இப்படி கூட சாவு வருமா.. 25வது திருமண விழாவில் ஆட்டம் போட்ட தொழிலதிபர்.. சரிந்து விழுந்து உயிரிழப்பு
டெல்லி: இந்த காலத்தில் எப்படி யாருக்கு மரணம் வரும் என்பது தெரிவதில்லை. நல்ல சந்தோஷமாக ஆட்டம் பாட்டத்துடன் மகிழ்ச்சியாக இருப்போருக்கும் கூட திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது. நொடியில் ஏற்படும் இதுபோன்ற மரணங்கள் ஒட்டுமொத்த குடும்பத்தினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகவே இருக்கிறது. இப்போது அதுபோன்ற ஒரு அதிர்ச்சி சம்பவம் தான் நடந்துள்ளது.
முன்பெல்லாம் மாரடைப்பு என்பது அங்கு ஒன்றும் இங்கு ஒன்றுமாகவே ஏற்பட்டு வந்தது. ஆனால், இப்போது நல்ல உடல்நிலையில் இருப்போருக்குக் கூட திடீரென மாரடைப்பு ஏற்படுகிறது. நொடியில் உயிரிழக்கிறார்கள். இப்படி கூட சாவு வருமா என நாம் யோசிக்காத வழிகளிலும் கூட மரணங்கள் ஏற்படுகிறது. அப்படியொரு ஷாக் சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது.

25ஆவது ஆண்டு விழா
உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில் ஒரு தம்பதியினர் தங்கள் 25வது திருமண ஆண்டு விழாவைக் கொண்டாடிக் கொண்டு இருந்தனர். ஆனால், அந்த கொண்டாட்டமே அவர்களுக்குத் துக்கமாக மாறியது. திருமண விழா கொண்டாட்டத்தின்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டதில் அந்த இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர் 50 வயதான வாசிம் சர்வத். இவர் அங்கு பிரபல ஷூ தொழிலதிபராக இருக்கிறார். இவரது மனைவி ஃபரா. இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 25 ஆண்டுகள் ஆகிறது. 25ஆவது திருமண விழாவை கோலாகலமாக கொண்டாடத் திட்டமிட்ட இந்த ஜோடி, இதற்காக பிலிபிட் பைபாஸ் சாலையில் தேவையான ஏற்பாடுகள் செய்திருந்தனர்.
கோலாகலமாகக் கொண்டாட்டம்
25வது ஆண்டு திருமண விழா என்பதால் வெகு சிறப்பாகக் கொண்டாட்டங்களை நடத்த ஏற்பாடு செய்துள்ளனர். உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் அழைப்பிதழைக் கொடுத்து அழைத்துள்ளனர். திருமண விழாவும் கூட தொடங்கி கோலாகலமாகவே கொண்டாட்டங்கள் நடந்துள்ளன.
அப்போது அந்த ஜோடியும் அவர்களது குடும்பத்தினரும் பாரம்பரிய உடைகளை அணிந்து, மேடையில் நடனமாடிக் கொண்டு இருந்தனர்.. வாசிம்- ஃபரா தம்பதி மேடையில் நடனமாடிக் கொண்டு இருந்த நிலையில், திடீரென வாசிம் மேடையிலேயே மயங்கி விழுந்தார்.
மாரடைப்பால் மரணம்
ஃபராவும் உறவினர்களும் வாசிமை நோக்கி விரைந்தனர். அவரை எழுப்ப முயன்றனர். ஆனாலும் முடியவில்லை. இதையடுத்து உடனடியாக அவரை மீட்ட குடும்பத்தினர் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இருப்பினும், சிகிச்சை பலனில்லாமல் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதை அவர்கள் குடும்பத்தினரால் நம்பவே முடியவில்லை. சற்று நேரத்திற்கு முன்பு குடும்பத்தினருடன் ஜாலியாக ஆட்டம் பாட்டம் என இருந்தவர் இப்படி உயிரிழந்துவிட்டதைப் பார்த்து அதிர்ந்து போனார்கள். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது.
-
நடுக்கடலில் தத்தளித்த இந்தியர்கள்.. அடுத்த நொடி அமெரிக்க செய்த காரியம்.. மீண்டும் மீண்டுமா.! -
சீனா, பாகிஸ்தானுக்கு ஷாக் கொடுத்த இந்தியா! 2 நாட்களில்.. 3 ஏவுகணை சோதனைகள்! DRDO அசத்தல்! -
இந்திய மாலுமிகள் மீது அட்டாக்! அமெரிக்க வெளியுறவு செயலாளரை கூப்பிட்டு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி












Click it and Unblock the Notifications