காவிரி நீர் திறக்காததால் 4 லட்சம் ஹெக்டேர் விவசாயம் பாதிப்பு.. சுப்ரீம் கோர்டில் தமிழக அரசு முறையீடு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கர்நாடக அரசு காவிரியில் நீர் திறக்காததால், தமிழகத்தில் 4 லட்சம் ஹெக்டேர் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்துள்ளது. தமிழ்நாட்டு அரசின் முறையீட்டை பரிசீலிப்பதாக தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது. கடந்த மாதம் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் தமிழகத்திற்கு 3,000 கன அடி நீர் திறக்க உத்தரவிட்டும், கடந்த 23 ஆம் தேதியில் இருந்து கர்நாடக அரசு நீரை திறந்துவிடவில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

காவிரியில் தமிழகத்திற்கு நியாயமான அளவு தண்ணீரை திறந்து விட கர்நாடகா மறுத்து வருகிறது. காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தேவையான நீரை பெற பெரும் சட்டப் போராட்டமே நடத்த வேண்டிய நிலைதான் உள்ளது. காவிரி விவகாரத்தில் இரு மாநிலங்களுக்கும் இடையே பிரச்சனை இருந்து வருவதால், நதி நீரை பங்கீட்டு கொள்வது தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு உள்ளது.

TN government makes urgent appeal in the Supreme Court 4 lakh hectares of land affected due to non-release of Cauvery water

இந்தக் குழு அவ்வப்போது தமிழகத்திற்கு காவிரியில் இருந்து திறந்துவிட வேண்டிய நீரின் அளவு குறித்து கர்நாடாகாவுக்கு உத்தரவிடுவது வழக்கம். காவிரி ஒழுங்காற்று குழு இது தொடர்பாக பரிந்துரையை அளிக்கும். அந்த பரிந்துரையின் படி காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டு வருகிறது. கடந்த 23 ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணையம் கூடியது. இதில், தமிழகத்​துக்கு அடுத்த 15 நாட்​களுக்கு விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீரை திறந்​து​விட வேண்​டும் என்று உத்தரவிடப்பட்டது.

ஆனால் கர்நாடக அரசு உரிய நீரை திறக்கவில்லை என தமிழக அரசு குற்றம்ச்சாட்டியுள்ளது. மேலும் இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் அவசர முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் தமிழக அரசு சார்பில், காவிரி மேலாண்மை ஆணையம் தமிழகத்திற்கு காவிரியில் வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

ஆனால் கடந்த அக்டோபர் மாதம் 23 ஆம் தேதி முதல் கர்நாடக அரசு காவிரியில் நீரை திறந்துவிடவில்லை. காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை கர்நாடக அரசு பின்பற்றவில்லை. கர்நாடக அரசு இப்படி உரிய நேரத்தில் தமிழகத்திற்கு காவிரியில் நீர் திறந்துவிடாததால் சுமார் 4 லட்சம் ஹெக்டேர் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.. எனவே விரைந்து தண்ணீர் திறக்க உத்தரவிட வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டு அரசின் முறையீட்டை பரிசீலிப்பதாக தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது. எனினும் நேற்று முன் தினம் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக கபினி மற்றும் கேகேஆர்எஸ் அணைகளில் இருந்து கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிட்டது. சுமார் 4 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டதாக தகவல் வெளியாகின.

காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டமும் டெல்லியில் விரைவில் கூட உள்ளது. எஸ்.கே. ஹல்தர் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு அடுத்த 15 நாட்களுக்கு திறக்க வேண்டிய நீரின் அளவு குறித்து உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, புதுவை, கேரளா உள்ளிட்ட மாநில அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+