Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஈரான் போரால் அமெரிக்காவிற்கு என்ன லாபம்.. டிரம்ப்பின் நிஜமான நோக்கம் என்ன.. முழு பின்னணி

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: ஈரான் உடனான போரால் எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இந்த எண்ணெய் விலை உயர்வை அமெரிக்காவிற்கு சாதகமான விஷயமாகச் சித்தரித்து வருகிறார் அதிபர் டொனால்ட் டிரம்ப். அமெரிக்கா உலகின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தியாளர், எனவே எண்ணெய் விலை உயரும் போது நாம் நிறைய பணம் சம்பாதிக்கிறோம். ஆனால், ஒரு தீய பேரரசான ஈரான் அணு ஆயுதங்களை வைத்திருப்பதைத் தடுப்பதும், மத்திய கிழக்கு மற்றும் உலகையே அது அழிப்பதைத் தடுப்பதும் ஒரு அதிபராக எனக்கு மிகவும் முக்கியமானது என்று கூறியுள்ளார். ஆனால் டிரம்பின் இந்த கருத்துக்கு ஈரான் விளக்கம் அளித்துள்ளது.

அமெரிக்காவுடன் ஓமன் நாட்டின் மத்தியஸ்தத்தில் நடந்த பேச்சுவார்த்தையின் போது, அணு ஆயுதங்களை உருவாக்கும் எந்தவொரு திட்டத்தையும் கைவிடத் தயார் என ஈரான் முன்மொழிந்ததாகவும், ஆனால் அமெரிக்க அதிகாரிகள் அதன் "தொழில்நுட்ப விவரங்களைப் புரிந்து கொள்ள முடியாததால்"அமெரிக்கா அதை நிராகரித்துவிட்டதாகவும் ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி குற்றம் சாட்டியுள்ளார்.

What does the US stand to gain from a war with Iran What is Donald Trump s true motive

டிரம்பிற்கு பதில்

எரிசக்தி விலையைக் குறைவாக வைத்திருப்பதை விட, ஈரானிடம் அணு ஆயுதங்கள் இருப்பதைத் தடுப்பதே தனது அரசாங்கத்தின் முதன்மையான நோக்கம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியதைத் தொடர்ந்து ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சியின் இந்த கருத்து வந்திருக்கிறது.

முன்னேற்றம் இல்லை

ஈரான் மீதான போர் காரணமாக எண்ணெய் மற்றும் பெட்ரோல் விலைகள் கடுமையாக உயர்ந்த நிலையில், முடங்கிக் கிடக்கும் எண்ணெய் டாங்கர் கப்பல்கள் செல்வதற்காக 'ஹார்முஸ் ஜலசந்தியை' திறப்பதற்கான தெளிவான திட்டத்தை முன்வைக்க அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது அதிகாரிகள் குழுவினர் போராடி வருகின்றனர். ஆனால் பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் இல்லை

ஈரான் கூறியது என்ன

பிப்ரவரி 26 அன்று ஜெனீவாவில் நடந்த அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான மூன்றாவது சுற்று பேச்சுவார்த்தையை மேற்கோள் காட்டி ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி வெளியிட்ட பதிவில் "அணு ஆயுதங்கள் இல்லை என்பதை உறுதி செய்யும் ஈரானின் முன்மொழிவை அமெரிக்கா நிராகரித்தது. ஏனெனில் அமெரிக்க அதிகாரிகளுக்கு அதன் தொழில்நுட்ப விவரங்கள் புரியவில்லை," என்று கூறியுள்ளார். மேலும், "உயரும் எண்ணெய் விலைகள் மற்றும் வரி விதிப்புகளால் அமெரிக்கர்களுக்கு 'பணம் கிடைக்காது'. அவை கார்ப்பரேட் நிறுவனங்களைத்தான் செழிப்பாக்கும், சாமானிய குடும்பங்களை நசுக்கும்," என்றும் அப்பாஸ் அராக்சி கூறினார்.

