மத்திய பட்ஜெட் LIVE: ஏழை, எளிய மக்களுக்கான திட்டங்கள் இல்லை- மல்லிகார்ஜுன கார்கே

நாளை நிர்மலா சீதாராமன் மத்திய நிதிநிலை அறிக்கை 2023ஐ நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: புதிய வரிவிதிப்பு திட்டத்தில் ஆண்டு வருமானம் ரூ7 லட்சம் பெறுவோர் வருமான வரி செலுத்த தேவையில்லை என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார்.

 Union Budget 2023 LIVE News Updates, Expectations, Summary and Highlights in Tamil

4:26 PM
Feb 1, 2023
விவசாயிகள், இளைஞர் நலன் பற்றி ஏதும் இல்லை
4:26 PM
Feb 1, 2023
கர்நாடகாவுக்கு கொடுத்த நிதி தமிழ்நாட்டுக்கு ஏன் கொடுக்கவில்லை? விவசாயிகளை பாதுகாக்க பட்ஜெட்டில் எதுவும் இல்லை- திருச்சி சிவா எம்பி
3:40 PM
Feb 1, 2023
மாநில சட்டசபை தேர்தல்களுக்கான பட்ஜெட் இது; ஏழை எளிய மக்களுக்கான திட்டங்கள் எதுவும் பட்ஜெட்டில் இல்லை; வேலைவாய்ப்பு, 100 நாள் வேலை திட்டம் குறித்து எதுவுமே இல்லை- காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே
3:30 PM
Feb 1, 2023
ஏமாற்றமளிக்கும் பட்ஜெட்- திருப்பூர் பின்னலாடை உற்பத்தி, ஏற்றுமதியாளர்கள் சங்கம்
2:21 PM
Feb 1, 2023
நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள பட்ஜெட் சிறப்பான பட்ஜெட் - பிரதமர் மோடி. விவசாயிகள், சாமானிய மக்கள் இந்த பட்ஜெட் மூலம் பயனடைவார்கள் - மோடி. மகளிர் சுய உதவி குழுக்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது பாராட்ட தக்கது - மோடி. அனைவருக்கும் பலன் அளிக்கும் சிறப்பான பட்ஜெட் என பிரதமர் மோடி பாராட்டு
12:43 PM
Feb 1, 2023
பழைய வரிமுறையில் வரி விகிதங்களில் மாற்றம் இல்லை
பழைய வரிமுறையில் வரி விகிதங்களில் மாற்றம் இல்லை
தனிநபருக்கான வருமான வரி உச்சவரம்பு விலக்கு 2.5 லட்சம் ரூபாயிலிருந்து 3 லட்சமாக அதிகரிப்பு. புதிய வருமான வரி திட்டத்தின்கீழ் ரூ.7 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ள தனிநபருக்கு வருமான வரி இல்லை. ரூ. 3 லட்சம் வரை வரி இல்லை. ரூ. 3-6 லட்சம் வரை 5 சதவீதம் வரி. ரூ. 6-9 லட்சம் வரை 10 சதவீதம் வரி ரூ. 9-12 லட்சம் வரை 15 சதவீதம் வரி. ரூ. 12-15 லட்சம் வரை 20 சதவீதம் வரி. ரூ. 15 லட்சத்திற்கு மேல் 30 சதவீதம் வரி
12:42 PM
Feb 01,2023
வரி
நேரடி வரிகள்
வருமான வரி
ஒரு வருடத்தில் ரூ.15 லட்சத்திற்கு மேல் வருமானம் ஈட்டுபவர்களுக்கு 30% வரி விதிக்கப்படும்- நிதியமைச்சர்
12:40 PM
Feb 01,2023
வரி
நேரடி வரிகள்
புதிய வருமான வரி அடுக்குகள்
புதிய வரி முறையில் உள்ளவர்களுக்கு புதிய வருமான வரி அறிமுகம் ஆண்டு வருமானம் 0-3 லட்சம் இருந்தால் வரி இல்லை 3-6 லட்சமாக இருந்தால் 5% வருமான வரி 6-9 லட்சமாக இருந்தால் 10% வருமான வரி 9-12 லட்சமாக இருந்தால் 15% வருமான வரி 12-15 லட்சமாக இருந்தால் 20% வருமான வரி 15 லட்சத்திற்கு மேல் இருந்தால் 30% வருமான வரி
12:37 PM
Feb 1, 2023
ஆன்லைன் பணப்பரிமாற்ற வரம்பு அதிகரிப்பு
12:35 PM
Feb 01,2023
வரி
நேரடி வரிகள்
வருமான வரியில் மாற்றம்
புதிய வரி முறை பின்பற்றுவோருக்கான வருமான வரிச் சலுகை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
12:31 PM
Feb 1, 2023
மத்திய பட்ஜெட் உரையை நிறைவு செய்தார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
12:26 PM
Feb 1, 2023
ஆண்டு வருமானம் ரூ7 லட்சம் வரை பெறுவோருக்கு வருமான வரி இல்லை
12:26 PM
Feb 1, 2023
வருமான வரிக்கான உச்சவரம்பு ரூ2.5 லட்சத்தில் இருந்து ரூ 3 லட்சமாக உயர்வு
12:25 PM
Feb 1, 2023
ஆண்டு வருமானம் ரூ7 லட்சம் வரை இருந்தால் வருமான வரி இல்லை
12:25 PM
Feb 1, 2023
தனிநபர் வருமான வரி- 5 முக்கிய அறிவிப்புகள்
12:24 PM
Feb 1, 2023
ஒட்டுமொத்த சந்தைக்கடன் ரூ. 5.4 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது; உள்நாட்டு உற்பத்திக்கு ஊக்கமளிக்கவும், ஏற்றுமதியை ஊக்குவிக்கவும் மறைமுக வரிகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும்.
