ஒரே நேரம்.. ஒரே இடம்.. ஒரே ரூட்! ஆனால் ஊபரில் இருவருக்கும் வேறு வேறு கட்டணம்.. குட்டையை குழப்பும் AI

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நீங்கள் ஊபர் செயலியில் கார் புக் செய்ய முயலும்போது, வழக்கத்தைவிட திடீரென அதிக கட்டணம் காட்டப்படுவதை பார்த்திருக்கலாம். இதற்கும் கூட ஏஐ தான் காரணம் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா.. பயணிகளிடம் எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பதை நிர்ணயிக்க ஊபர் பல்வேறு விஷயங்களை கணக்கில் எடுத்துக்கொள்கிறது. இது குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்!

இந்த காலத்தில் பலரும் டாக்சி புக் செய்ய ஊபர், ரேபிட்டோ செயலிகளையே பயன்படுத்துகிறார்கள். நாம் எங்கு இருக்கிறோம் என்பதே அந்த செயலியே சொல்லிவிடும் நிலையில், சேருமிடத்தை போட்டு புக் செய்தால் நிமிடங்களில் கார் வந்துவிடும். ஆனால், இதற்கு பின்னணியில் பல்வேறு விஷயங்கள் நடக்கிறது.

Uber AI

கட்டணம்

குறிப்பாக கட்டணத்தை நமக்கு காட்டும்போது பயணிகளின் தேவை, அந்த பகுதியில் இருக்கும் ஓட்டுநர்களின் எண்ணிக்கை, போக்குவரத்து நெரிசல், வானிலை, பயணிக்கும் இடம் மற்றும் பயண நேரம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களை கணக்கில் எடுத்துக் கொள்கிறது. அதற்கு ஏற்பவே கட்டணத்தை நமக்கு காட்டுகிறது.

இதில் முக்கியமான கேள்வி என்னவென்றால்.. இரண்டு பேர் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் இருந்து ஒரே சேரும் இடத்துக்கு புக் செய்ய முயன்றால் அவர்களுக்கு வேறு வேறு கட்டணம் கட்டணம் காட்டுமா என்பதுதான். இது தொடர்பாக பிஸ்னஸ் இன்டைசர் ஆய்வு செய்தது. அதன் ஊழியர்கள் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் இருந்து ஊபர் காரை முன்பதிவு செய்ய முயன்றுள்ளனர். அப்போது அவர்களுக்கு வெவ்வேறு கட்டணங்கள் காட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருவருக்குமான கட்டண வித்தியாசம் சுமார் 21 சதவீதம் வரை இருந்ததாக அந்த ரிப்போர்ட் கூறுகிறது.

வெவ்வேறு கட்டணம்

உதாரணமாக ஒருவருக்கு 94.96 கட்டணம் காட்டப்பட்ட நிலையில், அதே ரூட்டில் இன்னொரு பயணிக்கு 65.95 காட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஊபர் அல்காரிதம் கட்டணத்தை எப்படி நிர்ணயிக்கிறது, பயணிகளுக்கு ஏன் வித்தியாசமான கட்டணங்கள் காட்டப்படுகின்றன என்பது குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. பயணி இதற்கு முன்பு எப்படி புக் செய்தார் என்பதை எல்லாம் அது பார்க்காது என ஊபர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊபரில் டிரிப் கட்டணங்கள் தொடர்ந்து மாறுவதற்கு அதன் மார்கெட்டில் நிலவும் ரியல் டைம் மாற்றங்களே காரணம் என தெரிவித்துள்ளது. ஓட்டுநர்களின் எண்ணிக்கை, அவர்கள் பயணியை அடைய எடுக்கும் நேரம், போக்குவரத்து நெரிசல், பயணிக்கும் ரூட் உள்ளிட்ட பல காரணங்களை பொறுத்து கட்டணம் மாற்றக்கூடும் என ஊபர் நிறுவனம் கூறியுள்ளது.

ஊபர் விளக்கம்

ஒரே நேரத்தில் இருவருக்கு இரு வேறு கட்டணம் காட்டுவது குறித்து ஊபர் அளித்துள்ள விளக்கத்தில், இந்த ஆய்வில் கட்டணத்தை பாதிக்கக்கூடிய அனைத்து காரணங்களும் முழுமையாக கணக்கில் எடுத்து கொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இதில் ஏஐ பயன்பாடு இருக்கிறதா என்பது குறித்து ஊபர் எந்தவொரு விளக்கத்தையும் கொடுக்கவில்லை.

மேலும் ஊபரின் ஏஐ பயன்பாடு கட்டணத்தை நிர்ணயிப்பதுடன் முடிந்துவிடவில்லை. தேவை அதிகரிக்கக்கூடிய பகுதிகளை கணிப்பது, ஓட்டுநர்களை சரியான இடங்களில் நிறுத்துவது, பயண வழித்தடங்களை மேம்படுத்துவது, பயண நேரத்தை கணிப்பது மற்றும் மோசடிகளை கண்டறிவது உள்ளிட்ட பல பணிகளிலும் ஏஐ தொழில்நுட்பங்களை ஊபர் பயன்படுத்துகிறது.

அதிகரிக்கும்

இதன் மூலம் அதிகமான டிரிப்களை உருவாக்குவது, டிரைவர்களுக்கு வருவாயை அதிகரிப்பது மற்றும் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து ஊபர் பயன்படுத்துவதை ஊக்குவிப்பது ஆகியவை முக்கிய நோக்கங்களாக உள்ளன. பயணி தனது சேருமிடத்தை கொடுத்து சில நொடிகளில் இந்த ஒட்டுமொத்த வேலையையும் ஏஐ செய்து முடிகிறது. வரும் காலத்தில் ஊபரின் ஏஐ பயன்பாடு மேலும் அதிகரிக்கும் என்றே சொல்லப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+