ஈரான் ஊடகங்கள் கூறுவது என்ன

ஈரானின் மூன்று முக்கிய அணுசக்தி நிலையங்களை அகற்றவும், செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஒப்படைக்கவும் அமெரிக்கா கோரியதாகவும், ஆனால் யுரேனியம் செறிவூட்டலை பூஜ்ஜியமாகக் குறைக்க ஈரான் மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், அணு ஆயுதம் தயாரிக்கும் எண்ணம் தங்களுக்கு இல்லை என்றும், எரிசக்தி உற்பத்திக்காகவே யுரேனியம் செறிவூட்டப்படுவதாகவும் ஈரானிய ஊடகங்கள் அரசின் கருத்தை கூறியுள்ளன

ட்ரம்ப்பின் கருத்து என்ன

எண்ணெய் விலை உயர்வை ஒரு சாதகமான விஷயமாகச் சித்தரிக்க முயலும் அதிபர் ட்ரம்ப், ஈரானின் அணுசக்தித் திட்டத்தை முடக்குவதே தனது முன்னுரிமை என்று கூறியிருக்கிறார். அமெரிக்கா தற்போது உலகின் முன்னணி எண்ணெய் உற்பத்தியாளராக இருப்பதால், கச்சா எண்ணெய் விலை உயரும்போது நாடு நிதி ரீதியாகப் பயனடையும் என்று டிரம்ப் தனது சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.

நிறைய பணம் சம்பாதிக்கலாம்

இதுபற்றி டிரம்ப் கூறும் போது, "அமெரிக்கா உலகின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தியாளர், எனவே எண்ணெய் விலை உயரும்போது நாம் நிறைய பணம் சம்பாதிக்கிறோம். ஆனால், ஒரு தீய பேரரசான ஈரான் அணு ஆயுதங்களை வைத்திருப்பதைத் தடுப்பதும், மத்திய கிழக்கு மற்றும் உலகையே அது அழிப்பதைத் தடுப்பதும் ஒரு அதிபராக எனக்கு மிகவும் முக்கியமானது," என்று ட்ரம்ப் அந்த பதிவில் கூறியுள்ளார்.

இதனிடையே கடந்த மாதம் டிரம்ம்ப தனது உரையில், ஒரு கேலன் பெட்ரோல் விலை 2.30 டாலராக இருப்பதாக ட்ரம்ப் பெருமை பேசினார். ஆனால் தற்போது அந்த விலை 50 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்து, தேசிய சராசரி 3.60 டாலராக அதிகரித்துள்ளது. இந்த விலை மாற்றம், ட்ரம்ப்பின் உள்நாட்டு அரசியல் நலன்களுக்கும், உலக அரங்கில் அமெரிக்காவின் பலத்தைக் காட்ட வேண்டும் என்ற அவரது விருப்பத்திற்கும் இடையே முரண்பாட்டை ஏற்படுத்தி இருக்கிறது.

பொருளாதார தாக்கம்

நவம்பரில் நடக்கவுள்ள இடைக்காலத் தேர்தலுக்கு முன்னதாக இந்த விலை உயர்வு வந்துள்ளது. அதிக பெட்ரோல் விலை முந்தைய அதிபர் ஜோ பைடனைத் தோற்கடிக்க உதவியதாக ட்ரம்ப் முன்னர் கூறியிருந்தார். ஆனால், தற்போதைய விலை உயர்வு வாக்காளர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தும் என்றோ அல்லது போரை முன்கூட்டியே முடிக்க அழுத்தம் கொடுக்கும் என்றோ தான் கவலைப்படவில்லை என்று டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறினார்.

2 கோடி பேரல்

இதற்கிடையில், கோல்ட்மேன் சாக்ஸ் வங்கி, எண்ணெய் விலை உயர்வால் பணவீக்கம் அதிகரிக்கும், வளர்ச்சி குறையும் மற்றும் வேலையின்மை விகிதம் உயரும் என்று கணித்துள்ளது. வழக்கமாக ஒரு நாளைக்கு 2 கோடி பேரல் எண்ணெய் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும், ஆனால் இப்போது பெரும்பாலான டாங்கர் கப்பல்கள் அந்தப் பாதையைத் தவிர்க்கின்றன. இதனால் நிலவும் நிச்சயமற்ற சூழலால், கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 100 டாலராக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+