12:24 PM
Feb 1, 2023
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சிகரெட்டுகள் மீதான வரி உயர்வு. வருமான வரி படிவம் எளிமையாக்கப்படும்
12:20 PM
Feb 1, 2023
சைக்கிள், பொம்மைகளுக்கான இறக்குமதி வரி குறைப்பு. லித்தியம் பேட்டரி இறக்குமதி வரி குறைப்பு. டிவி பேனல்களுக்கான சுங்க வரி 2.5% குறைப்பு
12:19 PM
Feb 1, 2023
வெள்ளி மீதான சுங்க வரி உயர்வு- வெள்ளி பொருட்கள் விலை உயருகிறது
12:19 PM
Feb 1, 2023
சிகரெட்டுகள் விலை உயரும்- சிகரெட்டுகள் மீது கூடுதல் வரி விதிப்பு
12:17 PM
Feb 1, 2023
செல்போன், டிவிக்கள் உற்பத்திக்கான உதிரிபாகங்கள் மீதான சுங்க வரி குறைப்பு
12:17 PM
Feb 1, 2023
ஒருங்கிணைந்த வருமான வரி அறிக்கை தாக்கல் செய்யும் நடைமுறை ஏற்படுத்தப்படும்; அரசு முகமைகளில் அனைத்து டிஜிட்டல் நடைமுறைகளில் பான் அட்டை பொதுவான அடையாளமாக ஏற்கப்படும்.
12:16 PM
Feb 1, 2023
இளைஞர்களின் கனவுகளை நனவாக்கும் வகையில் புதிய கல்வி கொள்கையில் அம்ரித் நிதி திட்டம்; புதிய பழகுநர் திட்டத்தின்கீழ் 47 லட்சம் இளைஞர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு உதவித் தொகையுடன் கூடிய பயிற்சி
12:16 PM
Feb 1, 2023
பழைய வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்களை மாற்றுவதற்கு மாநிலங்களுக்கு ஆதரவு அளிக்கப்படும்
12:16 PM
Feb 1, 2023
கடலோரத்தில் உப்புத்தன்மை வாய்ந்த பகுதிகளில் அலையாத்தி காடுகளை மிஸ்டி என்ற பெயரில் வளர்க்க திட்டம்
12:15 PM
Feb 1, 2023
மின்சார பரிமாற்றத் துறைக்கு ரூ.35,000 கோடி நிதிஒதுக்கீடு
12:15 PM
Feb 1, 2023
கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் 500 புதிய திட்டங்களுக்கு அனுமதி
12:15 PM
Feb 1, 2023
10,000 உயிரி உள்ளீடு மையங்கள் ஏற்படுத்தப்படும்
12:12 PM
Feb 1, 2023
செல்போன் உதிரி பாகங்களுக்கான சுங்க வரி குறைப்பு
12:12 PM
Feb 1, 2023
நாட்டின் செல்போன் உற்பத்தி 5.8 கோடியில் இருந்து 31 கோடியாக அதிகரிப்பு
12:11 PM
Feb 01,2023
பட்ஜெட் ஒதுக்கீடு
முதியோர் வைப்பு தொகை வரம்பு
முதியோர் வைப்பு தொகை வரம்பு ரூ15 லட்சத்தில் இருந்து ரூ30 லட்சமாக உயர்வு
12:11 PM
Feb 1, 2023
பெண்கள் 7.5% வட்டியில் ரூ2 லட்சம் வரை சேமிக்க புதிய சேமிப்பு திட்டம்
12:11 PM
Feb 1, 2023
பசுமை எரிசக்தி மேம்பாட்டு திட்டங்களுக்கு ரூ35,000 கோடி ஒதுக்கீடு
12:10 PM
Feb 1, 2023
முதியோர் வைப்பு தொகை வரம்பு ரூ15 லட்சத்தில் இருந்து ரூ30 லட்சமாக உயர்வு
12:10 PM
Feb 01,2023
வரி
மறைமுக வரிகள்
பான் கார்டு
அரசு நிறுவனங்களின் அனைத்து டிஜிட்டல் அமைப்புகளுக்கும் பொதுவான ஆவணமாக பான் கார்டு பயன்படுத்தப்படும்.
