"நேரம் வந்துவிட்டது! வரலாறு முக்கியம்.." ஞானவாபி மசூதி விவகாரம்.. ஆர்எஸ்எஸ் பரபர கருத்து
டெல்லி: உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஞானவாபி மசூதி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், இது தொடர்பாக ஆர்எஸ்எஸ் அமைப்பினர் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்,
உத்தரப் பிரதேசம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகே ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. அவுரங்கசீப் ஆட்சிக் காலத்தில் இந்த மசூதி கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், இங்கிருந்த இந்து கோயில் ஒன்றை இடித்துவிட்டே அவுரங்கசீப் ஆட்சிக் காலத்தில் இந்த ஞானவாபி மசூதி கட்டப்பட்டதாக ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர்.

ஞானவாபி மசூதி
மேலும், இந்த ஞானவாபி மசூதி வளாகத்தின் வெளிப்புறச் சுவரில், சிங்கார கவுரி அம்மன் சிலை அமைந்து உள்ளது. இந்த சிலைக்கு ஆண்டுக்கு ஒரு முறை பூஜைகளும் நடத்தப்படுகிறது. இதனிடையே இந்த அம்மன் சிலைக்குத் தினமும் பூஜை நடத்த அனுமதிக்கக் கோரி, வாரணாசி நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம், ஐந்து இந்து பெண்கள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் அலகாபாத் நீதிமன்றம் அளித்த உத்தரவின்படி ஞானவாபி மசூதியில் வீடியோ உடன் கூடிய ஆய்வு நடத்தப்பட்டது.

ஆர்எஸ்எஸ் கருத்து
இதனிடையே ஆர்எஸ்எஸ் அமைப்பினர் இது தொடர்பாக சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஆர்எஸ்எஸ் அமைப்பின் விளம்பரப் பொறுப்பாளர் சுனில் அம்பேத்கர், "இப்போது தான் சில உண்மையான தகவல்கள் வெளி வர தொடங்கி உள்ளது. அனைத்து உண்மைகளும் வெளியே வர வேண்டும் என்பதே எனது விருப்பம். உண்மையை எத்தனை நாட்கள் தான் மறைக்க முடியும். அது கண்டிப்பாக ஒரு நாள் வெளியே வந்துவிடும்

நேரம் வந்துவிட்டது
நமது சமூகத்தின் முன் வரலாற்று உண்மைகளைச் சரியான கண்ணோட்டத்தில் முன்வைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றே நான் கருதுகிறேன்" என்று அவர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் சஞ்சீவ் பல்யானும் இதே கருத்தைத் தெரிவித்தார். மசூதி வளாகத்தில் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதை அறிந்ததும், தான் கண் கலங்கிவிட்டதாக அவர் தெரிவித்தார்.

முக்கியம்
இதில் ஆர்எஸ்எஸின் அம்பேத்கர் கூறியுள்ள கருத்துகள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. ஏனென்றால், ராம ஜென்ம பூமி வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்த போதே ஞானவாபி மசூதி மற்றும் மதுரா கிருஷண்ன ஜென்ம பூகி குறித்த பேச்சுகளும் எழுந்தன. அப்போது அவர்களுக்குப் பதிலளித்த ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், "வரலாற்றுக் காரணங்களுக்காகச் சங்கம் இந்த (ராமஜென்ம பூமி) இயக்கத்துடன் இணைந்து செயல்பட்டது. இது ஒரு விதிவிலக்கு. நாட்டின் வளர்ச்சிக்காக இப்போது அனைவரும் மீண்டும் இணைந்து செயல்படுவோம்" என்றார்.
Recommended Video

காசி விஸ்வநாதர் கோயில்
மோகன் பகவத் அப்போது அப்படிக் கூறி இருந்த நிலையில், ஞானவாபி மசூதி விவகாரத்தில் சுனில் அம்பேத்கரின் கருத்துகள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. ஞானவாபி மசூதி உலகப் புகழ் பெற்ற காசி விஸ்வநாதர் கோயிலுக்கு மிக அருகே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக இஸ்லாமிய அமைப்பினர் உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications