நிர்மலா அசத்தல்.. 400 புதிய ரயில்கள்.. 100 சரக்கு முனையங்கள்.. பட்ஜெட்டில் புது புது அதிரடி
நாட்டில் 400 புதிய ரயில்கள் இயக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது
டெல்லி: நாட்டில் 400 புதிய ரயில்கள் இயக்கப்படும் என்றும், 100 புதிய சரக்கு முனையங்கள் அமைக்கப்படும் என்றும் மத்திய நிதிநிலை அறிக்கையில் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்... அடுத்த 3 ஆண்டுகளில் 400 புதிய வந்தே பாரத் ரயில்கள் கொண்டுவரப்படும் என்று மத்திய பட்ஜெட் 2022-23-ல் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பாக பார்க்கப்படுகிறது.
இந்த முறை ரயில்வே துறைக்கு என்னென்ன சலுகைகள் கிடைக்கும் என்று பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது.. கடந்த ஆண்டில் ரயில்வே துறைக்கு ரூ.26,338 கோடி இழப்பு ஏற்பட்டிருந்தது.
கொரோனா பரவல் காரணமாக ஏற்பட்ட நெருக்கடி காலத்தில் வருவாய் இழப்புகளை சந்தித்த போதிலும், ரயில் கட்டணங்கள் உயர்த்தப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்றே நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்து வந்தனர்.

கட்டணம்
மேலும், ரயில்வே தன்னுடைய வருவாயை அதிகரிக்க கட்டணத்தை உயர்த்துவதைத் தவிர்த்து, வேறு விதமான நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலித்து வருவதாகவும் முன்னதாகவே செய்திகளும் வெளியாகின.. கோவிட் காலத்தில், ரயில்வே துறைக்கு சரக்கு ரயில்கள் மூலமாக பெரும்பாலான வருவாய் வந்தது என்றாலும், இந்த முறை பயணிகள் ரயில்களின் கட்டணைத்தை அதிகரிப்பதற்கு பதிலாக, பல்வேறு சரக்கு வழித்தடங்களைத் ஏற்படுத்த ரயில்வே மூலம் முயற்சி மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்பட்டது.

மத்திய அரசு
இப்படி எத்தனையோ எதிர்பார்ப்புகளுக்கு இடையில்தான் இன்றைய பட்ஜெட் ஆரம்பமானது.. 2022 - 23ஆம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்... இதில், அடுத்த 25 ஆண்டுகளுக்கு நாட்டின் பொருளாதார வளர்ச்சிப்பாதையை இலக்காகக் கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.. மேலும், தடுப்பூசி திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டதால் பொருளாதாரம் வளர்ச்சியடைய உதவியதாகவும் நிர்மலா சீதாராமன் தன்னுடைய உரையில் கூறினார்...

அறிக்கை
தொடர்ந்து மத்திய நிதிநிலை அறிக்கையில் நிர்மலா சீதாராமன் வெளியிட்டிருக்கும் முக்கிய அம்சங்கள் இவைகள்தான்: வரும் 2023ஆம் ஆண்டுக்குள் 2000 கி.மீ. தொலைவுக்கு ரயில்வே கட்டமைப்பு உருவாக்கப்படும்.. நாடு முழுவதும் 25,000 கி.மீ. தொலைவுக்கு நெடுஞ்சாலைகள் விரிவாக்கம் செய்யப்படும்... உள்ளூர் வணிகங்களை மேம்படுத்த ஒரு ரயில் நிலையம், ஒரு உற்பத்திப் பொருள் என்ற அடிப்படையில் திட்டங்கள் செயல்படுத்தப்படும். பல்வகை போக்குவரத்துகளை இணைக்கும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
Recommended Video

சரக்கு முனையங்கள்
வந்தே பாரத் வரிசையில் மேலும் 400 புதிய ரயில்கள் இயக்கப்படும். 100 சரக்கு முனையங்கள் ஏற்படுத்தப்படும். சரக்குப் போக்குவரத்தை எளிதாக்கும் வகையில் சாலை, ரயில் கப்பல் போக்குவரத்துகள் இணைக்கப்படும். மெட்ரோ ரயில் திட்டங்கள் புதிய வசதிகளுடன் மேம்படுத்தப்படும்... ரயில் நிலையங்களையும், நகர்ப்புற மெட்ரோ ரயில்களையும் இணைக்கும் பெரிய அளவில் திட்டம் உள்ளது.. வந்தே பாரத் திட்டத்தின் அடுத்த 3 ஆண்டுகளில் 400 புதிய ரயில்கள் நாடு முழுவதும் அறிமுகம் செய்யப்படும்" என்று அறிவித்துள்ளர் நிதியமைச்சர்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications