ஓபிசி வாக்குகளுக்காக உயர் சாதி எதிர்ப்பை சம்பாதித்த மோடி அரசு? முக்கிய விவகாரத்தில் யூடர்ன்! பின்னணி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உயர்கல்வி நிறுவனங்களில் சாதி பாகுபாட்டை தடுப்பதற்காக கொண்டு வரப்பட்ட பல்கலைக்கழக மானிய குழுவின் புதிய விதிமுறைகளை மத்திய அரசு மறுபரிசீலனை செய்து வருவதாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ஒபிசி வாக்குகளுக்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்த நிலையில், திடீரென இதுபோல மத்திய அரசு கூறியுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது. இது குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்.!

நமது நாட்டில் சாதிய பாகுபாடுகள் என்பது பல ஆண்டுகளாகவே தொடரும் பிரச்சினையாக இருந்து வருகிறது. இதை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் காரணமாக சாதிய பாகுபாடுகள் கணிசமாக குறைந்திருந்தாலும் முற்றிலுமாக குறையவில்லை. மத்திய மாநில அரசுகள் இந்த விவகாரத்தில் தொடர்ச்சியாக நடவடிக்கை எடுத்து வருகிறது.

Narendra Modi UGC Cental govt OBC

யுஜிசி விதிகள்

இந்தச் சூழலில் தான் யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானிய குழு கடந்த ஜனவரி 13ம் தேதி புதிய விதிமுறைகளை அறிவித்தது. மதம், இனம், பாலினம், பிறந்த இடம், சாதி ஆகியவற்றின் அடிப்படையிலான பாகுபாட்டை உயர்கல்வி நிறுவனங்களில் ஒழிப்பதே இதன் முக்கிய நோக்கமாக இருந்தது. குறிப்பாக பட்டியலினத்தவர், பழங்குடியினர், சமூக மற்றும் கல்வியில் பின்தங்கிய வகுப்பினர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு சமத்துவத்தை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் இதில் இடம்பெற்றிருந்தன.

இதன்படி கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் புதிய அமைப்புகளை உருவாக்கி, பாகுபாடு தொடர்பான புகார்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யப்பட்டது. ரோஹித் வெமுலா மற்றும் பாயல் தட்வி ஆகியோர் சாதி பாகுபாடு காரணமாக உயிரிழந்த சம்பவங்களை தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினும் வழக்கு தொடர்ந்தனர். அதன் தொடர்ச்சியாகவே இந்த புதிய விதிகள் உருவாக்கப்பட்டன.

எதிர்ப்பு

யுஜிசி விதிகளுக்கு பெரும்பாலானோர் ஆதரவு தெரிவித்தனர். இருப்பினும், உயர் சாதி மாணவர்களும் மாணவர் அமைப்புகளும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த விதிமுறைகளை திரும்பப் பெற வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். மறுபுறம், உயர்கல்வி நிறுவனங்களில் சாதி பாகுபாடு தொடர்பான புகார்கள் உரிய முறையில் விசாரிக்கப்படுவதில்லை என்றும் குறிப்பாக எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி மாணவர்களின் உயிரிழப்பு சம்பவங்களை சுட்டிக்காட்டியும் பல பிற்படுத்தப்பட்ட சமூக அமைப்புகள் இந்த விதிகளுக்கு ஆதரவு தெரிவித்தன.

இந்த விதிகள் அறிவிக்கப்பட்ட உடனேயே மாணவர் அமைப்பினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அப்போது ஜனவரி இறுதியில் இந்த விதிகளுக்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.. இந்தச் சூழலில் தான் இந்த வழக்கு தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தனது நிலைப்பாட்டை மொத்தமாக மாற்றியிருந்தது.

மத்திய அரசு

மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, யுஜிசி விதிமுறைகள் மறுபரிசீலனை செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார். மத்திய அரசின் இந்த வாதம் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இத்தனை காலமாக புதிய விதிமுறைகளை அமல்படுத்துவதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வந்த நிலையில், இப்போது அதை மறுபரிசீலனை செய்வதாக நீதிமன்றம் கூறியிருக்கிறது.

மத்திய அரசு தனது நிலைப்பாட்டை மாற்றி கொள்ள சில காரணங்கள் இருக்கவே செய்கிறது. முதலில் யுஜிசி விதிகளுக்கு எதிராக கர்ணி சேனா உள்ளிட்ட சில உயர் சாதி மாணவர் அமைப்புகள் போராட்டங்களையும் நடத்தின. ஜெய்ப்பூரில் சவர்ண நியாய் பாதயாத்திரை உள்ளிட்ட போராட்டங்களும் நடைபெற்றன. அதேபோல பீகார் பாங்கிபூர் தொகுதியின் தோல்வியும் இதில் முக்கிய பங்காற்றி இருக்கும் என வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.

யோசிக்கும் பாஜக

30 ஆண்டுகளுக்கும் மேலாக பாஜக வசம் இருந்த பாங்கிபூர் தொகுதியில் பிரசாந்த் கிஷோர் வெற்றி பெற்றார். யுஜிசி விதிகளால் உயர் சாதியினர் மத்தியில் ஏற்பட்ட அதிருப்தி இந்த தோல்விக்கு ஒரு காரணமாக இருக்கலாம் என பாஜக கருதுவதாக கூறப்படுகிறது. பாங்கிபூர் தொகுதியில் சுமார் 35% உயர் சாதியினர் இருப்பதாக கூறப்படும் நிலையில், இந்த தேர்தல் முடிவு பாஜகவுக்குள் கவனம் பெற்றுள்ளது.

ஒருபுறம் ஓபிசி உள்ளிட்ட பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் ஆதரவை பெறும் நடவடிக்கையாக யுஜிசி விதிகள் பார்க்கப்பட்டது. ஆனால், அது உயர் சாதியினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதால் பாஜக இந்த விவகாரத்தில் யோசிக்க ஆரம்பித்துள்ளது. ஓபிசி ஆதரவை பெற.. ஏற்கனவே வலிமையாக இருக்கும் உயர் சாதியினர் ஆதரவை இழக்க வேண்டுமா என அரசியல் கணக்கை பாஜக போட ஆரம்பித்திருக்கிறது. இந்த விவகாரத்தில் வரும் காலத்தில் மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்கும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+