ஷாக்! இளைஞர்களின் வாழ்க்கையில் 'சம்பவம்' செய்த கெமிக்கல்ஸ்.. உலக அளவில் அதிகரித்த விந்தணு குறைபாடு!
டெல்லி: உலக அளவில் தீவிரமடைந்து வரும் மாற்றங்கள் காரணமாக ஆண்களின் விந்தணு எண்ணிக்கை மற்றும் செறிவில் கடுமையான சரிவு ஏற்பட்டுள்ளதாக ஆய்வு தெரிவித்துள்ளன.
உலக அளவில் எனப்படும்போது இந்தியாவும் இதில் விதி விலக்கல்ல என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இந்தியாவில் உள்ள ஆண்களிடம் கடந்த காலகட்டங்களில் கணிசமாக விந்தணு குறைவது ஆய்வில் தெரிய வந்துள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.
இது ஆண்களை மட்டுமல்லாது ஒட்டுமொத்த மனித இனத்தையே அழித்துவிடும் என்றும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

புற்றுநோய் அபாயம்
Human Reproduction Update எனப்படும் ஆய்வு இதழில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ்வாறு விந்தணு குறைதல் என்பது மனிதர்களின் ஆயுட்காலம் குறைவையும், விதைப்பை புற்றுநோய் அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியுள்ளது என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இது குறித்து அவர்கள் கூறியுள்ளதாவது, "நாம் வெறுமென விந்தணு குறைவு என்று மட்டும்தான் இதனை பார்க்கிறோம். ஆனால் இதன் அர்த்தம் வெறுமென கருவுற்றலுடன் தொடர்புடைய பிரச்னை மட்டுமன்று. மாறாக, இது நாட்பட்ட நோய்களுக்கான அறிகுறி. மேலும், இவ்வாறு இருப்பது விதைப்பை புற்றுநோய் குறித்த அபாயத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

ஆய்வு முடிவு
ஆண்களின் ஆரோக்கியத்தை விந்தணுக்கள் தெரிவிக்கின்றன. ஆனால் தற்போது இது குறைந்திருப்பது ஆண்களின் உடல்நலன் சார்ந்த பிரச்னை குறித்த சந்தேகத்தை மட்டுமின்றி, மனித குலத்தின் ஆரோக்கியம் குறித்த கேள்வியையும் எழுப்பியுள்ளது. விந்தணு எண்ணிக்கை சரிவுடன், விந்தணுவின் செறிவும் குறைந்திருப்பது ஆய்வில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பிரச்னை நவீன சூழல் மற்றும் வாழ்க்கை முறை குறித்த சர்வதேச நெருக்கடியை பிரதிபலிப்பதாக இருக்கிறது. 53 நாடுகளிலிருந்து பெறப்பட்ட ஆய்வு முடிவில் இந்த விஷயம் வெளிவந்துள்ளது.

2000ம் ஆண்டுக்கு பின்னர்
மட்டுமல்லாது கடந்த 2011-2018 என 7 வருட ஆய்வு முடிகளையும் சேர்த்து ஒப்பிட்டு தற்போது மேற்குறிப்பிட்ட முடிவுகள் வெளியாகியுள்ளன. வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் முன்னர் இருந்ததைவிட தற்போது விந்தணு குறைவு மற்றும் விந்தணு செறிவு குறைந்திருப்பதை அந்நாட்டு ஆண்கள் கூறியுள்ளனர். விந்தணு எண்ணிக்கை TSC என்றும் விந்தணு செறிவு SC என்றும் கணக்கிடப்படுகிறது. கடந்த 2000ம் ஆண்டுக்கு பின்னர் உலகம் முழுவதும் மேற்குறிப்பிட்ட இரண்டிலும் கடுமையான சரிவு ஏற்பட்டுள்ளது.

ரசாயனங்கள்
இந்தியாவிலும் இவ்வாறு சரிவு காணப்படுகிறது. இந்த சரிவு தொடர்ந்து அதிகரித்துதான் வருகிறதேயொழிய, குறைந்தபாடில்லை. உலகம் முழுவதும் கடந்த 46 ஆண்டுகளில் 50% அதிகமானோரிடம் இந்த சரிவு காணப்படுகிறது. இதற்கான முழுமையான காரணம் என்ன? என்பது குறித்து இன்னும் ஆராயப்படவில்லை. எனினும் குழந்தை கருவில் இருக்கும்போது இனப்பெருக்க மண்டலத்தில் ஏற்படும் வளர்ச்சி தடையின் காரணமாக இதுபோன்று ஏற்படலாம். மட்டுமல்லாது, சுற்றுப்புற சூழல், ரசாயனயங்கள் ஆகியவையும் இந்த பாதிப்புகளுக்கு காரணமாக இருக்கலாம்.

இந்தியா
எது எப்படியோ! ஆனால் ஒரு விஷயம் மட்டும் உறுதியாக தெரியும். இந்த பிரச்னைக்கு தீர்வு காணாவிடில் ஒட்டுமொத்த மனித சமூகமுமே அழிவை நோக்கி செல்லும் என்பதுதான் அது. இந்த ஆய்வின் மூலம், அனைவருக்கும் சுகாதாரமான மற்றும் இனப்பெருக்கத்திற்கு தேவையான ஆரோக்கியமான சுற்றுப்புற சூழலை உலக நாடுகள் உருவாக்க வேண்டும் என்பதை அறிவுறுத்துகிறோம். இதனை உலக நாடுகள் மிக அவசரமாக செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. அதேபோல இந்தியாவை பொறுத்த அளவில் தனியாக ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும்" என்று இஸ்ரேலில் உள்ள ஜெருசலேமின் ஹீப்ரு பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் ஆய்வாளருமான 'ஹகாய் லெவின்' கூறியுள்ளார்.
உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் TSC மற்று SC ஆகியவை 1 சதவிகிதம் குறைந்து வருகிறது. உலகின் மக்கள் தொகை 800 கோடியாக அதிகரித்துள்ள நிலையில், அதிக மக்கள் தொகை இருப்பதால் இந்தியாவில் இதன் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்றும் ஆய்வாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications