கட்டுப்பாடுகள் போடப்பட்டு இருந்தது.

இதனால், மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வீடுகளை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டனர். இதன்காரணமாக பொதுமக்கள் பெரும்பாலும் வீடுகளிலேயே முடங்கி கிடக்கும் நிலை இருந்தது.

மூக்கு வழியாக செலுத்தப்படும் கொரோனா மருந்து.. எங்கு பெறலாம்-எப்படி பயன்படுத்தனும்.. முழு விவரம்! மூக்கு வழியாக செலுத்தப்படும் கொரோனா மருந்து.. எங்கு பெறலாம்-எப்படி பயன்படுத்தனும்.. முழு விவரம்!

ஆணுறை விற்பனை

ஆணுறை விற்பனை

இந்த நிலையில், கொரோனா பொதுமுடக்க கால கட்டத்தில் இந்தியாவில் ஆணுறைகள் மற்றும் கருத்தடை மாத்திரைகள் விற்பனை படு ஜோராக நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது. இது தொடர்பான தகவல்கள் சுகாதார மேலாண்மை தகவல் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் இடம் பெற்றுள்ளது. கடந்த 2020-21 ஆம் நிதியாண்டுக்கான இந்த அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

7 சதவிகிதம் அதிகரித்துள்ளது

7 சதவிகிதம் அதிகரித்துள்ளது

கடந்த 2021-22 ஆம் ஆண்டுகளில் கருத்தடை சிகிச்சை செய்து கொள்வது 25 சதவிகிதம் குறைந்துள்ளது. முந்தைய ஆண்டில் கருத்தடை சிகிச்சை செய்து கொண்ட ஆண் மற்றும் பெண்களின் எண்ணிக்கை 34.57 லட்சமாக இருந்தது. ஆனால், 2021-22 ஆம் ஆண்டில் 9.35 லட்சமாக குறைந்து. அதேவேளையில் கடுமையான கொரோனா கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் இதே ஆண்டில் ஆணுறைகள் (காண்டம்கள்) விற்பனை 7 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அதேபோல், கருத்தடை மாத்திரைகள் விற்பனையும் இரு மடங்காக உயர்ந்துள்ளது.

 உத்தர பிரதேசத்தில் அதிகம்

உத்தர பிரதேசத்தில் அதிகம்

எச்.ஐ.வி மையங்கள் மூலமாக இலவசமாக ஆணுறைகள் விநியோகம் செய்யும் முயற்சிகளும் மேற்கொள்ள்ளப்பட்டுள்ளது. இதற்கு கடந்த ஆண்டை கூடுதலாக ரூ. 40 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் கூடுதலாக 77 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாநில வாரியாக பார்க்கும் போது உத்தரபிரதேசத்தில் அதிக அளவில் காண்டம்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

அடுத்தடுத்த இடங்களில்

அடுத்தடுத்த இடங்களில்

நாட்டிலேயே பெரிய மாநிலம் உத்தரபிரதேசம் தான் என்பது கவனிக்கத்தக்கது. உத்தரபிரதேசத்திற்கு அடுத்த படியாக ராஜஸ்தான், ஆந்திர பிரதேசம், மேற்கு வங்காளம், ஆகிய மாநிலங்கள் ஆணுறைகள் விநியோகம் செய்யப்பட்டதில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. குஜராத், மத்திய பிரதேசம், மக்ராராஷ்டிரா, பஞ்சாப், கர்க்நாடகா ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடத்தில் உள்ளன.

English summary
It has been revealed that during the curfew imposed during the Corona pandemic, condoms and contraceptive pills have been sold at a high rate in India. Information related to this is stated in the report issued by the Health Management Information System.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X