ஜோடி போட்டுக்குவோமா? ரொனால்டோவுக்கு டஃப் கொடுக்கும் கோழி! சிஆர்7 Vs சிக்கன் 7... கலக்கல் வீடியோ
டெல்லி : பிரபல கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு டப் கொடுக்கும் வகையில் கோழி ஒன்று ஃபுட்பால் விளையாடுவது போல் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
Recommended Video
இன்டர்நெட் தான் எல்லாமே என்று அனைத்தும் இணைய மயமாகிவிட்ட இந்த உலகில், எந்த வீடியோ எப்போது வைரலாகும், யார் பிரபலம் ஆவார்கள் என்பதை கணிக்கவே முடியாது.
சாதாரண நபர்கள் கூட ஒரே நாளில் இணையத்தில் மிகப்பெரும் பிரபலங்களாக மாறுவதும், மிகப்பெரிய பிரபலங்கள் கூட சில நாட்களில் சிக்கி சின்னாபின்னமாகும் வழக்கமாக நடைபெற்று வருகிறது.

புட்பால் விளையாடும் கோழி
அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ இணையத்தில் உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வருகிறது. அதாவது கோழி ஒன்று, கால்பந்து விளையாடுவது போன்ற அந்த வீடியோ தான் தற்போது ஹாட் நியூஸ். இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த வீடியோ உண்மையாக இருந்தால் கிரிக்கெட் கால்பந்து ஜாம்பவானான கிறிஸ்டியானோ ரொனால்டோ மிரண்டு விடுவார்.

இன்ஸ்டாகிராமில் வைரல்
துரதிஷ்டவசமாக அந்த வீடியோ மிக அழகாக எடிட் செய்யப்பட்டு உள்ளது. ஆனால் அது தெரியாத அளவுக்கு தத்ரூபாமக இருக்கும் இந்த வீடியோவை "wonderdixe" என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவினை ஆயிரக்கணக்காணோர் லைக்ஸ் செய்துள்ளதோடு, அதில் கிறிடியானோ ரொனால்டோவை டேக் செய்து வருகின்றனர்.

ரொனால்டோவுக்கு போட்டி?
இந்த வகையான கோழிகளை ரொனல்டோ சாப்பிடுகிறாரா? என கிண்டலாக கேள்வி எழுப்பி வருகின்றனர். ரொனால்டோவை ஏன் இழுக்க வேண்டும் , வேறு ஃபுட்பால் வீரர்கள் இல்லையா என கேள்வி எழலாம். இந்த வீடியோவே அவரை ரெபரன்ஸாக வைத்து தான் உருவாக்கப்பட்டுள்ளது போல தெரிகிறது. பந்துக்குக் பதிலாக கால்களால் முட்டையை உருட்டி, அதன் மேல் கால்பந்தாட்ட வீரர்களைப் போல துள்ளி விளையாடுவதோடு, பின்னர் கோழி முட்டையை அதன் முதுகில் எறிந்து வைத்து கழுத்து மற்றும் இறக்கைகளில் உருட்டி, கழுத்தில் நிறுத்துகிறது.

ரசிகர்கள் கமெண்ட்
இவை எல்லாம் கிறிஸ்டியானோ ரொனால்டோ களத்தில் பந்தை வைத்து அடிக்கடி காட்டும் வித்தைகள். பிரீமியர் லீக் கிளப் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக முன்கள வீரராகவும், போர்ச்சுகல் தேசிய அணிக்கு கேப்டனாகவும் இருக்கும் கால்பந்து வீரரான ரொனால்டோ, இந்த கோழியின் திறமையால் ஈர்க்கப்படலாம். எனவும் இது அவர் கண்ணில் படும் வரை ஷேர் செய்யவும் எனவும் பலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications