சகுனி, துரியோதனன்.. சரமாரியாக ஆவேசமான சித்தார்த்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சகுனி, துரியோதனன் என்று சகட்டு மேனிக்கு திட்டியுள்ளார் நடிகர் சித்தார்த். ஆனால் யாரை என்றுதான் அவர் குறிப்பிடவில்லை.

டெல்லியில் ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீசார் நேற்று தடியடி நடத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுக்க போராட்டம், பரவி வருகிறது.

These two are not Krishna and Arjuna, says Siddharth

இந்த நிலையில்தான், சித்தார்த் காட்டமாக ஒரு ட்வீட் வெளியிட்டுள்ளார்.

நடிகர் சித்தார்த் வெளியிட்ட ட்வீட்டில், அந்த இருவரும், கிருஷ்ணரும், அர்ஜுனரும் கிடையாது. அவர்கள் சகுனி மற்றும் துரியோதனன். பல்கலைக்கழகங்கள் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்துங்கள். மாணவர்கள் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்துங்கள். இவ்வாறு ட்வீட் செய்துள்ளார். அந்த இருவரும் என்று யாரை இவர் குறிப்பிடுகிறார் என்பது தெரியவில்லை. அதைப் பற்றி அவரும் வெளிப்படையாக தெரிவிக்காமல் தவிர்த்துள்ளார்.

பாலிவுட் இயக்குநரும், நடிகருமான, அனுராக் காஷ்யப் வெளியிட்டுள்ள ட்வீட்டில், இது ரொம்ப தூரம் போய்விட்டது. இனிமேலும், அமைதியாக இருக்க முடியாது. இந்த அரசு பாசிசப்போக்குடன் இருப்பது நன்கு தெரிகிறது. உண்மையில், அமைதியாக இருக்க கூடிய குரல்களை பார்க்கும்போது இன்னும் கோபம் கூடுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+