12:05 PM
Feb 01,2023
பட்ஜெட் ஒதுக்கீடு
கல்வி
கல்வி
அடுத்த 3 ஆண்டுகளில் நாடு முழுக்க உள்ள 740 ஏகலைவா பள்ளிகளுக்கு 38,000 ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் நியமனம்
12:02 PM
Feb 01,2023
எது மலிவு.. எது காஸ்ட்லி?
கிரீன் எனர்ஜிக்கு முக்கியத்துவம்
அனைத்து துறைகளிலும் ஆற்றலை சரியாக பயன்படுத்த கிரீன் எரிபொருள், கிரீன் எனர்ஜி போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இது கார்பன் உமிழ்வைக் குறைப்பதுடன், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது- நிதியமைச்சர்
11:55 AM
Feb 01,2023
பட்ஜெட் ஒதுக்கீடு
ரயில்வே
ரயில்வே துறைக்கு சூப்பர் அறிவிப்பு
அடுத்த நிதியாண்டில் ரயில்வே துறையில் ரூ.2.40 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும்.
11:53 AM
Feb 01,2023
பட்ஜெட் ஒதுக்கீடு
பிரதமரின் ஆவாஸ் யோஜனா
பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டத்திற்கான செலவு 66% அதிகரித்து 79,000 கோடி ரூபாயாக உயர்த்தப்படுகிறது.
11:51 AM
Feb 01,2023
பட்ஜெட் ஒதுக்கீடு
பிரதமரின் மத்ஸ்ய சம்பதா யோஜனா
இந்த திட்டத்தில் ரூ. 6000 கோடி முதலீடு செய்யப்படும். மீனவர்கள், மீன் விற்பனையாளர்கள், சிறு குறு தொழில்முனைவோருக்கு இது பெரியளவில் உதவும்.
11:48 AM
Feb 01,2023
பட்ஜெட் ஒதுக்கீடு
மூலதன செலவு ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு
மூலதன செலவினம் தொடர்ச்சியாக 3வது ஆண்டாக 33% அதிகரித்து ரூ.10 லட்சம் கோடியாக உள்ளது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.3% ஆகும். இது 2019-20ல் செய்யப்பட்ட செலவினத்தை விட சுமார் 3 மடங்கு அதிகமாக இருக்கும்.
11:46 AM
Feb 01,2023
பட்ஜெட் ஒதுக்கீடு
புதிய நர்சிங் கல்லூரிகள்
2014க்கு பிறகு நாடு முழுக்க 157 நர்சிங் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், நாட்டில் கூடுதலாக 157 புதிய நர்சிங் கல்லூரிகள் தொடங்கப்படும்
11:44 AM
Feb 01,2023
பட்ஜெட் ஒதுக்கீடு
தனிநபர் வருமானம் உயர்வு
பிரதமர் மோடி ஆட்சியில் தனிநபர் வருமானம் ரூ1.97 லட்சமாக உயர்ந்துள்ளது.
11:43 AM
Feb 01,2023
பட்ஜெட் ஒதுக்கீடு
நிதிநிலை அறிக்கையில் சப்தரிஷி எனப்படும் 7 முன்னுரிமை திட்டங்கள்
1. உள்ளடக்கிய வளர்ச்சி 2. கடைநிலைக்கும் வளர்ச்சி 3. உள்கட்டமைப்பு & முதலீடு 4. திறனை வெளிக்கொணர்தல் 5. பசுமை வளர்ச்சி 6. இளைஞர் சக்தி 7. நிதித் துறை
11:34 AM
Feb 01,2023
பட்ஜெட் ஒதுக்கீடு
பிரதமரின் விஸ்வ கர்மா கௌஷல் சம்மான்
பாரம்பரிய கைவினை கலைஞர்களுக்கு உதவும் உதவித் தொகுப்பு உருவாக்கப்பட்டு, MSME உடன் ஒருங்கிணைக்கப்படும். இது கைவினை கலைஞர்களின் தயாரிப்புகளின் தரத்தை மேம்படுத்த உதவும்.
11:28 AM
Feb 01,2023
பட்ஜெட் ஒதுக்கீடு
விவசாயத்திற்கு முன்னுரிமை
இளம் தொழில் முனைவோர்கள் வேளாண் துறை சார்ந்த ஸ்டார்ட்அப்கள் தொடங்குவதை ஊக்குவிக்க தனி நிதி ஒதுக்கப்படும்.
11:25 AM
Feb 01,2023
பட்ஜெட் ஒதுக்கீடு
பொருளாதார வளர்ச்சிக்கான திட்டம்
வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புகளை அதிகப்படுத்தத் தேவையான திட்டங்களில் கவனம் செலுத்தப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+