Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அமீரகம் செல்வோர் கவனத்திற்கு! உங்கள் பாஸ்போர்ட்களில் இது கட்டாயம் தேவை! திடீர் அறிவிப்பால் குழப்பம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் இருந்து ஐக்கிய அமீரகத்திற்கு அதிகப்படியானோர் செல்லும் நிலையில், அந்நாட்டு அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது.

தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்று அதிகப்படியான நபர்கள் வேலை செய்வார்கள். இப்படிப் பல ஆயிரம் பேர் தமிழ்நாட்டில் இருந்து மட்டும் அங்கு வேலைக்குச் சென்றுள்ளனர்.

அதிலும் குறிப்பாக ஐக்கிய அமீரகத்தில் கணிசமான அளவுக்கு இந்தியர்கள் வேலைக்குச் சென்றுள்ளனர். இந்தச் சூழலில் ஐக்கிய அமீரகம் செல்பவர்களுக்கு புதிய கட்டுப்பாடு ஒன்று இப்போது விதிக்கப்பட்டு உள்ளது.

 திடீர் அறிவிப்பு

திடீர் அறிவிப்பு

அதாவது சுற்றுலா, வருகை உட்பட எந்த வகையான விசாவில் பயணிக்கும் ஐக்கிய அமீரகம் செல்லும் பயணிகளுக்கு பாஸ்போர்ட்டில் இரண்டு பெயர்கள் இருக்க வேண்டும் என ஐக்கிய அமீரக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். அதாவது பொதுவாக பாஸ்போர்ட்களில் முதல் பெயர் (First name), கடைசி பெயர் (last name) என இரண்டு இருக்கும். அந்த இரண்டுமே நிரப்பப்பட்டு இருந்தால் மட்டுமே பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என ஐக்கிய அமீரகம் அறிவித்து உள்ளது.

 அனுமதி இல்லை

அனுமதி இல்லை

கடந்த திங்கள்கிழமை முதல் இந்த விதி அமலுக்கு வந்துள்ளது. இது தொடர்பாக ஐக்கிய அமீரக அதிகாரிகள் தங்கள் வர்த்தக கூட்டாளர் இண்டிகோ நிறுவனத்திடமும் கூறியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இனிமேல், முதல் மற்றும் கடைசி பெயர்கள் இரண்டும் தெளிவாக பாஸ்போர்டில் குறிப்பிட்டவர்கள் மட்டுமே ஐக்கிய அமீரகத்தில் அனுமதிக்கப்படுவார்கள் என்பதை அதிகாரிகள் தெளிவுபடுத்தி உள்ளனர்.

 புதிய விதி என்ன

புதிய விதி என்ன

அதாவது ஒருவரின் பெயர் அஜித் குமார் என வைத்து கொள்ளுங்கள். இதில் அஜித் என்பது முதல் பெயர்.. குமார் என்பது இரண்டாவது பெயர். இந்த இரண்டையும் பாஸ்போர்ட்டில் தெளிவாகக் குறிப்பிட்டு இருக்க வேண்டும். அதேநேரம் சிலருக்கு நவீன், சுரேஷ் என்பது போல ஒரே ஒரு பெயர் மட்டும் இருக்கும். அவர்களில் பலர் பொதுவாக தங்கள் தந்தை பெயரை இரண்டாவது பெயராகப் போடுவார்கள். ஆனால், சிலர் அப்படிச் செய்யாமல் தங்கள் பெயரை மட்டுமே முதல் பெயரில் குறிப்பிட்டு பாஸ்போர்டுகளை பெறுவார்கள்.

 எப்போது முதல்

எப்போது முதல்

இவர்களுக்கு இரண்டாம் பெயர் இருக்கும் இடத்தில் காலியாகவே இருக்கும். இதுபோன்ற பாஸ்போர்டுகளை வைத்திருப்பவர்கள் தான் இனி ஐக்கிய அமீரகத்தில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், "ஐக்கிய அமீரக அறிவுறுத்தல் படி நவம்பர் 21 முதல், சுற்றுலா உட்பட எந்த வகையான விசாவில் பயணிக்க விரும்புவோரின் பாஸ்போட்களில் ஒரு பெயர் (First name) மட்டுமே இருந்தால், அவர்கள் அமீரகம் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்" என்று கூறப்பட்டு உள்ளது.

 என்ன செய்ய வேண்டும்

என்ன செய்ய வேண்டும்

அதேநேரம் பாஸ்போர்ட்டில் ஒற்றைப் பெயரைக் கொண்டவர்கள், குடியிருப்பு அனுமதி அல்லது நிரந்தர விசா வைத்திருப்பவர்கள் தங்கள் பாஸ்போர்டுகளில் இரண்டாம் பெயரைச் சேர்த்துக் கொண்டால், அவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்பதையும் அமீரக அதிகாரிகள் தெளிவுபடுத்தி உள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக எதாவது சந்தேகம் இருந்தால் தாராளமாக தங்கள் மேனஜரை தொடர்பு கொள்ளலாம் என்றும் இண்டிகோ அறிவித்து உள்ளது.

 என்ன காரணம்

என்ன காரணம்

ஐக்கிய அமீரகம் திடீரென இந்த விதியை எதற்காகக் கொண்டு வந்தார்கள் என்பது குறித்த முறையாக எந்தவொரு அறிவிப்பும் இல்லை. ஐக்கிய அமீரகத்தில் இந்தியாவில் இருந்து, அதிலும் குறிப்பாகத் தமிழ்நாட்டில் இருந்து அதிகப்படியானோர் செல்லும் நிலையில், அவர்கள் இந்த திடீர் அறிவிப்பு அமீரகம் செல்ல திட்டமிட்டு உள்ளவர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது. இது தொடர்பாக முன்கூட்டியே அறிவித்து இருக்க வேண்டும் என்றும் விதியை உடனடியாக அமலுக்குக் கொண்டு வந்தால் ஏற்கனவே திட்டமிட்டுள்ளவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் பயணிகள் அதிருப்தி தெரிவித்து உள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+